அண்மையில் இடம்பெற்ற ‘Best Corporate Citizen Sustainability Awards 2022’ (சிறந்த ஒன்றினைக்கப்பட்ட பிரஜை நிலைபேறானதன்மை விருதுகள் 2022) விழாவில், ஊழியர் உறவுகளை வளர்ப்பதில் சிறந்த செயல்திறனுக்கான பிரிவின் (Best Performance in fostering Employee Relations) விருதை யுனிலீவர் ஸ்ரீலங்கா (Unilever Sri Lanka) நிறுவனம் பெற்றுள்ளது. இந்த விருதை யுனிலீவர் நிறுவனத்திற்கு, இலங்கை வர்த்தக சம்மேளனம் வழங்கியிருந்தது. ஊழியர்களின் ஈடுபாடு, பயிற்சி, தொழில் விருத்தி, நல்வாழ்வு, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பன்முகத்தன்மை, உள்ளீர்த்தல் ஆகியவற்றில் சிறந்த ஊழியர் நிகழ்ச்சி நிரல் மற்றும் பொது நடைமுறைகளை பேணியமை தொடர்பில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. நிறுவனம் முழுவதும் நெகிழ்ச்சியான மற்றும் உற்பத்தித் திறனை வழங்கக் கூடிய ஊழியர்களைக் கொண்ட ஒன்றினைக்கப்பட்ட கலாசாரத்தை இது உருவாக்கியுள்ளது.
Best Corporate Citizen Sustainability Awards ஆனது, உள்ளூர் பொருளாதாரம், சமூகம், சூழலுக்கு சிறந்த பங்களிப்பாளர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குகின்ற, இலங்கையின் மிக உயர்ந்த பெருநிறுவன விருதாக கருதப்படுகிறது.
யுனிலீவர் ஸ்ரீலங்காவின் மனிதவளப் பணிப்பாளர் அனன்யா சபர்வால் இது தொடர்பில் தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் நாம் பெருமையடைகிறோம். இது சரியான நேரத்திலும், முற்போக்கான கொள்கைகள் மூலம் எமது ஊழியர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் பணியிடத்தை பேணுவதற்கான எமது முயற்சிகளுக்கு சாட்சியமளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் போது, எமது பரந்த சூழல் தொகுதியான ஊழியர்கள், ஆட்புலம் மற்றும் வணிக பங்காளிகளுக்கு யுனிலீவர் பலமாக இருந்துள்ளது. எமது முயற்சிகள் மூலம், எமது தொழிற்சாலை பணியாளர்களின் அனைவருக்கும் (100%) வலுவான நிதி உதவித் திட்டங்கள், தள்ளுபடி கொண்ட தயாரிப்பு சலுகைகளுக்கான வசதிகள் மற்றும் பயிற்சி போன்ற பணமற்ற ஆதரவு திட்டங்கள் ஆகியனவும், இந்த கடினமான காலகட்டத்தில் எமது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவியாக அமையும் வகையில் எமது அலுவலக ஊழியர்களில் 90% ஆனோருக்கு மனநல சம்பியன்களாக பயிற்சி அளித்தல் போன்றவையும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.” என்றார்.
அனன்யா மேலும் தெரிவிக்கையில், “எமது ஊழியர்களுக்கு மிகவும் அவசியமான வேளையிலும், பெருநிறுவனங்களுக்கு மிகவும் கடினமாகவும் இருந்த வேளையிலும் யுனிலீவர் முன்னெடுத்த மனிதாபிமான அணுகுமுறையானது, எமது ஊழியர்களுக்குள் ஒரு வலுவான நோக்கத்தை உருவாக்க உதவிய அதேநேரத்தில், நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் அவசியமான இவ்வேளையில் அது பிரதியுபகாரமாக அமைந்தது. எமது ஊழியர்களின் உண்மையான ஆற்றல், உள்ளார்ந்த நெகிழ்ச்சி மற்றும் நோக்கத்தை வெளிப்படுத்துவதற்கு உதவும் சூழலை உருவாக்குவதே, மனித வளப் பிரிவின் பங்கு என நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
யுனிலீவர் ஸ்ரீலங்காவின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹாஜர் அலபிபி தெரிவிக்கையில், “மீண்டும் ஒரு சிறந்த பெருநிறுவன பிரஜையாக அங்கீகரிக்கப்பட்டதையிட்டு நாம் பெருமையடைகிறோம். வணிக நிலைபேறான தன்மை தொடர்பில் எமது முயற்சிகளை வெளிக் கொண்டுவருவதற்கான ஒரு தளத்தை வழங்கிய இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கு இவ்வேளையில் நன்றி தெரிவிக்கின்றேன். நிலைபேறான வாழ்வை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றும் எமது நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு, எமது அனைத்து முயற்சிகளுக்கும் சாதனைகளுக்கும் உறுதுணையாக உள்ள எமது மிகப்பெரிய சொத்தாகிய எமது ஊழியர்களுக்காக நாம் கடமைப்பட்டுள்ளோம். நியாயமான மற்றும் சமூக உள்ளீர்ப்பை கொண்ட உலகிற்கு பங்களிப்பை வழங்குவதற்கான எமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, எமது யுனிலீவர் குடும்பம் அவர்கள் செய்யும் செயல்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் எமது ஊழியர்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கருவிகள் மற்றும் வளங்களை உருவாக்குவதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்துவோம்.” என்றார்.
கடந்த 2 வருடங்களில், நிறுவனம் தனது மகப்பேறு ஆதரவுக் கொள்கை, குடும்ப வன்முறை தொடர்பான உதவிக் கொள்கை, மாதவிடாய் விடுமுறைக் கொள்கை உள்ளிட்ட, தொழில்துறை ரீதியில் 3 முதன்மையான கொள்கைகளை இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. நீடிக்கப்பட்ட மகப்பேறு மற்றும் கணவர் மகப்பேற்று விடுமுறை மற்றும் தொழில் இடைவேளைகளையும் யுனிலீவர் வழங்குகிறது. இது அவர்கள் பணியில் இருக்கும்போதே அவர்களின் தனிப்பட்ட இலக்குகளை அடைய உதவுகிறது.
யுனிலீவர் பெண் பிரதிநிதித்துவத்திலும் முன்னணியில் உள்ளது. நிறுவனம் முழுவதும் அதிக சதவீதத்தில் பெண்கள் பணிபுரிவதோடு, முகாமைத்துவக் குழுவில் 55%ஆகவும், ஒட்டுமொத்தமாக 35% ஆகவும் பயிற்சியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களாக 50%ஆகவும், நிறுவனம் முழுவதும் அதிக பெண்களின் பங்கேற்பை நிறுவனம் ஊக்குவிக்கிறது. சமீபத்தில் தனது முகாமைத்துவ குழுவில் அதன் ஊழியர்களிடையே முதன் முறையாக பாலின சமநிலையில் 40% ஐ அது கடந்துள்ளதோடு, 2025 இற்குள் 50-50 பாலின சமநிலையை அடையும் முயற்சியில் நிறுவனம் உள்ளது.
2022 ஆம் ஆண்டில், உலக மனிதவள மேம்பாட்டு காங்கிரஸால் (World HRD Congress) ‘ஆசியாவின் சிறந்த 50 பணியமர்த்தும் நிறுவனங்களில் ஒன்றாக’ (One of Asia’s Top 50 Employer Brands) யுனிலீவர் அங்கீகரிக்கப்பட்டது. முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சிலினால் ‘அதிக இளைஞர் பங்களிப்புடன் கூடிய நிறுவனம்’ (The Organisation with the Highest Youth Contribution) அத்துடன் SATYN சஞ்சிகை மற்றும் CIMA ஆகியவற்றால் ‘இலங்கையில் மிகவும் பெண்கள் நட்பு நிறுவனக் கொள்கைகளைக் கொண்ட நிறுவனம்’ (The Organisation with the Most Women-Friendly Company Policies in Sri Lanka) ஆகிய கௌரவங்களை யுனிலீவர் பெற்றுள்ளது.
~ (Ends)
Photo captions
Image 1: இடமிருந்து வலமாக – ஹொரணை யுனிலீவர் தொழிற்சாலை முகாமையாளர் அருண உத்பலா, யுனிலீவர் ஊழியர் உறவுகளின் தலைவர் மற்றும் விநியோக சங்கிலி சிரேஷ்ட மனிதவள வணிகப் பங்குதாரர் நயனி பீரிஸ்; யுனிலீவர் மனிதவள பணிப்பாளர் அனன்யா சபர்வால், யுனிலீவர் வாடிக்கையாளர் சேவை மற்றும் லொஜிஸ்டிக்ஸ் தலைவர் ருமல் பெர்னாண்டோ; யுனிலீவர் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் நெலுகா விக்ரமநாயக்க; யுனிலீவர் வாடிக்கையாளர் மேம்பாட்டு பணிப்பாளர் பாத்திய தயாரத்ன; அகரபதன யுனிலீவர் தொழிற்சாலை முகாமையாளர், அனுஷ கொத்தலாவல; யுனிலீவர் சிரேஷ்ட நிறுவன தொடர்பாடல் நிறைவேற்று அதிகாரி ரித்மா பத்திரண
Image 2: யுனிலீவர் மனிதவள பணிப்பாளர் அனன்யா சபர்வால், மற்றும் யுனிலீவர் ஊழியர் உறவுகளின் தலைவர் மற்றும் விநியோக சங்கிலி சிரேஷ்ட மனிதவள வணிகப் பங்குதாரர் நயனி பீரிஸ் ஆகியோர் Best Corporate Citizen Sustainability Award for Employee Relations விருதை, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் செயலாளர் நாயகமுமான மஞ்சுளா டி சில்வா மற்றும் இயற்கை மற்றும் இயற்கையான வளங்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) இலங்கை நாட்டுப் பிரதிநிதி கலாநிதி ஆனந்த மல்லவதந்திரி ஆகியோரிடமிருநது பெறுகின்றனர்…
Unilever பற்றி
1938 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம், இலங்கையில் வேகமாக நுகரப்படும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அதன் தற்போதைய தயாரிப்பு வகைகள் வீட்டுப் பராமரிப்பு, தனிநபர் பராமரிப்பு, அழகுசாதனம் மற்றும் சுகவாழ்வு, போசாக்கு போன்ற வகைகளில் சந்தையிலுள்ள 30 முன்னணி வர்த்தகநாமங்களை உள்ளடக்கியுள்ளது. அதன் 96% ஆன தயாரிப்புகள் இறுக்கமான உற்பத்தித் தரங்களை பேணியவாறு உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
யுனிலீவர் கடந்த 85 வருடங்களில், இலங்கை சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, உண்மையான இலங்கையரின் வாழ்க்கை முறையைப் பாதுகாத்து பேணும் அம்சத்தை ஈடுசெய்கிறது. தொழிற்துறைத் தரங்களைத் தொடர்ச்சியாக பேணுவதன் மூலம், அது சேவை வழங்கும் சமூகங்களின் வாழ்வாதாரத்தை நிறுவனம் மேம்படுத்துவதோடு, இம்முயற்சியில் அது தொடர்ந்தும் முன்னணியில் திகழும்.