அமானா தகாஃபுல் காப்புறுதி, 23% வருமான வளர்ச்சி மற்றும் 13% குழும இலாப அதிகரிப்புடன் 2021 இனை நிறைவு செய்துள்ளது

இலங்கையில் இயங்கும் ஒரு முழுமையான காப்புறுதி நிறுவனமான அமானா தகாஃபுல் பிஎல்சி (ATI), 2021 ஆம் ஆண்டில் கொவிட் தொற்று உள்ளிட்ட ஏனைய பொருளாதார அழுத்தங்களை துணிச்சலாக எதிர்கொண்டிருந்தது. அந்த வகையில், நிறுவனம் அதன் குழும விற்பனை வருமானத்தில் 23% வளர்ச்சி மற்றும் ஏனைய வருமானத்திற்கு முன்பாக குழும நிகர இலாபத்தில் 13% உயர்ச்சியுடன் 2021 ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.

குழுமத்தின் கடந்த வருட செயற்பாடுகள் தொடர்பில், அமானா தகாஃபுல் காப்புறுதி முகாமைத்துவ பணிப்பாளர் ஹஸன் காசிம் கருத்துத் தெரிவிக்கையில், “எந்தவொரு காப்புறுதி வர்த்தகநாமத்திற்கும் கடின நிலையிலிருந்தான மீளெழுச்சி அவசியமாகும். அந்த வகையில், அமானா தகாஃபுல் காப்புறுதியும் (Amana Takaful Insurance – ATI) இதற்கு விதிவிலக்கல்ல. ATI யின் 2021 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த வருடாந்த செயற்றிறன் ஆனது, நான்காவது காலாண்டில் சாதனை இலக்கத்தின் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது. எமது சமீபத்திய எதிர்பார்ப்பு அறிக்கைகளின் அடிப்படையில், ஏனைய வருமானத்திற்கு முன்பாக ரூ. 250.34 மில்லியனாக வருடாந்த குழும நிகர இலாபமானது 13% அதிகரிப்புடன் ATI உறுதிசெய்துள்ளது. அதே வருடத்தில், ATI இன் மொத்த வருடாந்த குழும பங்குடைமையானது 13% இனால் உயர்ந்துள்ளது. இது 2020 இல் பதிவான ரூ. 2.09 பில்லியனில் இருந்து 2021 இல் ரூ. 2.36 பில்லியனாக உயர்வடைந்துள்ளது. ஒரு குழுமமாக நாம் எமது செயன்முறைகளை மேம்படுத்தியுள்ளோம். இதன் விளைவாக மேம்படுத்தப்பட்ட காப்புறுதி செலுத்தல் தீர்வு செயன்முறையை மேற்கொண்டு, ரூ. 1.94 பில்லியன் பெறுமதியான காப்புறுதி கோரல்கள் செலுத்தப்பட்டுள்ளன” என்றார்.

கடந்த வருடத்தின் 4ஆவது காலாண்டில் மாத்திரம், நிறுவனம் அதன் (காலாண்டு) ஏனைய வருமானத்திற்கு முன்பாக குழும நிகர இலாபத்தில் 132% வளர்ச்சியின் மூலம் அதனை இரட்டிப்பாக்கியுள்ளது. சமீபத்திய 4ஆவது காலாண்டு முடிவுகளின் அடிப்படையில், முதலாவது காலாண்டு தொடக்கம் 3ஆவது காலாண்டு வரை, அது சாதகமான போக்குடன் தொடர்ச்சியாக அதனை பேணி வந்துள்ளமையை General Insurance பிரிவிலும் காண முடிகின்றது.

General Insurance செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதம நிறைவேற்று அதிகாரி ஷெஹான் பைசல், “வளர்ச்சியின் அடிப்படையில் பார்ப்போமானால், 2021ஆம் ஆண்டில் இலங்கையின் காப்புறுதித் துறையில் சிறந்த செயற்பாட்டு நிறுவனங்களில் ஒன்றாக, அமானா பொதுக் காப்புறுதி (Amana General) விளங்குகின்றது. General Insurance நிறுவனமாக, 2021 இல் 19% ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சியை அது அடைந்துள்ளது. அமானா தகாஃபுல் பொது காப்புறுதி ஆனது, அதன் திறனை வெளிப்படுத்தும் வகையில், அதன் அனைத்து வளர்ச்சி தொடர்பான புள்ளிவிபரங்களும், தொழில்துறையிலுள்ளவர்களின் சராசரியை விட கணிசமான அளவு உயர்வாக அடைந்துள்ளதை காண்பிக்கின்றன. அத்துடன், 2021ஆம் ஆண்டில், பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச விருதுகள் மூலம் எமது வளர்ச்சி விகிதங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த வகையில் நாம் இத்தருணத்தில், எமது கூட்டாளர்கள், எமது ஊழியர்கள், பங்குதாரர்கள் குறிப்பாக எமது வாடிக்கையாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

அமானா தகாஃபுல் காப்புறுதி பற்றி:

அமானா தகாஃபுல் காப்புறுதியானது, இலங்கையின் காப்புறுதித் துறையில் (தகாஃபுல்) தனித்துவமான கருத்தாக்கத்தின் முன்னோடியாக அமைந்துள்ளது. அது வாடிக்கையாளர்களை மையப்படுத்தியதும் நெறிமுறை நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதுடன், இலங்கையில் இன்று முழுமையான காப்புறுதி நிறுவனமாக அது மாறியுள்ளது. அமானா தகாஃபுல் காப்புறுதியானது, 1999 இல் ஒரு பொது நிறுவனமாக கூட்டிணைக்கப்பட்டதோடு, 2006ஆம் ஆண்டு முதல் கொழும்பு பங்குச் சந்தையில் அது பட்டியலிடப்பட்டுள்ளது. அமானா தகாஃபுல் காப்புறுதியானது, இலங்கை முழுவதும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 35 இற்கும் அதிக கிளைகள் மூலம் அதன் இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. ISO 9001 அங்கீகாரம் பெற்ற அமைப்பான அமானா தகாஃபுல் காப்புறுதியானது, 2005ஆம் ஆண்டு முதல் மாலைதீவில் அதன் வெளிநாட்டு இருப்பை பேணி வருகிறது. அத்துடன் அது ஒரு சுதந்திர மக்கள் காப்புறுதி நிறுவனம் (PLC) ஆக கூட்டிணைக்கப்பட்டு, 2011 இல் மாலைதீவு பங்குச் சந்தையில் (MSE) பட்டியலிடப்பட்டுள்ளது. அமானா தகாஃபுல் காப்புறுதியானது முழு அளவிலான ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதித் தீர்வுகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒட்டுமொத்த சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட சுகாதார காப்புறுதிக் கொள்கைகளை வழங்குகிறது.

#ENDS#

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *