StarCharge மின்சார வாகன தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய Hayleys Fentons Mobility

இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த பொறியியல் நிறுவனங்களில் ஒன்றான Hayleys Fentons நிருவனமானது, StarCharge மின்சார வாகன (EV) சார்ஜிங் தீர்வுகளை இலங்கைச் சந்தையில் தற்போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் பசுமை போக்குவரத்து கட்டமைப்பில் முக்கியமான முன்னேற்றமாகும்.

இந்த அறிமுக விழா Hayleys நிறுவனத்தின் கொழும்பிலுள்ள தலைமையகத்தில் இடம்பெற்றது. கடந்த ஆண்டு StarCharge Digital Energy Private Limited உடனான மூலோபாயகூட்டமைப்பின் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. StarCharge என்பது உலகளாவிய ரீதியில் முன்னணி EV சார்ஜிங் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிகழ்வின் மூலம் “Fentons Mobility” என்ற புதிய வர்த்தகநாமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது Hayleys குழுமத்தின் பசுமை போக்குவரத்து தீர்வுகளுக்கான பிரத்தியேக பிரிவாக செயற்படும். இந்நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக, Hayleys PLC நிறுவன தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே; Hayleys PLC குழும நிர்வாக இயக்குநர் சரத் கணேகொட; StarCharge Energy Pte. Ltd, StarCharge வெளிநாட்டு தெற்காசியா – வணிகத் தலைவர் சீனியர் துணைத் தலைவர் செங்லின் வூ; StarCharge India Pvt. Ltd நாட்டுத் தலைவர் சுனில் குமார் தஷோரா; Hayleys Fentons Limited நிறுவத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக; Hayleys Fentons Limited வணிக மேம்பாட்டு பணிப்பாளர் ரோஷானி தர்மரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மூலோபாய கூட்டமைப்பானது, இலங்கையின் நிலையான, பசுமையான போக்குவரத்துக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய படியாகும். இந்த நவீன EV சார்ஜிங் தீர்வுகள் வீடுகள், வணிக மையங்கள் மற்றும் ஒரே கூரையின் கீழான வாகன தொகுதிகள் (fleet) போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 30 நிமிடத்தில் 80% வரை சார்ஜ் செய்யக்கூடிய திறன் கொண்ட இது, EV சார்ஜிங் குறைபாடு எனும் பிரச்சினையை நேரடியாக சமாளிக்கிறது. இதன் மூலம் கட்டுப்படியான விலை மற்றும் தூய வலுச்சக்தி, நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள், காலநிலை மாற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட ஐ.நா.வின் முக்கிய நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு (SDG) இது பங்களிப்பை வழங்குகின்றது.

இந்நிகழ்வில் Hayleys PLC நிறுவன தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில்: “Hayleys என்பது இலங்கையின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனமாகும். 16 துறைகளில் இயங்கும் இந்நிறுவனம், வாழ்க்கையை மேம்படுத்தி, தேசிய முன்னேற்றத்துக்கு உறுதுணையாக செயற்பட்டு வருகின்றது. LMD 100 தரவரிசையின் படி Hayleys நிறுவனம் இலங்கையின் முதலாவது பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். StarCharge உடனான கூட்டணி மற்றும் ‘Fentons Mobility’ வர்த்தகநாமம், எமது ESG இலக்குகளை பிரதிபலிப்பதோடு, எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான எமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றன.” என்றார்.

Fentons Mobility ஆனது, 7kW முதல் 720kW வரையான சக்திவாய்ந்த சார்ஜிங் தீர்வுகளை வழங்குகிறது. இது வீடுகள், வர்த்தகநிலையங்கள், பொது மற்றும் ஒரே கூரையின் கீழான வாகன தொகுதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன:

  • Artemis (7, 11, 22 kW AC) – வீடுகள் மற்றும் சிறிய வணிகங்களுக்கானது
  • Saturn (22 kW AC) – பொது மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கானது
  • Venus (30 kW DC) – நடுத்தர வணிகங்களுக்கான வேகமான சார்ஜிங்
  • Jupiter (60 kW DC) – வாகன தொகுதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதிகளுக்கான அதிக வேக சார்ஜிங்

இந்த ஒவ்வொரு சாதனமும் பயனருக்கு எளிதாக உபயோகிக்கக் கூடியதாகவும், ‘Smart Grid’ உடன் ஒத்திசைவானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை தொலைநோக்கான கண்காணிப்பு, கணிப்பீடு, பாதுகாப்பான கட்டண நுழைவாயில்கள் உடன், சரியான நேர சார்ஜிங் பகுப்பாய்வு மற்றும் பாதுகாப்பான பணப்பரிமாற்ற வாயிலுடன் கூடிய பயன்பாட்டு செயலியுடன் அமையப் பற்றுள்ளன.

Hayleys Fentons இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக இது பற்றித் தெரிவிக்கையில்: “இலங்கைக்கே உரித்தான சரியான தீர்வை உருவாக்குவதில் எமது உறுதிப்பாட்டை இந்த உற்பத்திகளின் அறிமுகம் பிரதிபலிக்கின்றது. உலகளாவிய ரீதியில் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சார்ஜர்களை விநியோகித்துள்ள StarCharge ஆனது, Mercedes-Benz, Porsche போன்ற பிரபல வர்த்தகநாமங்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இத்தகையை தொழில்நுட்பத்தை நாம் தற்போது இலங்கைக்கும் கொண்டு வந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.” என்றார்.

StarCharge இன் உற்பத்தி மையங்கள் சீனா, வியட்நாம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுவதால், தொடர்ச்சியான மற்றும் பரந்த அளவிலான தேவை காணப்படும் சந்தைகளுக்கான விநியோகத்திற்கு தயாராக உள்ளது. இந்த சார்ஜர்கள், தொலைநிலை கண்டறிதல் மற்றும் மாறுபட்ட கொள்திறம் முகாமைத்துவத்துடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட, ஸ்மார்ட்-கிரிட் இணக்கமான கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் அவை உள்நாட்டு வலுசக்தி சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைகின்றன.

StarCharge India Pvt. Ltd நாட்டுத் தலைவர் சுனில் குமார் தஷோரா இங்கு கருத்து வெளியிடுகையில்: “இலங்கையில் Hayleys Fentons இன் பரந்த அனுபவமும், நம்பிக்கையும், எமது உலகத் தரமான EV சார்ஜிங் உற்பத்தித் திறனும் சேர்ந்து இது இலங்கையின் EV எதிர்காலத்துக்கான வலுவான அடித்தளமாக அமையும். எமது EV சார்ஜர்கள், உள்நாட்டு மின் விநியோக கட்டமைப்புகளுடன் எளிதாக இணைக்கப்படும் வகையில், அளவுக்கேற்ப விரிவுபடுத்தக்கூடிய அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. StarCharge மூலம், சாரதிகளால் தமது மின்சார வாகனங்களை ஒரு சில நிமிடங்களில் சார்ஜ் செய்து, தமது அன்றாட நடவடிக்கைகளை இலகுவாகத் தொடர முடியும்.”

Hayleys Fentons இன் வணிக மேம்பாட்டு பணிப்பாளர் ரோஷானி தர்மரத்ன இங்கு தெரிவிக்கையில்: “பசுமையான போக்குவரத்துக்கான தேவை வேகமாக வளர்ந்துவரும் நிலையில், மாறும் சந்தைக்கேற்ப இயங்கும் அடித்தளங்கள், தொழில்நுட்ப கூட்டிணைப்புகள் மற்றும் தரவுவழி தீர்வுகள் மூலமாக இலங்கை வாகன தொகுதி கட்டமைப்பை புத்தாக்கத்திற்கு உட்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்துகின்றன. இது மின்சார வாகன (EV) பயனாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு புதிய தொடக்கத்திற்கான மிகுந்த உற்சாகம் தரும் வாய்ப்பாகும். StarCharge என்பது முழுமையான ஒரு சூழல் கட்டமைப்பாகும். பயனர்களுக்கு இது நேரத்தை மீதப்படுத்துவதோடு, வாகனத்தை பாதுகாத்து, இடைவிடாத வகையில் வசதியை வழங்குகிறது. அத்துடன், விரைவாக வளர்ந்து வரும் இந்த சந்தை துறையில் ஒரு முதலீட்டுத் திறனுடன் கூடிய ஒரு முன்னோடி வாய்ப்பை StarCharge முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.” என்றார்.

EV சார்ஜிங் கட்டமைப்புகளை வீடு, அலுவலகம் அல்லது வணிக பயன்பாட்டிற்கு நிறுவ ஆர்வமுள்ளவர்கள் www.hayleysfentons.com இணையதளத்துக்கு அல்லது 0112 102 102 எனும் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *