ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புதிய பரிமாணத்தை வழங்கும் Huawei Y7a, Huawei Band 6 கலவை

முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, அதன் பயனர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி விடயத்தில் கவனம் செலுத்தி, ​​பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை வெளியிடுவதில் புகழ் பெற்று விளங்குகின்றது. கடந்த பல ஆண்டுகளாக, Huawei யின் அணியக்கூடிய சாதனங்கள் மிகவும் பிரபலமாகி வருவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேம்பட்ட உடற்பயிற்சி அம்சங்களை வழங்கி வருகின்றன. ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் அணிகலன் ஆகியவற்றின் கலவையானது அதிக உடற்பயிற்சி அம்சங்களை பெறுவதை உறுதி செய்கிறது. தற்போது, ​அதிக பயனுள்ள Huawei Health app மூலம் இளைஞர்கள் இந்த கலவையை தங்கள் இரு கரங்களுக்குள்ளும் அரவணைத்துள்ளனர்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழங்கும் ஒரு ஸ்மார்ட் சாதன கலவையை Huawei Y7a மற்றும் Huawei Band 6 இணைந்து வழங்குகின்றன. Huawei யினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Huawei Y7a ஆனது, கட்டுப்படியான விலையில் கிடைக்கும் ஒரு சாதனமாகும். 48MP குவாட் கெமரா போன்ற உயர்ந்த அம்சங்களை கொண்டுள்ள இது, 5,000 mAh எனும் பெரிய மின்கலம், 4GB RAM + 128GB சேமிப்பகம், 6.67 அங்குல பெரிய திரை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கட்டுப்படியான விலைக்கு வழங்குகின்றது.

கெமராவின் அடிப்படையில் பார்ப்போமானால், Huawei Y7a ஆனது 48MP உள்ளிட்ட நான்கு கெமரா தொகுதியை கொண்டுள்ளது, இதில் f/1.8 குவியம் கொண்ட 48MP பிரதான கெமரா, f/2.4 குவியம் கொண்ட 8MP Ultra wide angle வில்லை, f/2.4 குவியம் கொண்ட 2MP கொண்ட Depth (ஆழத்திற்கான) வில்லை, f/2.4 குவியம் கொண்ட 2MP Macro (உருப்பெருக்க) வில்லை ஆகியன உள்ளடங்குகின்றன. இந்த கெமரா தொகுதியானது தெளிவான, பல்வர்ண மற்றும் உண்மையான வாழ்க்கையுடன் இணைந்த புகைப்படங்களை எடுக்க உதவுகின்றது. இதன் முற்புறமான 8MP செல்பி கெமராவும் இவ்வாறான சக்தி வாய்ந்த அம்சத்தை கொண்டுள்ளது.

சாதனத்தின் செயல்திறனைப் பொறுத்தவரை, Huawei Y7a ஆனது Kirin 710A processor, 4GB RAM ஆகிய கலவையின் மூலம் வேகமானதும், தாமதமற்றதுமான செயல்திறனை வழங்குகிறது. அதன் 128GB உள்ளக சேமிப்புத் திறனானது, புகைப்படங்கள், வீடியோக்கள், செயலிகள், கோப்புகளை சேமிக்க போதுமான இடத்தை வழங்குகிறது. இதன் 5,000mAh மின்கலமானது, இதிலுள்ள மிகவும் விரும்பப்படும் அம்சமாகும் என்பதுடன், அது இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த மின்கல ஆயுளை வழங்குகிறது. Huawei Y7a ஆனது 22.5W Fast Charging செயல்பாட்டையும் கொண்டுள்ளது, இது சாதனத்தை வேகமாக சார்ஜ் செய்ய பயனருக்கு உதவுகிறது.

Huawei Band 6 ஆனது Y7a உடன் பொருத்தமான வகையில் இணைவதாலும், அவை இரண்டும் ஸ்டைலாகவும் வண்ணமயமாகவும் இருப்பதால், பயனர்களுக்கு சரியான வகையில் பொருந்துவதாக அமைகின்றன. 18 கிராம் மட்டுமே எடையுள்ள (பட்டி இல்லாத நிலையில்) Huawei Band 6 ஆனது, Huawei Y7a உடன் இணைந்தவாறான வழக்கமான பயன்பாட்டிற்கு சிறந்ததாக காணப்படுகின்றது. Band 6 ஆனது 4 வழியிலான தொடுகைக் கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய, 1.47 அங்குல AMOLED முழுத் திரை அமைப்புடன் வருகிறது. இளைஞர்களை அடையாளப்படுத்தும் வகையில், கறுப்பு, இளம் சிவப்பு, மஞ்சள், பச்சை (Graphite black, Sakura pink, Amber sunrise, Forest green) ஆகிய வண்ணங்களிலான பட்டிகளில் கிடைப்பதானது, Band 6 இனது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Band 6 இல் காணப்படும் பல முக்கிய உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான அம்சங்களில், அதிலுள்ள Spo2 ஆனது, உடலிலுள்ள குருதியின் ஒட்சிசனின் செறிவை 7 நாட்களும் 24 மணித்தியாலங்களும் கண்காணிக்கிறது. இது ஆரோக்கியமான வாழ்க்கை முறை தொடர்பில் அதிக கவனம் செலுத்துபவர்களுக்கு உதவும் அம்சமாகும். இதயத் துடிப்பு, மன அழுத்தம், தூக்க கண்காணிப்பு போன்ற மேம்பட்ட அம்சங்களையும் இது வழங்குவதுடன், சரியான நேரத்திலான நினைவூட்டல்களுடன் பெண்களின் மாதவிடாய் சுழற்சியையும் கண்காணிக்கிறது. Huawei Band 6 ஆனது, பல்வேறு பயிற்சிகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ளதுடன், 96 வெவ்வேறு பயிற்சி அமைப்புகளை உள்ளடக்கியவாறு, அவை ஒவ்வொன்றையும் மேற்கொள்ளும்போதான விரிவான தகவல்களையும் வழங்குகின்றது.

Huawei Band 6 ஆனது மிகவும் ஈர்க்கக்கூடிய வகையிலான 14 நாட்களுக்கான மின்கல ஆயுளுடன் வருவதுடன், பயனர்களுக்கு உடற்பயிற்சிகள் தொடர்பான அம்சங்களை மாத்திரம் வழங்காது, ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியுடன் இணைந்து, அதில் வரும் தகவல்களையும் வழங்குகின்றது. Huawei Band 6 ஆனது, தனிப்பட்ட உதவியாளராக செயற்பட்டு, உள்வரும் அழைப்புகள், குறுந்தகவல்கள், வானிலை தகவல்கள், அலாரங்கள் ஆகியவற்றை நினைவூட்டுவதுடன், இசையை ஒலிக்கச் செய்தல் தொடர்பான கட்டுப்படுத்தும் அனைத்து செயல்பாடுகளையும் வழங்குகின்றது. புகைப்படம் எடுக்கும் வசதியை மணிக்கட்டில் இருந்தவாறு ஒரு கிளிக்கில் வழங்குகிறது.

Huawei Y7a மற்றும் Huawei Band 6 ஆகியன அதன் மட்டத்திலுள்ள இரண்டு சிறந்த ஸ்மார்ட் சாதனங்களாக விளங்குகின்றன. இந்த இரு சாதனங்களின் மூலமும் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான உச்சபட்ச நன்மைகளையும் பெற, பயனர்கள் Huawei AppGallery வழியாக Huawei Health App இனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். Huawei Health App ஆனது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விரும்பும் ஒரு பயனருக்கு கட்டாயம் அவசியமான ஒரு செயலியாகும். இச்செயலியைப் பதிவிறக்கும் பயனர்கள் Band 6 இனால் வழங்கப்படும் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான தரவுகளின் மேம்பட்ட விபரங்களை தங்கள் ஸ்மார்ட்போனின் மூலம் பார்வையிடலாம். இச்செயலியை பயன்படுத்துவது எளிதானது என்பதுடன், வரைபடங்களுடனான விளக்கங்களை உள்ளடக்கிய  விபரங்களை வழங்குகிறது. அத்துடன், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய அளவீடுகள் ஆகிய இரண்டு அம்சங்கள் தொடர்பிலும் பயிற்சிகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளையும் இது வழங்குகிறது. நாள் முழுவதும் இதயத் துடிப்பு கண்காணிப்பு, தூக்கம், குருதியிலுள்ள ஒட்சிசன் செறிவு கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ பயனருக்கு முன்னுரிமை வழங்குகிறது.

Band 6 உடன் Health app இனை இணைக்க, பயனர்கள் செயலியின் புதிய பதிப்பிற்கு அதனை மேம்படுத்த வேண்டும். பின்னர் செயலியைத் திறந்து ‘Device’ என்பதை தொடுவதன் மூலம், Health app உடன் இணைக்க வேண்டிய சாதனத்தை தெரிவு செய்ய வேண்டும்.

Huawei Y7a மற்றும் Huawei Band ஆகியன அனைத்து Huawei அனுபவ மையங்கள், நாடளாவிய Singer காட்சியறைகள், Daraz.lk மற்றும் Singer.lk ஆகிய இணையத்தளங்களிலும் கிடைக்கின்றன.

புகைப்படங்கள் – இரு புகைப்படங்களும் Huawei Mobile பேஸ்புக் பக்கத்திலிருந்து பெறப்பட்டவை

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *