JASTECA விருதுகள் 2025 இல் ‘Overall Winner’ எனும் பட்டத்தை பெற்று தேசிய தரநிலையை நிறுவிய Hemas Consumer Brands

இலங்கையின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று, மிக வேகமாக நுகரப்படும் நுகர்வுப் பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனமான Hemas Consumer Brands (HCB) (ஹேமாஸ் கன்ஸ்யூமர் பிராண்ட்ஸ்), JASTECA Awards 2025 நிகழ்வில் மிகவும் மதிப்புமிக்க “Overall Winner” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாராட்டானது, ஜப்பானிய 5S மற்றும் Kaizen நடைமுறைகளை திறம்பட தழுவிக்கொண்டதன் மூலம், செயற்பாட்டு ரீதியான விசேடத்துவத்தில் (lean management) ஒரு தேசிய தரநிலையைக் கொண்ட நிறுவனமாக HCB இன் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அனைத்து மட்டங்களிலுமான உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்ற மிகவும் போட்டி நிறைந்த இந்த களத்தில் தனித்து விளங்கும் HCB, அதன் ‘கீழிருந்து மேலான செயல்திறன் கலாசாரம்’ (bottom-up performance culture) மூலம், சிறந்த செயல்திறனை தொடர்ச்சியாக வழங்குவதற்காக பெருமை பெற்றுள்ளது.

ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சங்கத்தால் (Japan Sri Lanka Technical and Cultural Association) ஏற்பாடு செய்யப்படும் JASTECA விருதுகள், 1996 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பாட்டுக்கான விசேடத்துவத்தை அங்கீகரிக்கும் உச்ச நிலை விருதாக விளங்குகின்றது. தரம், உற்பத்தித்திறன், ஊழியர் ஈடுபாடு மற்றும் கூட்டு நிறுவன சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் ஜப்பானியக் கொள்கைகளை கொண்ட நிறுவனங்களை, இந்த விருதுகள் கௌரவிக்கின்றன.

ஜப்பானிய மற்றும் இலங்கை நிபுணர்களால் முன்னெடுக்கப்படும் வளாகத்திலுள்ள மற்றும் வளாகத்திற்கு வெளியேயான கணக்காய்வுகள் உள்ளிட்ட ஒரு கடுமையான மதிப்பீட்டுச் செயன்முறை மூலம் விருதுக்கான தெரிவுகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த மதிப்பீடுகள் ஒவ்வொரு நிறுவனத்தின் செயற்பாட்டு வலிமை மற்றும் அது உருவாக்கும் போட்டித்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றன.

Hemas Consumer Brands முகாமைத்துவப் பணிப்பாளர் சப்ரீனா யுசுபலி கருத்துத் தெரிவிக்கையில், “ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்துள்ள JASTECA 2025 இல், இலங்கையின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக, ‘Overall Winner’ ஆக தெரிவு செய்யப்படுவது என்பது ஒரு மகத்தான கௌரவமாகும். இந்த அங்கீகாரமானது, எமது மக்களின் பூரணத்துவத்தை தேடுகின்ற, அசைக்க முடியாத முயற்சி மற்றும் விரயங்களை நீக்குவதற்கான அர்ப்பணிப்பு மூலம் அடையப்பட்ட எமது செயற்பாட்டு விசேடத்துவத்தின் கொண்டாட்டமாகும். அத்துடன், மிக உயர்ந்த தரத்தில் இருப்பது மட்டுமன்றி, பொறுப்புடனும், நிலைபேறானதாகவும், திறமையாகவும் தயாரிக்கப்படும் பொருட்கள் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான எமது நோக்கத்தையும் இது வலுப்படுத்துகிறது” என்றார்

இது குறித்து Hemas Consumer Brands நிறுவனத்தின் உற்பத்திப் பணிப்பாளர் விராஜ் ஜயசூரிய தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரமானது, உலகத் தரம் வாய்ந்த ஜப்பானிய முகாமைத்துவ நடைமுறைகளின் அத்திவாரத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எமது லீன் பயணம் (lean journey) 5S கட்டமைப்புடன் ஆரம்பிக்கிறது. இது தரம், உற்பத்தித்திறன் மற்றும் சுறுசுறுப்பை ஊக்கத்துடன் முன்னோக்கி கொண்டு செலுத்தும் அதே வேளையில் ஒழுக்கம் மற்றும் ஊழியர் ஈடுபாட்டையும் ஏற்படுத்துகிறது. 5S இன் வலுவான அடித்தளமானது Kaizen இனால் பூர்த்தி செய்யப்படுகிறது. அதற்கமைய, எமது தத்துவமான தினசரி புத்தாக்கம் என்பது, ஒவ்வொரு குழும உறுப்பினருக்கும் தற்போதைய நிலையை சவாலுக்கு உட்படுத்தவும் தரநிலையைத் தொடர்ச்சியாக அதிகரிக்கவும் அதிகாரம் அளிக்கிறது.

பெறுமதிச் சங்கிலி முழுவதும் வீண் விரயங்களை அகற்றவும், பங்குதாரர்களுக்கு மதிப்பை உருவாக்கவுமான அசைக்க முடியாத முயற்சிகளைக் கொண்ட, ‘கீழிருந்து மேலான அணுகுமுறை’ மூலம் எமது பயணம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், எமது ஊழியர்கள் 20 முதல் 30 புத்தாக்கமான யோசனைகளை உருவாக்குகிறார்கள். இது உரிமைத்துவத்தை கொண்டுள்ளோம் எனும் ஆழமான உணர்வு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை பிரதிபலிக்கச் செய்கிறது. இந்த யோசனைகள் நுகர்வோருக்கு சிறந்த முறையில் சேவை செய்வதன் மூலம் நிறுவனத்தை முன்னோக்கித் கொண்டு செல்வது மாத்திரமல்லாமல், எமது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துகின்றன.” என்றார்.

JASTECA விருதுகள் 2025 இல் HCB இன் சாதனை, இலங்கைத் தொழில்துறைக் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இது ஊழியர்களால் இயக்கப்படும் புத்தாக்கத்துடன் கூடிய lean சிந்தனையின் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியை வெளிப்படுத்துகிறது.

Hemas Consumer Brands பற்றி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதை வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது அதன் நோக்கம் சார்ந்த வர்த்தக நாமங்களை இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர்களாக நிலைநிறுத்த உதவியுள்ளது. இலங்கை நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *