MTU மற்றும் DIMO இணைந்து இலங்கை மற்றும் மாலைதீவின் கடல் சார் மற்றும் பொறியியல் துறைகளை வலுப்படுத்துகின்றன

உயர் திறன் கொண்ட வலுசக்தி கட்டமைப்புகள் தொடர்பான, உலக சந்தையில் முன்னணியில் உள்ள வர்த்தகநாமமான MTU, இலங்கை மற்றும் மாலைதீவிலுள்ள தமது உத்தியோகபூர்வ முகவரான DIMO உடன் இணைந்து, பிராந்திய ரீதியில் கடல் சார் மற்றும் பொறியியல் துறைகளை நவீன தீர்வுகள் மூலம் மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கின்றது.

கடந்த 30 வருடங்களில் இலங்கையிலும் மாலைதீவிலும் ஒரேயொரு உத்தியோகபூர்வ MTU விற்பனை முகவராக திகழும் DIMO நிறுவனத்திடமிருந்து, இந்த இரண்டு நாடுகளிலும் 400 இற்கும் அதிகமான MTU வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது எஞ்சின்களுக்கும் தரமான சேவைகளை வழங்கி வந்துள்ளது. இதன் மூலம் பல முக்கிய அடிப்படை வசதிகள் வலுப்பெற்றுள்ளன.

வாடிக்கையாளர்களை இத்தீர்வுகள் பற்றி தெளிவூட்டுவதற்காக அண்மையில் DIMO – MTU Technical Forum 2025 நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதில் இலங்கை கடற்படை, இலங்கை புகையிரத திணைக்களம், இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை பொலிஸ் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அத்துடன் MTU பிரதிநிதிகளும் DIMO தலைமைத்துவ அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

இதில் MTU Go! போன்ற புதிய தீர்வுகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து DIMO நிறுவனத்தின் கடல்சார் மற்றும் பொறியியல் துறை பொது முகாமையாளர் சத்துர குணசேகர கருத்து வெளியிடுகையில், “MTU Go! மூலமாக வாடிக்கையாளர்கள் தங்கள் MTU எஞ்சின் மற்றும் கட்டமைப்புத் தொகுதியை, IoT வழியாக மைய டிஜிட்டல் தளத்துடன் இணைக்க முடியும். இதன் மூலம் எஞ்சின் தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் காணுதல், செயல்திறனை அளவிடுதல், சேவை பராமரிப்பு கால அட்டவணைகள் மற்றும் கையடக்க சாதனங்களின் ஊடாக தகவல்களை பெறுதல் மற்றும் தரவுகள் அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கான முழுமையான அணுகலை இதன் மூலம் பெற முடிகிறது.” என்றார்.

உண்மையான எஞ்சின் பயன்பாடு மற்றும் செயல்திறன் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு சேவை பராமரிப்பு இடைவெளிகளை நீடிக்க முடியும் என தெரிவித்த அவர், செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்பு முறைகள் குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு விளக்கினார். “இதன் மூலம் தேவையற்ற செயலிழப்பு நேரம் மற்றும் செலவு ஆகியன குறைகிறது. எஞ்சினின் ஆயுளை அதிகரிக்கவும் இது பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

ஆராய்ச்சி நடவடிக்கைகளை அடிப்படையாக் கொண்ட சேவைகள் மற்றும் தயாரிப்பு மேம்பாடுகளுக்கான முதலீடுகளை மேற்கொள்ள DIMO மற்றும் MTU நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்ப உயர்தர தீர்வுகளை உருவாக்கவும், கூட்டாண்மையின் மூலம் முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் புதிய எஞ்சின் வகைகளை வடிவமைக்கவும் இந்த முதலீடுகள் ஊடாக அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.

இது குறித்து MTU நிறுவனத்தின் Asia பணிப்பாளர் (Parts & Logistics)  Gan Yien Yien கருத்துத் தெரிவிக்கையில், “MTU ValueCare அறிமுகமானது, சிறந்த சேவைக் காலம், நீண்ட ஆயுள் மற்றும் சிறந்த செலவுக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களின் சாதனங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரே சேவை தொகுப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சேவைகள் மாத்திரமல்லாது, MTU ValueCare மூலம் நாம் வாடிக்கையாளர்களுக்கு அதிக நம்பிக்கையையும் வழங்குகிறோம். உதிரிப்பாகங்கள் முதல் பராமரிப்பு சேவை மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி வரை ஒவ்வொரு அம்சமும் வாடிக்கையாளர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.” என்றார்.

இலங்கை கடற்படையின் கப்பல்கள், இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இராணுவ வாகனங்களின் எஞ்சின்கள், இலங்கை மின்சார சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றி முக்கிய தேசிய அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள், தாமரைக் கோபுரம் மற்றும் பல்வேறு தனியார் துறை திட்டங்கள் MTU மூலம் வலுவூட்டப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி, DIMO மூலம் மாலைதீவு கடற்படை பொலிஸ், அதிசொகுசு விடுமுறை விடுதிகள் மற்றும் 30 இற்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு MTU எஞ்சின்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதோடு, இந்து சமுத்திர பிராந்தியத்தின் கடல்சார் பொறியியல் துறையை வலுப்படுத்த முன்னணியில் நின்று செயற்பட்டு வருகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *