
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை நுண்ணறிவு கொண்ட, பெற்றோரின் உதவியாளராக விளங்குகின்றது. இது குடும்ப வாழ்க்கையின் அன்றாட சவால்களை சமாளிப்பதற்காக, பெற்றோர் மற்றும் பாதுகாவல்ர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு மத்தியில், PI ஆனது இலங்கையிலேயே உருவாக்கப்பட்டு, இலங்கை பெற்றோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இது அனைத்து வயது குழந்தைகளையும் வளர்ப்பது குறித்த ஆலோசனைகளைப் பெறக்கூடிய, பாதுகாப்பான, பயனுள்ள, தவறாக நினைப்பதை தடுக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. www.chatpi.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக PI இனை உடனடியாக அணுக முடியும். வயது அடிப்படையிலான வழிகாட்டல், இரு மொழிகளிலான ஆதரவு (சிங்களம், ஆங்கிலம்), தகவல் பாதுகாப்பு தனியுரிமைக்கான முன்னுரிமை கொண்ட வடிவமைப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து, தனித்துவமான ஆறுதலளிக்க கூடிய அனுபவத்தை பெற்றோருக்கு வழங்குகிறது. இங்கு உரையாடல்கள் எதுவும் சேமிக்கப்படுவதில்லை என்பது பெற்றோர்கள் தங்களது கவலைகளை நம்பிக்கையுடன் பகிர்வதற்கான தைரியத்தை அளிக்கிறது.
Parental Intelligence (PI) இன் பின்புலத்தில் உள்ள குழுவான Bitrock, இரக்கம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இதனை உருவாக்கியுள்ளது. தங்களது தூரநோக்கை பகிர்ந்த இக்குழுவினர், “பெற்றோராக இருப்பது அழகானது. ஆனால் அது சில நேரங்களில் பெரும் சுமையாகவும் தனிமையானதாகவும் உணரப்படுகின்றது. அதனால்தான், PI இனை ஒரு கருவியாக மட்டுமல்லாமல், ஒவ்வொரு பெற்றோருக்கும் நம்பகமான, இரவு பகல் பாராது எப்போதும் உதவும் உதவியாளனாக உருவாக்கியுள்ளோம். இது உண்மையில் எமக்குள் காணப்படும் பெற்றோருக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தனர்
நண்பன் ஆலோசனை சொல்வது போல் தோன்றும் வகையிலான நட்பு மற்றும் உரையாடல் பாணியில் அமைந்த PI ஆனது, பாசத்துடன் கூடிய, நடைமுறை தீர்வுகளை வழங்குகிறது. குழந்தைகளின் உணவு தொடர்பான பிரச்சினைகள் முதல் தூக்கம் தொடர்பான சிக்கல்கள் வரை மற்றும் பாடசாலை விடயங்களை முகாமைத்துவம் செய்தல் முதல் பதின்ம வயதுடையவர்களின் மன அழுத்தத்தை சமாளிக்க உதவுதல் வரை பல்வேறு அம்சங்களில் இது வழிகாட்டுகிறது.
PI பெற்றோரின் அன்றாட வாழ்வின் நிஜமான விடயங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மையான தொடர்பை ஏற்படுத்தும் வகையில், இது சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலான உதவியையும், இலங்கைக் குடும்பங்கள், பாடசாலைகள் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற கலாசாரத்திற்கு பொருத்தமான ஆலோசனைகளையும் வழங்குகிறது. தகவல் பாதுகாப்பு தனியுரிமைக்கான முன்னுரிமை கொண்ட அணுகுமுறையின் அடிப்படையில் இங்கு முன்னெடுக்கப்படும் உரையாடல்கள் எதுவும் சேமிக்கப்படுவதில்லை. இதன் மூலம் மிக நுட்பமான விடயங்கள் தொடர்பிலும் பெற்றோர்கள் சுலபமாக கருத்துகளை கேட்க முடியும். புதிதாகப் பிறந்த சிசுக்கள் முதல் இளம் சிறார்கள் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ற பயனுள்ள, வயது அடிப்படையிலான ஆலோசனைகளை வழங்கும் இது பகல் 2 மணியோ, இரவு 2 மணியோ தினமும் 24 மணித்தியாலங்களும் (24/7) அணுகுவதற்கான வசதியுடன், எப்போதும் உதவி கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்ட, இப்பிரிவில் அமைந்த முதலாவது தளமாக PI இருப்பதன் காரணமாக, இதன் அறிமுகம் நாட்டுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். குடும்பங்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கலாசார நுட்ப உணர்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ள PI, தொழில்நுட்ப புத்தாக்கத்தையும் பரிவையும் சமூக மதிப்புகளையும் ஒருங்கிணைப்பதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
PI இன் அறிமுகத்துடன், “பெற்றோராகிய உங்கள் பயணத்தில் நீங்கள் ஒருபோதும் தனிமைப்படுத்தப்பட்டு விடவில்லை; ஏனெனில் PI எமக்குள் உள்ள ஒவ்வொரு பெற்றோருக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.” என, நாடு முழுவதுமுள்ள பெற்றோருக்கு Bitrock அழைப்பு விடுக்கிறது.
நுழையுங்கள்: www.chatpi.lk
End