வாகனத் துறையில் முன்னோடியும், இலங்கையில் Mercedes-Benz இன் பிரத்தியேகமான அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தருமான DIMO நிறுவனமானது, உயர்ந்த நெறிமுறை தரநிலைகள் மற்றும் தேசிய விதிமுறைகளுக்கு இணங்கியவாறு, Mercedes-Benz EQ வகைகள் மூலம் ஆடம்பர வாகனச் சந்தையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது.
நிலைபேறான போக்குவரத்தில் முன்னணியில் உள்ள DIMO நிறுவனமானது, Mercedes-Benz EQA 350 4MATIC, EQE 350 4MATIC SUV, EQS 450+, Mercedes-AMG EQS 53 4MATIC ஆகிய வாகன மாதிரிகளை வெற்றிகரமாக இலங்கைக்கு இறக்குமதி செய்து, அறிமுகப்படுத்தி, விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், விரைவில் இறக்குமதி செய்யப்படவுள்ள Mercedes-Benz EQB 250, EQE 350+, EQS 450 4MATIC SUV மூலம், நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மத்தியில் மின்சார வாகன (EV) பிரிவில் முன்னோடியாக தனது நிலையை DIMO நிறுவனம் நிலைநிறுத்த முடியும். .
அத்துடன், Mercedes-Benz EQB 250, EQE 350+ மற்றும் EQS 450 4MATIC SUV ஆகியன சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், DIMO ஆனது இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மத்தியில் மின்சார வாகனத் துறையில் (EV) முன்னோடி எனும் வகையில் தனது நிலையை நிலைநிறுத்த முடிந்துள்ளது.
DIMO வழங்கும் Mercedes-Benz EQ வாகன வகைகளானது, இலங்கையின் வீதிகள் மற்றும் வானிலை நிலைமைகளுக்கு ஏற்றவாறு மிக நுணுக்கமாகவும், தனிப்பட்ட ரீதியில் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தனித்துவமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நேரடியாக Mercedes-Benz AG தொழிற்சாலையில் இருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு வாகனமும் Mercedes-Benz AG கொண்டுள்ள விரிவான உலகளாவிய உற்பத்தியாளர் உத்தரவாதத்துடன் வருகின்றன. அதே நேரத்தில், உயர் மின்னழுத்த (HV) மின்கல உத்தரவாதமானது, வாகன மாதிரியைப் பொறுத்து 8 முதல் 10 வருடங்கள் வரை வழங்கப்படுவதன் மூலம் “மன நிம்மதியை” உறுதி செய்கிறது. அத்துடன், இதன் EQ வகை வாகனங்கள் சிறந்த மின்கலத் திறனைக் கொண்டுள்ளன. ஒரே சார்ஜில் 400 முதல் 700 கிலோமீற்றர் வரை பயணிக்கும் வகையிலான ஈர்க்கக்கூடிய தூர எல்லையை அவை வழங்குகின்றன. இந்த HV மின்கலங்களை அப்புறப்படுத்தும் போது, சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையிலான கடுமையான வழிமுறைகள் அவசியமாகும். இலங்கையில் வாகனங்களை இலத்திரனியல் மயமாக்குவதில் முன்னோடி எனும் வகையிலும், எதிர்காலத்தை மையப்படுத்தி சிறந்து விளங்கும் நிறுவனம் எனும் வகையிலும் DIMO நிறுவனமானது, இவ்வாறான மின்கலங்களை பொறுப்பாக அகற்றுவதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலான மீற்சுழற்சி நடவடிக்கைக்காக, அவற்றின் சுழற்சிப் பாதையின் நிறைவில் இலத்திரனியல் வாகன மின்கலங்களை ஏற்றுமதி செய்யும் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் ஒன்றாக DIMO விளங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சூழல் ரீதியான கண்ணோட்டத்திற்கு அப்பால், நெறிமுறை ரீதியான வணிக நடைமுறைகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பானது, அதன் வெளிப்படையான விலை நிர்ணயம், உத்தியோகபூர்வ விலைப்பட்டியல், உரிய வகையில் அனைத்து வரிகளையும் கடைப்பிடித்தல் ஆகியவற்றில் தெளிவாகக் காணலாம். உரிய விதிமுறைகளுக்கு உட்பட்ட இறக்குமதியாளர் எனும் வகையில் DIMO நிறுவனமானது, தனது வாடிக்கையாளர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் பதிவு செய்தல் முதல் விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவை வரையில் தங்கு தடையற்ற அனுபவத்தை உறுதி செய்கிறது.
இலத்திரனியல் வாகனங்களின் விநியோகம் மற்றும் பராமரிப்புக்கு அப்பால், EQ சார்ஜர்கள் மற்றும் சூரிய மின்கல தொகுதிகளை நிறுவுதலையும் DIMO எளிதாக்குகிறது. முழுமையான இலத்திரனியல் சூழல்தொகுதியை உருவாக்குவதற்கான அனைத்து வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. Mercedes-Benz EQ வாகன வகைகளானது, DIMO நிறுவனத்தின் நிலைபேறான தன்மை 2030 நிகழ்ச்சி நிரலுக்கு அமைவானதாக விளங்குகிறது.
Mercedes-Benz EQ வாகனத்தின் பெருமைக்குரிய உரிமையாளரான வைத்தியர் சம்பத் ரொட்ரிகோ இது பற்றித் தெரிவிக்கையில், “வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை ரீதியான வணிக நடைமுறைகளில் DIMO நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பினால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். இதயபூர்வமான உயர்ந்த அனுபவத்தை வழங்குவதற்காக அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படுகிறது. இங்குள்ள உண்மை யாதெனில், DIMO நிறுவனமானது, இலங்கையில் உள்ள Mercedes-Benz வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு பொது விநியோகஸ்தர் என்பதோடு, இறக்குமதி செய்யப்பட்ட அசல் வாகனங்களை, கொள்வனவின் பின்னரான சிறந்த பராமரிப்புடன் வழங்குகிறது. இது, மனதிற்கு ஆறுதலளிக்கும் ஒரு விடயமாகும். DIMO நிறுவனம் மூலம் எதிர்காலத்திற்கு ஏற்ற, சொகுசான போக்குவரத்தை பெறுவதில் ஒரு அங்கமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.
DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே தெரிவிக்கையில், “DIMO நிறுவனமாகிய நாம், எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நம்பகமான, மேம்பட்ட, நிலைபேறான வாகனத் தீர்வுகளை வழங்க உறுதி பூண்டுள்ளோம். Mercedes-Benz EQ வகையானது, இலங்கையில் மின்சார வாகன போக்குவரத்தில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை பிரதிபலிப்பதோடு, இது மிகவும் புத்திசாலித்தனமான சாரதிகளின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட திருப்தியை வழங்குமென நாம் நம்புகிறோம்,” என்றார்.
ஒப்பிட முடியாத வாகன வகைகளை வழங்குவதற்கு அப்பால், ஈடு இணையற்ற விற்பனைக்குப் பின்னரான சேவையை வழங்க DIMO தன்னை அர்ப்பணித்துள்ளது. Mercedes-Benz தர நிபுணத்துவத்தின் ஆதரவுடன் மிகவும் திறமையான மற்றும் சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினர், Mercedes-Benz AG இனால் பரிந்துரைக்கப்பட்ட மென்பொருள் புதுப்பிப்புகள், உரிய கால இடைவெளியிலான சேவைகள், பிரத்தியேக Mercedes-Benz சேவைத் திட்டங்கள், வீதியில் 24 மணிநேர உதவி, உதவிகரமான பெறல் மற்றும் கையளித்தல் உள்ளிட்ட விரிவான சேவைகளை நிறுவனம் வழங்குகிறது. இங்கு ஒரு வருட பழுதுபார்ப்பு உத்தரவாதத்துடனான மன அமைதியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும் என்பதோடு, Mercedes-Benz இன் அசல் உதிரிப் பாகங்கள் மற்றும் Mercedes-Benz AG இனால் பரிந்துரைக்கப்பட்ட விசேட கருவிகள் மற்றும் உபகரணங்களின் பயன்பாடு ஆகியவற்றின் அனுபவங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு வலுவான இலத்திரனியல் வாகன சூழலொன்று (EV ecosystem) ஏற்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள DIMO நிறுவனமானது, ஒரு பல்வகை கூட்டு நிறுவனம் எனும் வகையில், வலுசக்தி பொறியியலில் அது கொண்டுள்ள நிபுணத்துவத்தின் மூலம் இலத்திரனியல் வாகன உரிமையாளர்களுக்கு இலங்கை முழுவதும், வசதியான மற்றும் அணுகக்கூடிய சார்ஜிங் வலையமைப்பை உருவாக்குவதற்கான உட்கட்டமைப்பை விரிவுபடுத்த மும்முரமாக செயற்பட்டு வருகிறது. DIMO நிறுவனத்தின் Mercedes-Benz வாகன உரிமையாளர்கள், எதிர்காலத்தில் வாகன இறக்குமதிகள் மீண்டும் அனுமதிக்கப்படும் போது, புதிய EQ வகைகளுக்கு தங்களது வாகனங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.
நெறிமுறை ரீதியான வணிக நடைமுறைகள், ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பின்னரான ஆதரவு மற்றும் வலுவான இலத்திரனியல் வாகன சூழல் தொகுதியொன்றை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் DIMO நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, நிலைபேறான எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் நம்பகமான ஒரு பங்காளியாக நிறுவனத்தை நிலைநிறுத்துகிறது.