OREL Cloud: இலங்கையின் ISO/IEC 27017 சான்றிதழைப் பெற்ற முதலாவது கிளவுட் சேவை வழங்குநராக வரலாற்றுச் சாதனை

இலங்கையின் டிஜிட்டல் சூழலுக்கான முக்கிய திருப்பமாக, OREL Cloud நிறுவனம் ISO/IEC 27017 சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதல் உள்நாட்டு கிளவுட் சேவை வழங்குநராக தனது பெயரை பதிவு செய்துள்ளமையை OREL IT நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் கிளவுட் தகவல் பாதுகாப்புக்கான Gold தரச் சான்றிதழாக கருதப்படும் இச்சான்றிதழ், ஒரு தொழில்நுட்ப வெற்றியை மட்டுமல்லாமல், பாதுகாப்பான, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் எதிர்காலத்தை நோக்கி தயார் செய்யப்பட்ட கிளவுட் முகாமைத்துவத்தின் மீதான OREL IT இன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

2024 ஆகஸ்டில் இந்த சான்றிதழைப் பெற்ற OREL Cloud, தன்னுடைய தளத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இன்றைய கிளவுட் நெறிமுறைகளால் இயக்கப்படும் உலகத்தில், பாதுகாப்பு என்பது ஒரு விருப்பமான அம்சமாக அல்லாது, அத்தியாவசியமாக கட்டமைக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது. ISO/IEC 27017 சான்றிதழ் மூலம், OREL Cloud ஒரு உலகளாவிய தரத்திலான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் செயல் நெறி வழிகாட்டல்களை வழங்குகிறது. இது வழங்குநருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே பொறுப்புகளை தெளிவாக வகைப்படுத்தி, மிகுந்த பாதுகாப்புடன் செயல்படக் கூடிய சூழலை உருவாக்குகிறது.

ISO/IEC 27017 என்பது பொதுவாக பரவலாக அறியப்படும் ISO/IEC 27001 சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பாக கிளவுட் சூழலுக்கே உரிய ஆபத்துகளை முகாமைத்துவம் செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. Virtualized மற்றும் multi-tenant setups, misconfigurations, co-location vulnerabilities, third-party dependencies போன்ற cloud-native அச்சுறுத்தல்களைத் தணித்தல் ஆகியன இதில் அடங்கும். வங்கிகள், சுகாதாரத் துறைகள் மற்றும் அரச துறைகள் போன்ற தரவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமான துறைகளுக்கு, இந்த சான்றிதழ் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான அடிப்படைகளுக்கு இணங்கும் வகையில் சாத்தியமான சூழலை உருவாக்குகிறது. இது டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளுக்கு நம்பகமான, பாதுகாப்பான அடித்தளத்தை வழங்கி, கட்டுப்பாட்டை சமரசம் செய்யாமல் நிறுவனங்களை அளவிட வலுவூட்டுகிறது.

மேலும், சர்வதேச கொள்முதல் அளவுருக்களை பூர்த்தி செய்ய வேண்டிய நிறுவனங்களுக்கு, இச்சான்றிதழ் ஒரு மிக முக்கியமான போட்டி அனுகூலத்தை வழங்குகிறது. உள்நாட்டிலேயே சர்வதேச தரப்படுத்தப்பட்ட தளத்தை பெறுவதன் மூலம், பாரிய சர்வதேச கிளவுட் நிறுவனங்களை சார்ந்திராமல், OREL Cloud மூலம் முன்னேற்றமும், எளிமையான கண்காணிப்பையும் பெற முடிகிறது. OREL Cloud இன் உட்கட்டமைப்பு இன்றைய தேவைகளுக்கு மட்டுமல்லாது, நாளைய அச்சுறுத்தல்களை தடுப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதுகாப்பு மேம்பாடுகள் தளத்தில் சேர்க்கப்பட்டு, அச்சுறுத்தலைத் தடுப்பதை உறுதி செய்கிறது.

இது பற்றி OREL Cloud இன் Chief Customer Officer பியூமி ரணசிங்க அவர்கள் தெரிவிக்கையில், “பாதுகாப்பு என்பது ஒழுங்குபடுத்தலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். இது நாம் வழங்கும் ஒவ்வொரு சேவைக்கும் நாம் வழங்கும் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. ISO/IEC 27017 பெறுவது, நமது கட்டுப்பாடுகளை சான்றளிப்பதற்கு அப்பால், நாம் முன்னோக்கி சிந்திக்கும் நிறுவனமாக இருப்பதையும் நிரூபிக்கிறது. கிளவுடினால் இயங்கும் பொருளாதாரத்தில் பாதுகாப்பான, அளவிடக்கூடிய வளர்ச்சியை செயற்படுத்துவதன் மூலம், நம்பிக்கையில் வேரூன்றிய, நீடித்து நிலைத்திருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட நீடித்த கூட்டாண்மைகளை உருவாக்கும் வழியாகும்.” என்றார்.

இந்நிலையில், PayMedia மற்றும் DirectPay நிறுவனங்களின் நிறுவுனரும் தலைவருமான, கனிஷ்க வீரமுண்ட அவர்கள் தெரிவிக்கையில், “இந்த மேம்பட்ட நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளனர். நாம் நிதி நிறுவனங்களுக்கான அப்ளிகேஷன் வழங்குநராக இருப்பதால், தரவுப் பாதுகாப்பு என்பது எம்மால் தவிர்க்க முடியாததாகும். OREL Cloud உடனான கூட்டாண்மை மூலம், உள்ளூர் தரத்துடன் சர்வதேச அளவிலான நம்பகத்தன்மை பெற்றிருக்கின்ற ஒரு தளத்தை பெறுகிறோம். தற்போது ISO/IEC 27017 மூலமாக இந்த நம்பிக்கையை மேலும் உயர்த்தியிருக்கிறோம்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இச்சான்றிதழ் மூலம், எமது வளர்ச்சியை வேகமாக செயற்படுத்தவும், ஒழுங்கமைப்புகளை சிக்கலின்றி பூர்த்தி செய்யவும் முடிகிறது. இது OREL Cloud கொண்டு வரும் உள்நாட்டுக்கு ஏற்ற நெகிழ்வுத்தன்மை மற்றும் பொறுப்புணர்வின் ஆதரவுடன் இணைந்து, இலங்கையின் மத்திய வங்கியின் வழிகாட்டல்கள் மற்றும் தேவைப்பாடுகளுக்கு இணங்க ஒரு உயர்மட்ட வழங்குநரின் உலகளாவிய சேவையை எம்மால் வழங்க முடிகிறது.” என்றார்.

இச்சான்றிதழைக் கடந்து, OREL IT நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தை வெறும் கட்டமைப்பாக மட்டும் பார்க்கவில்லை. இது சர்வதேச முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் ஒரு வலிமையான ஊக்கியாக பார்க்கப்படுகிறது. அரசாங்க நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மருத்துவ சேவைகள் போன்ற சமூக நலன் சார்ந்த துறைகளை OREL Cloud ஒருமைப்பாடு, ஈடுகொடுக்கும் தன்மை, நிலைபேறான தன்மையுடன் சேவையாற்றி வருகிறது.

பாதுகாப்புடன் மாற்றத்திற்குத் தயாராகும் வகையில், கட்டுப்பாட்டுடன் வளர்ந்து, தரம் குறையாமல் புத்தாக்கத்தை எதிர்கொள்ள விரும்பும் நிறுவனங்களை OREL Cloud தளத்தில் இணைய வரவேற்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *