ஆடம்பரமான மேம்படுத்தலை விரும்பும் வாகன உரிமையாளர்களின் மன அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் DIMO CERTIFIED

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டு உரிமையாளர்களைக் கொண்ட சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, அதன் பதிவு செய்யப்பட்ட வாகன விற்பனைப் பிரிவான ‘DIMO CERTIFIED’ மூலம் விரைவான, இடையூறற்ற, நம்பகமான சேவையை வழங்குகிறது.

2019 ஆம் ஆண்டில் DIMO CERTIFIED மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்குள் பதிவுசெய்யப்பட்ட, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, நன்கு பராமரிக்கப்பட்ட சொகுசு ஐரோப்பிய வாகன வகைகளை வழங்குவதன் மூலம், Mercedes-Benz மற்றும் Jeep மாதிரிகளுக்கு அப்பால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் வகைகளை ஒரே கூரையின் கீழ் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

தனது 80 வருட வரலாற்றின் அடிப்படையில், அனைத்து வாகனங்களுக்கும் வரையறையற்ற மைலேஜுடன், குறைந்தபட்சம் ஒரு வருட உத்தரவாதத்துடன், வாகனத் துறையில் நிபுணத்துவத்தின் இணையற்ற நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை DIMO வழங்குகிறது. DIMO CERTIFIED இனால் தெரிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களும், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நாளிலிருந்து, துல்லியமான சேவை மற்றும் பராமரிப்புடன் உண்மையான மைலேஜைப் அறிவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. DIMO CERTIFIED யிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் வாகனங்கள், மீள் விற்பனைக்காக கொள்வனவு செய்யப்படும்போது மேற்கொள்ளப்படும் விரிவான சரிபார்ப்புகளின் காரணமாக, அவற்றிற்கு உயர்ந்த மீள் விற்பனை பெறுமதி உறுதிசெய்யப்பட்டு, அதன்பின் தரமான ‘புதிது போன்ற நல்லது’ எனும் மட்டத்திற்கு புதுப்பிக்கப்படும். புதிதாக கொள்வனவு செய்பவர் எதிர்காலத்தில் ஏதாவது ஒரு கட்டத்தில் வாகனத்தை விற்கும் பட்சத்தில், DIMO CERTIFIED உத்தரவாதத்துடன் மீண்டும் கொள்வனவு செய்யும் வசதியையும் நிறுவனம் வழங்குகிறது.

இதற்காக இலங்கையின் சில முன்னணி நிதி நிறுவனங்களின் கவர்ச்சிகரமான தனிப்பட்ட ஒப்பந்தத் திட்டங்களை, குறைந்த வட்டி விகிதங்களுடன் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம், அங்கு அவர்கள் புதிய சொகுசு ஐரோப்பிய வாகனத்தின் 30% இனை மாத்திரம் ஆரம்ப கட்டணமாக செலுத்துவதன் மூலம் வாகனத்தை செலுத்திச் செல்லலாம். குத்தகைக் காலம் முடிவதற்குள் கொள்வனவு செய்பவர் மற்றுமொரு வாகனத்திற்கு மாற முடிவு செய்தால், மீதித் தொகையை DIMO உடனடியாகச் செலுத்தி, அவர்கள் விரும்பும் மற்றொரு வாகனத்திற்கு மாறிக் கொள்ளும் வாய்ப்பையும் நிறுவனம் வழங்குகின்றது.

மிகவும் நம்பகமான DIMO 24-மணி நேர வீதி வழி உதவியானது (Roadside Assistance), வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு ‘மன அமைதியை’ வழங்குகிறது, ஏனெனில் அரிதான வேளையின் போது எதிர்கொள்ளும் வாகன பிரச்சினைகளின் போது ஒரே தொலைபேசி அழைப்பில் நிபுணர்களின் உதவியைப் பெற முடியும்.

DIMO வின் DIMO CERTIFIED ஏற்கனவே பயன்படுத்திய வாகனப் பிரிவின் பொது முகாமையாளர் தரங்க குணவர்தன இது தொடர்பில் தெரிவிக்கையில், “எமது DIMO CERTIFIED சேவையின் மூலம் ஏற்கனவே பயன்படுத்திய வாகனங்களின் வணிகம் ஒரு புதிய நிலைக்கு வெற்றிகரமாக உயர்ந்துள்ளது. வாகன விற்பனைத் துறையின் அளவுகோலை நிறுவும் வகையில், பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களை இணைத்துள்ளதன் மூலம் எமது சேவைகளை நாம் மேம்படுத்தியுள்ளோம். Mercedes-Benz, Jeep அல்லது வேறு ஏதேனும் சொகுசு ஐரோப்பிய வாகனத்தை வைத்திருக்க வேண்டுமெனும் விருப்பத்தை கொண்டுள்ள நீங்கள் வேறு எங்கும் உங்கள் கவனத்தை செலுத்த வேண்டியதில்லை.” என்றார்.

விசேட சலுகைகளுடன் DIMO CERTIFIED இல் கிடைக்கும் அனைத்து வாகனங்களும் www.carsatdimo.lk இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் வாகனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு அனைத்து முக்கிய விபரங்களையும் அணுகுவதற்கான இலகுவான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எமது அபிமான வாடிக்கையாளர்களுக்கு விசேட வாகன மாற்றீட்டு கொள்வனவு வசதிகள் வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு வாகன கொள்வனவின் போது சிறந்த விலை உறுதியளிக்கப்படுகின்றது. மிகவும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களால் சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்கப்படுவதால், DIMO CERTIFIED வாடிக்கையாளர்கள், தங்கள் சொகுசு ஐரோப்பிய வாகனத்துடன் தொந்தரவு இல்லாத அனுபவத்தை பெற முடியும். எமது இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தயாரிப்பு அல்லது சலுகைகள் தொடர்பிலும் அறிந்து கொள்ள வாடிக்கையாளர்கள் 0771449797 எனும் பிரத்தியேக WhatsApp இலக்கத்தின் ஊடாக, நேரடியாக விற்பனை ஆலோசகரை தொடர்பு கொள்ள முடியும்.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *