இலங்கையர்களிடையே இணைப்பை ஏற்படுத்துவதில் 25 வருட பூர்த்தியை HUTCH கொண்டாடுகின்றது

Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd. (HUTCH) ஆனது, இலங்கையில் உள்ள இணைப்புகளிடையே பிரிவினையைக் குறைப்பதற்கும், உயர்தர மொபைல் புரோட்பான்ட் அனுபவம், கட்டுப்படியான விலையில் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதன் மூலம் தேசத்தை வலுவூட்டுவதற்கும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுமென அறிவித்துள்ளது.

Global Fortune 500 பன்முகத் தொழில்துறை நிறுவனமான CK Hutchison Holdings இன் கீழுள்ள நிறுவனமே HUTCH நிறுவனமாகும். 1997 ஆம் ஆண்டு இலங்கையில் Call-link செயற்பாட்டுக்கான அனுமதியை HUTCH பெற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து தலைமுறை தொழில்நுட்பத்தையும் அது பயன்படுத்தியுள்ளதோடு, குறிப்பாக தற்போது தேசத்தின் மிகப்பெரிய முழு அளவிலான 4G புரோட்பேண்ட் வலையமைப்புகளில் ஒன்றை முன்னெடுத்து வருகிறது.

2018 ஆம் ஆண்டில் Etisalat தொலைத்தொடர்பு குழுமத்தின், இலங்கை துணை நிறுவனத்தை தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து, HUTCH 4G வலையமைப்பானது தற்போது இலங்கையின் சனத்தொகையில் சுமார் 95% வரை சென்றடைந்துள்ளது. அத்துடன் அது 5G வலையமைப்பை தயார் நிலையிலும் வைத்துள்ளது.

நாட்டில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக HUTCH தொடர்ந்து முதலீடு செய்து வருவதுடன், வரிகள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டணங்கள் மூலம் பெறுமதி சங்கிலிகள் மற்றும் அரசாங்க வருமானங்களுக்கு பங்களிப்புச் செய்வதனூடாக பொருளாதாரத்திற்கு கணிசமான அளவில் பங்களிப்பை வழங்குகின்றது.

HUTCH அதன் சேவைகளை வழங்குவோருடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புகளைப் பேணுவதுடன், தம்முடன் இணைந்துள்ள தேசிய அளவிலான 75,000 இற்கும் அதிகமானோருக்கு வருமானம் ஈட்டுவதிலும் ஆதரவளிக்கின்றது.

டிஜிட்டலை அடைவதிலான பிரிவினை, கிராமப் புறங்களிலான இணைப்பு, மலிவான தகவல் தொடர்பாடல், உயர் தரமான இணையம் மற்றும் அழைப்பு அனுபவம் உள்ளிட்ட, நாட்டு மக்களுக்கான உண்மையான தகவல் தொடர்பாடல் சார்ந்த சவால்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட தனித்துவமான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் மதிப்பு ரீதியான முன்மொழிவுகள் மூலம் HUTCH நிறுவனம் முன்னேற்றமடைந்துள்ளது.

25 ஆண்டுகள் எனும் இந்த மைல்கல்லை எட்டியமை தொடர்பில், HUTCH ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா கருத்து வெளியிடுகையில், “இலங்கை மக்கள் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாம் தொடர்ச்சியாக முதலீடு செய்து வளர்ச்சியடைந்து வந்துள்ளதன் மூலம் அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கையையும் ஆதரிப்பதிலும் அவர்களை வளப்படுத்துவதிலும் நாம் எப்போதும் முன்னிற்கின்றோம். ஒரு பொறுப்பான புரோட்பான்ட் தரவுத் தொடர்பு சேவை வழங்குனர் எனும் வகையில், எதிர்காலத்தில் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட மறுமலர்ச்சி கொண்ட தேசத்தை நோக்கிய கனவை அடைய, நாடு முழுவதும் கட்டுப்படியான விலையில் தரமான புரோட்பான்ட் தரவு இணைப்பை வழங்குவதில் HUTCH முன்னணியில் நின்று பங்கு வகிக்குமென நான் நம்புகிறேன்.” என்றார்.

HUTCH ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா மேலும் தெரிவிக்கையில், “HUTCH வர்த்தக நாமத்தையும் அதன் வாக்குறுதியையும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றிய, அனைத்து HUTCH குழு உறுப்பினர்களுக்கும் இவ்வேளையில் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த 25 ஆண்டுகளில் நாம் அடைந்த எமது முக்கிய மைல்கற்களை நாம் பணிவுடன் திரும்பிப் பார்க்கும்போது, இலங்கையில் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை வலுப்படுத்தும் வகையில், சரியான நேரத்தில் பொருளாதார தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்துவதன் மூலம் நன்மைகளை தொடர்ச்சியாக வழங்குவோமென நாம் உறுதியளிக்கிறோம்.” என்றார்.

இந்த முக்கிய சாதனையின் ஒரு பகுதியாக, HUTCH தனது நீண்ட கால மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், விசுவாசமான பணியாளர்கள் சிலரை அடையாளம் காணும் வகையில் சமீபத்தில் ஒரு முக்கிய நிகழ்வை நடத்தியிருந்ததோடு, அதன் மகிழ்ச்சிகரமான பயணத்தில் பங்களித்த அனைத்து வணிகப் பங்காளிகளுக்கும் நிறுவனம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *