இலங்கையில் முதன்முதலாக குழந்தை தயாரிப்புகளுக்கான பாதுகாப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ள பேபி செரமி

குழந்தை பராமரிப்பு உற்பத்திகளின் பாதுகாப்புத் தரத்தை உயர்த்துவதற்கான ஒரு முயற்சி

இலங்கையில் மிகவும் விரும்பப்படும் குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, குழந்தைப் பராமரிப்புத் தயாரிப்புகளின் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் புத்தாக்கமான சிறந்த தரமான தயாரிப்புகளை வழங்கும் நோக்கத்துடன் ‘Baby Cheramy Safety Institute’ இனை அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளது. நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) வசதிகளுடன் கூடிய இப்புதிய பாதுகாப்பு நிறுவனம், நாட்டின் எதிர்காலத்திற்காகவுமான ஒட்டுமொத்த குழந்தைப் பராமரிப்புத் தொழிற்துறை தொடர்பான முதலீடாகும். இலங்கையில் முதலிடம் வகிக்கும் மற்றும் மிகவும் விரும்பப்படும் குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமாக உள்ளதன் காரணமாக, குழந்தைப் பராமரிப்பு தொழிற்துறையின் பாதுகாப்புத் தரத்தை உயர்த்துவதில் பேபி செரமி முன்னோடியாக உள்ளது. தயாரிப்புப் பாதுகாப்பு தொடர்பில் எப்போதும் உருவாகி வரும் அம்சங்களைத் தொடர வேண்டியதன் அவசியத்தை இவ்வர்த்தகநாமம் புரிந்து கொண்டுள்ளதுடன், இப்புதிய பாதுகாப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் மூலம், குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளில் மிக உயர்ந்த பாதுகாப்பிற்கான பேபி செரமியின் உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இந்த நோக்கத்தை முன்னிலையாகக் இம்முன்முயற்சியானது, குழந்தைகளுக்கு பாதுகாப்பான, சாத்தியமான குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதற்காக இப்பாதுகாப்பு நிறுவனத்தால், 8 படிகளைக் கொண்ட பாதுகாப்புச் செயன்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 8 படிகளைக் கொண்ட பாதுகாப்புச் செயன்முறையானது நுகர்வோருடன் இணைந்து தயாரிப்புகளை உருவாக்குதல், மூலப்பொருட்களை கவனமாக தெரிவு செய்தல், பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை மதிப்பீடு செய்தல், பொதியிடல் மற்றும் வடிவமைப்பை மதிப்பீடு, மருத்துவ மதிப்பீடு மற்றும் சோதனை, உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி நடைமுறைகள், தயாரிப்பு தரம் மற்றும் அதன் ஆயுளை மதிப்பீடு செய்தல், தொடர்ச்சியான மேம்பாடுகள் மற்றும் மதிப்பீடு ஆகியன அடங்குகின்றன.

இப்பாதுகாப்பு நிறுவனம் பிரத்தியேகமான ஆராய்ச்சி மற்றம் மேம்பாட்டு (R&D) மையத்தைக் கொண்டுள்ளது. இது இலங்கையிலுள்ள குழந்தைகள், பாதுகாப்பான குழந்தைப் பராமரிப்புப் பொருட்களைப் எதிர்காலத்தில் பெறுவதை உறுதி செய்கிறது. மிகவும் முற்போக்கான இவ்வர்த்தகநாமமானது, நீண்ட காலமாக நிரூபிக்கப்பட்ட செயல்திறன் கொண்ட குழந்தைப் பராமரிப்பு புத்தாக்க தயாரிப்புகளை வழங்குகிறது. இந்த முன்முயற்சியானத குழந்தைப் பராமரிப்பு தொழிற்துறையில் புரட்சியை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு பாரிய முன்னோக்கிய நகர்வு என்பதோடு, உற்பத்திகளின் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பை நோக்கிய உயர் தரங்களை அமைக்கிறது.

பேபி செரமியின் பாதுகாப்பு நிறுவனம் குறித்து கருத்து தெரிவித்த Hemas Consumer Brands முகாமைத்துவ பணிப்பாளர் சப்ரினா யூசுபலி, “குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளின் பாதுகாப்புத் தரத்தை அதிகரிப்பதற்கு பேபி செரமி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இப்புதிய பாதுகாப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், முழு குழந்தைப் பராமரிப்புத் துறைக்கும் பாதுகாப்புத் தரங்களை வழங்குவதற்கான அர்ப்பணிப்புடன் இருப்பதற்கும், இலங்கையிலுள்ள குழந்தைகளுக்கான சிறந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கும் இவ்வர்த்தகநாமம் சிறந்த முன்மாதிரியாக திகழ்கின்றது. ஆறு தசாப்தங்களாக, இலங்கைப் பெற்றோரின் குழந்தை பராமரிப்புத் தேவைகளை நாம் பூர்த்தி செய்து வந்துள்ளதோடு, அவர்களின் நம்பிக்கை அவர்களின் குழந்தைகளுக்கு சிறந்ததை வழங்குவதற்காக எம்மை முன்னோக்கி செயற்பட வைக்கிறது.” என்றார்.

Hemas Consumer Brands நிறுவனத்தின் R&D பணிப்பாளர் திமுத்து ஜயசிங்க தெரிவிக்கையில், “பேபி செரமி பாதுகாப்பு நிறுவனமானது, குழந்தைப் பராமரிப்புத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எதிர்கால முயற்சியாகும். உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் பாதுகாப்புத் தரங்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான, நம்பகமான தயாரிப்புகளுடன் குழந்தைப் பராமரிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்த வழி வகுக்கின்ற, அதிநவீன வசதிகளைக் கொண்ட இத்துறையிலுள்ள நிறுவனமே இதுவாகும்.” என்றார்.

நீண்ட காலமாக நிரூபிக்கப்பட்ட செயல்திறன் கொண்ட உற்பத்திகளை வழங்கி வரும் பேபி செரமி, இவ்வருடத்தின் முற்பகுதியில் தனது 60ஆவது வருட நிறைவைக் கொண்டாடியிருந்தது. இந்த மைல்கல்லின் மூலம், இலங்கைக் குழந்தைகள் சிறப்பாக வளர்வதற்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்கும் ஒரு பெரிய நோக்கத்தை அது ஏற்றுக்கொண்டுள்ளது. “தரு பெட்டியாட்ட சுரக்ஷித லோகாயக்” (குழந்தைச் செல்வத்திற்கு பாதுகாப்பான உலகம்) எனும் பெற்றோருக்கான விழிப்புணர்வுத் திட்டங்கள், ஆரம்பப் பருவ குழந்தை வளர்ப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் இந்த நோக்கத்தில் இருந்து உருவானதாகும் என்பதுடன், இப்பாதுகாப்பு நிறுவனம் இவற்றிற்கு மேலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பேபி செரமி ஆனது, Hemas Consumer Brands இனது முதன்மையான குழந்தைப் பராமரிப்பு வர்த்தகநாமமாகும். இது பரந்த அளவிலான குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்வதோடு, இது தற்போது இலங்கையின் நம்பர் 1 குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமாக உள்ளது. அனைத்து பேபி செரமி தயாரிப்புகளும் சருமத்தில் எரிச்சல் இல்லாதவை என தோல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதோடு, அதன் பேபி சவர்க்கார வகையானது SLS சான்றிதழைப் பெற்றுள்ளது. பேபி செரமி தயாரிப்புகள் சர்வதேச IFRA இற்கு இணக்கமான வாசனைகளை மட்டுமே பயன்படுத்துவதோடு, சிறந்த உலகளாவிய மற்றும் உள்ளூர் பாதுகாப்பு தரங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான LMD இன் வர்த்தகநாமங்களின் வருடாந்த பதிப்பில், முன்னணி வர்த்தகநாம மதிப்பீடு மற்றும் மூலோபாய நிறுவனமான Brand Finance Lanka வெளியிட்ட Brands Annual Ranking (வருடாந்த வர்த்தகநாம தரப்படுத்தல்) மூலம் குழந்தை பராமரிப்புத் துறையில் தொடர்ச்சியாக 2 வருடங்களாக மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமமாக பெயரிடப்பட்டுள்ளது.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *