இலங்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவுள்ள Rotary International District 3220 மாநாடு

Rotary International என்பது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 மில்லியன் பெருநிறுவன தலைவர்களை உள்ளடக்கிய உலகளாவிய வலையமைப்பென்பதுடன், இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றது. Rotary அமைப்பானது போலியோ, எச்.ஐ. வி/எய்ட்ஸ் மற்றும் மலேரியா போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களின் பரவலைத் தடுக்க சமூகங்களுக்கு விழிப்பூட்டி ஆதரவளிக்கின்றது. அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ள வளரும் பகுதிகளில் குறைந்த விலை மற்றும் இலவச சுகாதார சேவைக்கான அணுகலை மேம்படுத்தி விரிவுபடுத்துகிறது. அத்தோடு உலகில் உள்ள அமைப்பு நாடுகளிடையே அமைதி மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவதில் அதன் பங்கிற்காக ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர இருக்கை வழங்கப்பட ஒரேயொரு சேவை அமைப்பு இதுவாகும்.

Rotary International District 3220 Sri Lanka and Maldives என்பது 2,100க்கும் மேற்பட்ட ரோட்டேரியன்கள், 8,000 ரோட்டராக்டர்கள் மற்றும் 7,000 இன்டராக்டர்களைக் கொண்ட வலையமைப்பாகும். 1929 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, Rotary International District 3220 Sri Lanka and Maldives, இலங்கையில் போலியோவை வெற்றிகரமாக ஒழித்தமை, 2004 சுனாமியைத் தொடர்ந்து 24 பாடசாலைகளை புனரமைத்தமை, லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மனித இதய வால்வு வங்கியை அமைத்தமை , கண்டியில் ஊனமுற்றோருக்கான நிலையத்தின் அபிவிருத்தி, வறண்ட வலயத்தில் எதிர்திசை சவ்வூடுபரவல் (RO) தொகுதிகளை வழங்கியமை மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மையத்திற்கு டிஜிட்டல் மெமோகிராபி அமைப்பை வழங்கியமை போன்ற பல முக்கிய சமுதாய, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் பணியாற்றியுள்ளது. 

Rotary நாட்காட்டியின் முக்கிய நிகழ்வான Rotary International District 3220 மாநாடு 2024 இல் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட ரோட்டேரியன்கள் மற்றும் பலவிசேட பிரமுகர்கள் மற்றும் பேச்சாளர்கள் பங்கேற்கவுள்ளனர். மாநாட்டின் ஆரம்ப விழா ஏப்ரல் 26 ஆம் திகதி மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுவதோடு, இதில் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களும்,பிரதம பேச்சாளராக தமிழ் நாட்டு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் கௌரவ. Dr. பழனிவேல் தியாக ராஜன் அவர்களும் கலந்து கொள்கின்றனர். கௌரவ விருந்தினரான Rotary International இன் தலைவரின் பிரதிநிதியான பெர் ஹொயென் அவர்களும் ஓகஸ்ட் கூட்டத்தில் உரையாற்றுவார். 

ஆரம்ப விழாவைத் தொடர்ந்து தொழில்நுட்ப அமர்வுகள் ஏப்ரல் 27 அன்று மோனார்க் இம்பீரியலில் நடாத்தப்படவுள்ளன. தொழில்நுட்ப அமர்வுகள் ரோட்டரியின் கவனத்துக்குரிய பகுதிகளையும், கலந்துரையாடல்கள் பெண்களை வலுவூட்டல், சமூகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் மோதல்களைத் தவிர்ப்பது மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் இருக்கும். சிறப்புப் பேச்சாளர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் மட்டுப்படுத்துனர் வரிசையில் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்களுக்கான ஐ.நா.வின் முன்னாள் சிறப்புப் பிரதிநிதி,ராதிகா குமாரசுவாமி, இலங்கையின் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா,  பெண்கள் சர்வதேச அறக்கட்டளையின் தலைவி செரோஷி டி. நந்தசிறி, கேலிடோஸ்கோப், இணை தயாரிப்பாளர், சாவித்திரி ரொட்ரிகோ, சட்டம் மற்றும் பாதுகாப்பு கற்கை நிலைய பணிப்பாளர், நிலாந்தன் நிருதன், தஹம் பஹன ஸ்தாபகர், சகோதரர். சார்லஸ் தோமஸ், Rotary International District 3300 Malaysia, முன்னாள் மாவட்ட ஆளுநர், டத்தோ பிண்டி ராஜசேகரன், Rotary International District 1470 Denmark, முன்னாள் மாவட்ட ஆளுநர், ஹெல்ஜ் ஹேண்டர்சன், ஜேபி செக்கியூரிட்டீஸ் லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி, முர்தசா ஜெபர்ஜி, கொமர்ஷல் வங்கி, முகாமைத்துவ பணிப்பாளர்,

பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மானதுங்க மற்றும் கார்கில்ஸ் வங்கி லிமிடெட், துணைத் தலைவர் அசோக பீரிஸ் ஆகியோர் அடங்குகின்றனர். 2023/2024 மாவட்ட ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், கடந்த 95 வருடங்களாக சமூகங்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும் இலங்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும் ரோட்டரி அமைப்பு முன்னெத்த நற்காரியங்களை அனைத்து ரொட்டேரியர்களும் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாக இந்த மாநாடு அமைந்ததாக குறிப்பிட்டார்.  

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *