Pulsar N160: இணையற்ற தொழில்நுட்பம்; ஒப்பிட முடியாத ஸ்டைல்

David Pieris Motor Company (Private) Limited (DPMC) நிறுவனத்தால் இலங்கையில் சந்தைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் Bajaj Pulsar N160, நாட்டின் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் கொண்ட விளையாட்டு சாகச (sports motorcycle) மோட்டார் சைக்கிளாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. புத்தாக்கமான செயல்திறன், கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் செலுத்துபவரை மையப்படுத்திய ஒப்பிட முடியாத அம்சங்களைக் கொண்ட Pulsar N160 ஆனது, ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் உலகத்தை மீள்வடிவமைக்கிறது. ஆசியா முதல் இலத்தீன் அமெரிக்கா வரை, இலங்கை உள்ளடங்கலாக, உலகளாவிய ரீதியில் 20 மில்லியன் Pulsar மோட்டார் சைக்கிள்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது பயணிக்கும் ஒவ்வொரு பாதையிலும் செயல்திறனையும் நம்பகத்தன்மையையும் மீள்வரையறை செய்கிறது.

Pulsar N160 மோட்டார் சைக்கிளை விசேடமாக்குவது, அதன் தொழில்நுட்ப மேம்பாடுகளின் பரந்த அம்சங்களாகும். இலங்கையில் 160cc பிரிவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட dual-channel Anti-lock Braking System மூலம் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியன புதிய தரத்திற்கு சென்றுள்ளன. இக்கட்டமைப்பு 300mm முன்புற டிஸ்க் மற்றும் 230mm பின்புற டிஸ்க் மூலம் உறுதிப்பபடுத்தப்பட்டுள்ளது. இது சிறந்த நிறுத்தும் சக்தியையும், திடீர் நிறுத்தங்கள், கணிக்க முடியாத போக்குவரத்து நிலைமைகள் அல்லது சவாலான வீதிகளை தன்னம்பிக்கையுடன் கையாள்வதை உறுதி செய்கிறது.

N160 Premium மாதிரியானது, Rain, Road, Off-Road என மூன்று தனித்துவமான பயண முறைமைகள் மூலம், பல்துறை பயன்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இந்த ஒவ்வொரு முறைமையும் எரிபொருள் விநியோக கட்டமைப்பு (throttle) ஒத்திசையும் ABS உட்புகும் நிலைகளைச் சீரமைத்து, வெவ்வேறு சூழலுக்கேற்ப சிறந்த பயண அனுபவத்தை வழங்குகிறது.

மோட்டார் சைக்கிளை செலுத்துபவருக்கு விரல் நுனியில் தற்போது தொழில்நுட்பங்கள் கிடைக்கிறது. புளுடூத் இணைப்புடன் கூடிய மேம்பட்ட முழுமையான டிஜிட்டல் கட்டமைப்புத் தொகுதி இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் உடனடியான மற்றும் பயண அடிப்படையிலான சராசரி எரிபொருள் திறன், எரிபொருள் நிரப்பும் வரை செல்லும் தூரம், பாதை வழி காட்டல் மற்றும் தொலைபேசி அழைப்புகள், அறிவிப்புகள் போன்ற விடயங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதில் மேற்கொள்ளும் இரவுப் பயணங்கள் முற்றிலும் மாறுபட்டதாகும். இரட்டை செயற்பாடுகளைக் கொண்ட LED projector ஹெட்லைட் வலுவான ஒளியை வழங்குகிறது. அதனுடன் இணைந்த ஒப்பிட முடியாத செயல்திறன் கொண்ட பகல் நேர மின்விளக்குகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் அமைந்த LED tail lamp தனித்துவமான பிரகாசத்தை கொண்டுள்ளது. இது மினுமினுப்பான இயக்கத்தை கொண்டுள்ளதோடு, தோற்றப்பாட்டையும் ஸ்டைலையும் மேம்படுத்துகிறது.

அதிர்வை கட்டுப்படுத்தும் சஸ்பென்ஷன் கட்டமைப்பானது, மேம்பட்ட வசதியையும் கட்டுப்பாட்டையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. N160 Premium மாதிரியானது 37mm தலைகீழ் முன்புற போர்க்களை (upside-down forks) கொண்டுள்ளது. இதன் அடிப்படை மாதிரியானது telescopic front சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. இரு வகைகளிலும் பின்புறம் அமைந்த, மாற்றம் செய்யக்கூடிய Nitrox monoshock ஒற்றை அதிர்ச்சி உறுஞ்சி பொருத்தப்பட்டுள்ளது. இது நகர்ப்புற வீதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் சமநிலைமிக்க பயணத்தை உறுதி செய்கிறது. மிருதுவாக வடிவமைக்கப்பட்ட, வசதியான, வழுக்காத இருவர் அமரும் இருக்கையானது, குறுகிய மற்றும் நீண்ட பயணங்களுக்கு பொருத்தமான வகையிலான உடல் இயக்கவியலுக்கு (ergonomics) ஏற்றதாக அமைந்துள்ளது.

இந்த மாதிரியில் நடைமுறைக்கு அவசியமான அம்சங்கள் மறக்காது இணைக்கப்பட்டுள்ளன! உள்ளிணைக்கப்பட்ட USB சார்ஜிங் வசதி, பயணிகள் பயணத்தில் இருக்கும் போதே தொலைபேசி தொடர்பை தொடர்ச்சியாக முன்னெடுக்க உதவுகிறது. 17 அங்குல அலோய் வீல்கள் பொருத்தப்பட்ட விரிவான டியூப்லெஸ் டயர்கள், சிறந்த பிடிப்பையும் ஓரப் பகுதிகளில் நிலையான தன்மையையும் மேம்படுத்துகின்றன. அதேநேரம், பின்புற டயரின் அகலத்தை அதிகரிக்க swingarm வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது செயல்திறனை மேலும் மேம்படுத்துகிறது.

அதன் விளையாட்டு சாகச கவர்ச்சியை வலுவூட்டும் வகையில், அடிப்பகுதியில் மைய புவியீர்ப்பு விசைப் பகுதியில் (centre of gravity) அமையும் வகையில் மூலோபாய ரீதியில் திட்டமிட்டு அதன் சைலன்சர் அமைக்கப்பட்டுள்ளது. இது சமநிலையையும், சிறந்த இயக்கத்தையும் பயணத்தின் நிலையான தன்மையையும் மேம்படுத்துகிறது. குறிப்பாக வேகமான திரும்பல்களிலும் திடீர் நிறுத்தங்களிலும் இதன் பலன் அதிகமாகும்.

Pulsar N160 இன் முக்கிய பாகமான, தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட எஞ்சின் அமைந்துள்ளது. இது பரந்த RPM இனை வழங்குகின்ற, rev range முழுவதும் வல்லமையுடன் செயற்படும் முறுக்கு விசையை (Torque) வழங்கி, சிறப்பு வாய்ந்த செயல்திறனை வழங்குகிறது. நெரிசலான நகர வீதிகளிலோ, திறந்த நெடுஞ்சாலைகளில் சொகுசாக பயணிக்கும் போதோ, மிருதுவான, ஈடுகொடுக்கும் ஆர்முடுக்கலையும் இடைவிடாத இணக்கத்தையும் பெறும் அனுபவத்தை பயணிகள் பெறலாம்.

இந்த மோட்டார் சைக்கிள், அதன் ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பை வலுப்படுத்தும் வகையில் இரட்டை வண்ண உலோகத் தோற்ற (dual-tone metallic) பூச்சு பூசப்பட்டதாக வெளிவருகின்றது. ஒன்றுக்கொன்று வித்தியாசமான நிறம் இணைந்ததாக வடிவமைக்கப்பட்ட இது, எரிபொருள் தாங்கி மற்றும் அதன் மூடிப் பகுதிகளை விசேடமான தோற்றத்தை காண்பிக்கிறது. இதனால் உடல் வடிவமைப்பானது நீளமானதாகவும், கவரும் தோற்றத்துடனும் காட்சியளிக்கிறது. இந்த மோட்டார் சைக்கிள்களை Pearl Metallic White (வெள்ளை), Racing Red (சிவப்பு), Polar Sky Blue (நீலம்), Brooklyn Black (கறுப்பு) ஆகிய நான்கு கவர்ச்சிகரமான நிறங்களில் தெரிவு செய்யலாம். .

ஏற்கனவே இலங்கை வீதிகளில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட Pulsar மோட்டார் சைக்கிள்கள் நம்பிக்கையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. வலு, பாதுகாப்பு, ஸ்டைல் மற்றும் அன்றாட தேவைக்கான வசதி ஆகியவற்றை நாடுவோருக்கான சிறந்த தெரிவாக N160 திகழ்கிறது. சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் பொறியியல் வடிவமைப்பு வழங்கப்பட்டு, முன்னணியில் நிற்கும் வகையில் உருவாக்கப்பட்ட Bajaj Pulsar N160, இலங்கையின் முதல் தர ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளாக தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து DPMC விற்பனை நிலையங்களிலும், 240 இற்கும் மேற்பட்ட விற்பனை முகவர்களிடமிருந்தும் Pulsar N160 இனை பெற்றுக் கொள்ளலாம். சிறந்த தரம் கொண்ட செயல்திறன், புத்தாக்கமான பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், அன்றாட தேவைகளுக்கான நடைமுறை ரீதியான வசதிகள் ஆகியவற்றை இது வழங்குவதோடு, DPMC இன் பரந்த விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பின் நம்பிக்கையையும் அது கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு: www.dpmco.com அல்லது 011 4700600

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *