இறக்குமதி கட்டுப்பாடு வேளையில் வாகன பராமரிப்பு தொடர்பான அறிவை வழங்கி DIMO Mercedes-Benz Flying Doctor Service Clinic வெற்றிகரமாக நிறைவு

இலங்கையில் நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, நுகர்வோர் புதிய வாகனத்தை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த காரணத்திற்காக, உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பரிந்துரைக்கும் பராமரிப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை, Mercedes-Benz AG இன் சர்வதேச தொழில்நுட்ப நிபுணரான சௌரப் சிங் வலியுறுத்தினார். Mercedes-Benz இன் இலங்கையின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO ஏற்பாடு செய்த Mercedes-Benz Flying Doctor Service Clinic இல் அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

Flying Doctor Service Clinic ஆனது Mercedes-Benz உரிமையாளர்களுக்கு, அவர்களது வாகனங்களின் பராமரிப்பு தொடர்பாக அவர்களது வாகன உற்பத்தியாளரிடம் இருந்து பெறக்கூடிய நிபுணத்துவ ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. இது தொடர்பில் வாடிக்கையாளர்கள் கொண்ட மிகுந்த ஆர்வத்திற்கு மத்தியில் முப்பது பேருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 2 நாள் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

பழுதுபார்ப்பதை தாமதப்படுத்துவது வாகனத்தின் பாதுகாப்பையும் அதன் செயல்திறனையும் பாதிக்கலாம் என சௌரப் சிங் இதன்போது தெரிவித்தார். இது வாகனத்திற்கு மேலும் சேதத்தை ஏற்படக்கூடும் என்றும், வாகனம் மேலும் சேதமடைவதால், பாரிய அளவில் எதிர்பாராத பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளவேண்டியும் ஏற்படலாம் என அவர் கூறினார். உற்பத்தியாளரினால் பரிந்துரைக்கப்படும் மென்பொருள் புதுப்பிப்புகளைச் செய்வதுடன், உரிய உதிரி பாகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தின் செயற்றிறனை உறுதி செய்வதோடு, வாகனத்தின் மீள்விற்பனை மதிப்பையும் இது அதிகரிக்கச் செய்யும்.

வாகனத்தின் ஆயுளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நிலையில், அதன் பராமரிப்பை ஏனைய தரப்பினருக்கு வழங்காமல், Mercedes-Benz வாகன பழுதுபார்க்கும் பணிக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் செல்வது விரும்பத்தக்கதாகும். பரிந்துரைக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், உற்பத்தியாளரின் வழிகாட்டலுடன், வாகனத்தின் ஒப்பற்ற தரத்தைப் பேணவும் உதவுவதோடு, அதன் பிரபல்யத்தையும் இது உறுதி செய்யும்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “தற்போதுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, பயன்படுத்திய Mercedes-Benz வாகனங்கள் குறித்து பெருமளவான நுகர்வோர் அதிக அக்கறை கொண்டுள்ளனர். அவ்வாறான தெரிவுகளின் போது, உரிய அசல் உதிரிப் பாகங்கள் மூலம் அவை பழுதுபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துகின்ற, முகவர் பதிவைக் கொண்ட வாகனங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும். DIMO நிறுவனத்தால் பராமரிப்பு செய்யப்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்யும் போது, அவ்வாகனம் தொடர்பான விரிவான ஆய்வு மற்றும் எளிதாக பெறக் கூடிய வாகன சேவை தொடர்பான பதிவுகளை பெற முடிகின்றமை போன்ற நன்மைகளை இது வழங்குகிறது.” என்றார்.

உற்பத்தியாளரின் நிபுணத்துவ வழிகாட்டலுடன், Mercedes-Benz உரிமையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க, 24 மணிநேர ஒன்லைன் Mercedes-Benz உதவி மையத்தை DIMO செயற்படுத்துகிறது. Mercedes-Benz AG பரிந்துரைக்கும் விசேட கருவிகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி Mercedes-Benz இன் பிரத்தியேக தொழில்நுட்ப வல்லுனர்களால் Mercedes-Benz AG இன் பரிந்துரைகளின்படி அனைத்து பழுதுபார்ப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன், Flying Doctor Service Clinic இல் பங்குபற்றியோருக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கும் DIMO நடவடிக்கை எடுத்திருந்தது. அதற்கமைய, 2024 ஜூலை 31ஆம் திகதி வரை, அவர்களது வாகன ஆய்வின் போது கண்டறியப்படும் எந்தவொரு பழுதுபார்ப்புக்கும் மொத்த கட்டண பட்டியலில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என்பதுடன், ஜூலை 31 வரை Mercedes-Benz Studio இனால் மேற்கொள்ளப்படும் detailing சேவைகளுக்கு 20% தள்ளுபடியும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *