ஆரம்பகால Etisalat 072 சந்தாதாரர்கள் தங்கள் சிம் அட்டைகளை காலாவதியாகும் முன் மேம்படுத்த வேண்டும்

தற்போது HUTCH வலையமைப்பில் உள்ள ஆரம்பகால Etisalat 072 வாடிக்கையாளர்கள், தங்களது தற்போதைய சிம் அட்டைகளை கூடிய விரைவில் Hutch 072 சிம் அட்டைகளுக்கு மேம்படுத்துமாறு Hutch வேண்டுகோள் விடுக்கின்றது. ஏனெனில், இவை விரைவில் காலாவதியாகிவிடும் என்பதுடன், செப்டம்பர் 2021 க்குப் பிறகு பயன்படுத்த முடியாமல் போகும்.

இந்த அறிவிப்பின்படி,  இதுவரை தங்கள் சிம்மை மேம்படுத்தாத ஆரம்பகால Etisalat வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் 4000+ Hutch சிம் மேம்படுத்தல் மையங்களில் சௌகரியமாக புதிய Hutch 072 சிம்மிற்கு மேம்படுத்திக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் மொபைல் அல்லது ஒன்லைனில் ஓர்டர் செய்து தபால் மூலம் தங்கள் வீட்டு வாசலுக்கே புதிய சிம்மை பெற்றுக் கொள்ளலாம். கோரிக்கை விடுத்து 3 – 5 நாட்களுக்குள் சிம் விநியோகிக்கப்படும்.

ஒவ்வொரு சிம் மேம்படுத்தலுடனும், வாடிக்கையாளர்களுக்கு ரூ. 500 போனஸ் வழங்கப்படுவதுடன், ஒரு வாரத்திற்கு குரல், தரவு மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கு இதனைப் பயன்படுத்த முடியும்.

இந்த முயற்சியின் மூலம், HUTCH தனது 072 & 078 சந்தாதாரர்களை ஒரு ஒருங்கிணைந்த சேவை அமைப்பின் கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளதுடன் அதன் புதிய ஸ்மார்ட் வியாபார திட்டத்தின் மூலம் சமமான நன்மைகளையும் வழங்குகிறது. புதிய ஸ்மார்ட் பிரசாரமான “Yanko, Vango, Let’s Go Smart with HUTCH” என்பது மற்றொரு முன்னோடி முயற்சியாகும். இது இலங்கையர்கள் அனைவரையும் அவர்கள் நினைக்கும், வாழும், செயல்படும் விதத்தில் ஸ்மார்டாக இருக்க ஊக்குவிக்கிறது.

HUTCH  தொடர்பில்

Hutchison Telecommunications Lanka (Pvt) Limited, இலங்கையில் உள்ள முன்னணி 4G புரேட்பேண்ட் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனரென்பதுடன், 1997 ஆம் ஆண்டு முதல் HUTCH என்ற வர்த்தகநாமத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இது தற்போது நாடு தழுவிய 2G,3G மற்றும் 4G வலையமைப்புகளை சிறந்த தரவு அனுவத்தை வழங்கும் பொருட்டு இயக்கி வருகின்றது. மொபைல் சந்தாதாரர்களின் முக்கிய தேவைகளை நிவர்த்தி செய்யும் புதுமையான மற்றும் கட்டுப்படியாகும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் ஸ்மார்ட் தொலைத்தொடர்பு வர்த்தகநாமகாக இந் நிறுவனம் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட பாரிய நிறுவனமான CK Hutchison Holdings Limited (CK Hutchison) இற்கு பெரும்பான்மையாகச் சொந்தமான துணை நிறுவனமே HUTCH ஆகும். உலகளவில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குவதுடன், 300,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை இது கொண்டுள்ளது. CK Hutchison ஹொங்கொங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும், இது டிசம்பர் 31, 2019 அன்று முடிவடைந்த ஆண்டில் சுமார் 56 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது. Hutchison Asia Telecom மற்றும் CK Hutchison Holdings Limited தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.ckh.com.hk/en/global/home.php மற்றும் www.hutch.lk.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *