Season 01 நிகழ்ச்சியின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Second Season – Queen of the World Sri Lanka 2.0 போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதில் Queen of the World Sri Lanka (QOTW) பெருமிதம் அடைகிறது.
உள்ளீர்த்தல் மற்றும் வலுவூட்டுதல் ஆகிய தமது முக்கிய மதிப்பீடுகளைக் கட்டியெழுப்வுவதன் மூலம், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கைப் பெண்களிடமிருந்தும் Queen of the World Sri Lanka 2.0 விண்ணப்பங்களை கோருகிறது. இப்போட்டியானது ஒவ்வொரு பெண்ணும் தனது திறமை, கருணை, அசைக்க முடியாத மனப்பான்மையை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளத்தை உறுதி செய்யும் வகையில், Miss Category: (18-29 வயது, திருமணமாகாத), Ms. Category: (30+ வயது, திருமணமாகாத), Mrs. Category: (திருமணமான), Elite Category: (50+ வயது, திருமணமான, திருமணமாகாத, பெண்களின் கருணை, அழகு, ஞானத்தை கொண்டாடுதல்) ஆகிய சிறப்பு வாய்ந்த நான்கு தனித்தனி பிரிவுகளை கொண்டுள்ளது.
பாரம்பரிய போட்டி வடிவத்தை தாண்டி, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தனக்குள் உள்ள திறமையை கண்டுபிடித்தல் அம்சங்களை வளர்க்கின்றதும், மாற்றத்தை ஏற்படுத்துகின்றதுமான அனுபவத்தை Queen of the World Sri Lanka 2.0 வழங்குகிறது. சமூகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன், உணர்ச்சிமிக்க, வெளிப்படையான, கடின உழைப்பாளிகளான பெண்களை இந்நிகழ்வு தேடுகிறது. அவர்கள் ஒரு மனிதாபிமானத் தலைவராகவோ, ஒரு சமூகவாதியாகவோ அல்லது அவர்களது துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களாகவோ இருக்கலாம். அவர்களது குரலுக்கு வலிமை வழங்கவும் ஏனையவர்களை வலுவூட்டவுமான ஒரு தளத்தை Queen of the World Sri Lanka 2.0 வழங்குகிறது.
Mrs. Elite Sri Lanka 2023 பட்டம் வென்ற துஷாரி ஜயகொடியின் முக்கிய சாதனைகள், Queen of the World Sri Lanka நிகழ்வின் மாற்றத்திற்கான சக்திக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. அவர் சர்வதேச அரங்கில் இலங்கையை சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், எண்ணிலடங்கா இலங்கைப் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் Director Queen எனும் பெருமைக்குரிய பட்டத்தையும் பெற்றார்.
அனைத்து இலங்கைப் பெண்களையும் சமூகக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து, அவர்களின் தனித்துவமான பலங்களைத் அவர்கள் தழுவுவதற்கு Queen of the World Sri Lanka 2.0 ஊக்குவிக்கிறது. வயது என்பது வெறுமனே ஒரு இலக்கம் என்பதோடு, உங்கள் கதையை திருத்தி எழுதவும், உங்களை நீங்கள் கண்டுபிடிக்கவும், வலுவாக்கிக் கொள்ளவுமான பயணத்தைத் ஆரம்பிக்கவும் இது உங்களுக்கு ஒரு வாய்ப்பாகும்.
Queen Of the World Sri Lanka இன் தேசிய பணிப்பாளரும், NS Beauty Globe (Private) Limited இன் நிறுவுனரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நதீகா செனவிரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “Queen of the World நிகழ்வின் மாற்றத்திற்கான சக்தியை நேரடியாகப் பார்த்தவர் எனும் வகையிலும், அதன் பிரதிநிதியாகவும் சர்வதேச நடுவர்கள் உறுப்பினர் எனும் வகையிலும், இது நம்பமுடியாத அளவிலான வெகுமதிகளை அளித்துள்ளது. அடுத்த இலங்கை ராணியை நாம் தீவிரமாகத் தேடி வருகிறோம். தனது அழகால் அவர் உலகை வசீகரிப்பதோடு மட்டுமல்லாமல், தனக்குள்ள ஆர்வத்தின் காரணமாக தனக்கு கிடைத்த மேடையை அவர் பயன்படுத்திக் கொள்வார். உலக அரங்கில் உங்களுக்குரிய சரியான இடத்தைப் பிடிக்க நீங்கள் தயாராக இருந்தால், விண்ணப்பிக்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.” என்றார்.
Queen of the World Sri Lanka 2.0 இற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன! ஒன்லைனில் விண்ணப்பிப்பதற்கு www.qotwsrilanka.com தளத்தைப் பார்வையிடவும். இதன் மூலம் அடுத்த Queen of the World Sri Lanka ஆவதற்கான உங்கள் பயணத்தை ஆரம்பியுங்கள். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, 0702022427 எனும் எமது உடனடி தொலைபேசி இலக்கம் ஊடாக அழைத்து அல்லது WhatsApp மூலம் பதிவு செய்து கொள்ளவும்.
END