இந்தியாவிற்கான ஒப்பிடமுடியாத டேட்டா

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான HUTCH, அதன் குறிப்பிடும்படியான Data Roaming திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இது விசேடமாக HUTCH இன் உலகளாவிய ரோமிங் சேவை விரிவுபடுத்தலில் ஒரு முக்கிய இடமான  இந்தியாவிற்கு பயணிக்கும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னோடியான திட்டங்கள் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது பயணத்தின் போது மிகவும் கட்டுப்படியான Data Roaming வசதியை பெறுகின்றனர். இது வழக்கமான ரோமிங்கின் போது அனுபவிக்கும் கட்டணப் பட்டியல் அதிர்ச்சிகளில் இருந்து  விடுதலை அளிக்கிறது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள், யாத்திரிகர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பயண வசதி வழங்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு பயணிகளுக்கும், தங்களது பயணத்தின் போது கட்டுப்படியான விலையிலான மற்றும் மன அமைதியான இணைய இணைப்பு வசதியை, HUTCH Roaming மூலம் அனுபவிக்க முடியும்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவிற்கான Data Roaming திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த HUTCH நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹஸன், “HUTCH ஆகிய நாம், எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ரோமிங் அனுபவத்தை மீள்வரையறை செய்வதில் உறுதியாக உள்ளோம். இந்தியாவிற்கான எமது புதிய Data Roaming திட்டங்கள் மூலம் குறிப்பிடும்படியான சேமிப்பையும், யாராலும் தர முடியாத டேட்டா வழங்கலையும் பெற முடியும் என்பதோடு, தேவையானவற்றிற்கு மாத்திரம் கட்டணம் செலுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நன்மைகளை இந்தியாவில் மாத்திரமன்றி, ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களிலும் அனுபவிக்கலாம். எமது வாடிக்கையாளர்கள் தம்மிடம் சிறந்த இணைய வசதி இருக்கும் உணர்வுடன், தங்களது பயணத்தை நம்பிக்கையுடன் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

முக்கிய Data Roaming திட்டங்கள்:

  • USD 5 விசேட டேட்டா திட்டம்: 10 GB – ஒரு வாரத்திற்கு செல்லுபடியாகும்
  • USD 15 விசேட டேட்டா திட்டம்: 30 GB – ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும்
  • இதற்கு மேலதிகமாக 7 டேட்டா திட்டங்கள் உள்ளன. அவை பயணத்தின் பல்வேறு கால இடைவெளிகள் மற்றும் இடங்களின் அடிப்படையில் வெறுமனே USD 1 எனும் கட்டணத்தில் ஆரம்பிக்கின்றன

HUTCH வாடிக்கையாளர்கள் HUTCH APP மூலம் Data Roaming திட்டங்களை இலகுவாக செயற்படுத்த முடியும் என்பதோடு, தங்களது பயணத்தின் போது சிறந்த இணைய இணைப்பை விரும்பும் எவரும் தமது தொலைபேசியில் e-SIM ஐ பதிவிறக்கம் செய்வதன் மூலம் அல்லது பயணத்திற்கு முன்னர் HUTCH இணையத்தளத்தில் கொள்வனவு கோரிக்கையை மேற்கொண்டு தமது வீட்டுக்கே சிம் அட்டையை பெற்றுக் கொள்வதன் மூலம் இந்த வசதியை பெறலாம்.

140 இற்கும் அதிக இடங்களுக்கான HUTCH வழங்கும் குறைந்த கட்டண ரோமிங் திட்டங்களைப் பற்றிய மேலதிக தகவலுக்கு: https://hutch.lk/roaming-rates

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *