“Nissan Magnite SUV மூலம் Diamond Best Foods நிறுவனத்தை வலுவூட்டும் AMW”

இலங்கையில் Nissan வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனம், அண்மையில் Diamond Best Foods நிறுவனத்திற்கு Nissan Magnite (SUV) ரக வாகனங்களை கையளித்துள்ளது. இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், Diamond Best Foods நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை வலுவூட்டுவதற்கான ஆதரவு எட்டப்பட்டுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ வாகன கையளிப்பு விழாவில் இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். Diamond Best Foods நிறுவனத்தின் சார்பில் அதன் குழுமப் பணிப்பாளர்களான அலி பஹ்மி மற்றும் அஷ்ரப் பஹ்மி, பிரதம நிறைவேற்று அதிகாரி ஷம்மி கருணாரத்ன, சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் றிம்ஷான் பாறுக் மற்றும் தேசிய விற்பனை முகாமையாளர் பி.எல்.பி. பிரியதர்ஷன ஆகியோர் கலந்துகொண்டனர்.

AMW நிறுவனத்தின் சார்பில் அதன் விற்பனைப் பணிப்பாளர் பிரசன்ன டி சில்வா, Nissan விற்பனைப் பிரிவின் தலைவர் ஜகத் விஜேசேகர, சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் உதார குணசிங்க மற்றும் வலையமைப்பு தலைவர் ராம் கோமதிநாயகம் ஆகியோருடன் இரு நிறுவனங்களினதும் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தற்போது இலங்கையில் முன்னணியில் விற்பனையாகும் முதற்தர ‘Class A’ ரக SUV வாகனமாக அங்கீகாரம் பெற்றுள்ள Nissan Magnite ஆனது, தனிநபர்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ச்சியாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன் கம்பீரமான வடிவமைப்பு, எரிபொருள் வினைத்திறன், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுக்காக வழங்கப்பட்டுள்ள ‘Global NCAP Five Star’ அங்கீகாரம் மற்றும் அதன் பெறுமதிமிக்க பண்புகள் ஆகியன, நம்பகமான மற்றும் நவீன போக்குவரத்துத் தீர்வுகளைத் தேடும் நிறுவனங்களுக்கு இதுவொரு சிறந்த தெரிவாக அமைகின்றது.

இந்த Magnite வாகனங்களின் இணைவானது Diamond Best Foods நிறுவனத்தின் செயற்பாட்டு மற்றும் வணிக தேவைகளுக்குப் பக்கபலமாக அமையும். இது அதன் முகாமைத்துவ மற்றும் கள செயற்பாட்டு குழுக்களுக்கு அதிக வினைத்திறனை வழங்க உதவுவதுடன், நிறுவனத்தின் வாகனக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் மேலும் உறுதிப்படுத்துகின்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய AMW நிறுவன விற்பனை பணிப்பாளர் பிரசன்ன டி சில்வா, வணிக நிறுவனங்கள் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க நம்பகமான, செலவு குறைந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட வாகனங்களை அதிகளவில் நாடுவதால், இவ்வாறான நிறுவன வாகன வழங்கல் ஒப்பந்தங்கள் (Corporate fleet partnerships) வர்த்தக நாமத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பதாகக் குறிப்பிட்டார். இலங்கை வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் Nissan Magnite பெற்றுள்ள வலுவான சந்தை வரவேற்பு மற்றும் புகழானது, வணிக மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

Diamond Best Foods அதிகாரிகள் Nissan வர்த்தகநாமத்தின் மீதும், AMW நிறுவனத்தின் வலுவான விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பு மீதும் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறித்து இங்கு கருத்து வெளியிட்டனர். இதுவே தமது செயற்பாட்டுத் தேவைகளுக்காக Magnite வாகனங்களைத் தெரிவு செய்தமைக்கான முக்கிய காரணமாக அமைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த கூட்டாண்மையானது AMW நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் Nissan வாகனங்கள் மீது இலங்கை நிறுவனங்கள் கொண்டுள்ள வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிப்பதுடன், நாடளாவிய ரீதியிலான விற்பனை மற்றும் சேவை வலைப்பின்னலின் ஊடாக புத்தாக்கமான போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதற்கான இவ்வர்த்தக நாமத்தின் அர்ப்பணிப்பையும் இது மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *