இலங்கையில் 4 வருட பூர்த்தியை கொண்டாடும் VIVO; வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்க அர்ப்பணிக்கிறது

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இலங்கையில் தனது 4ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. இந்த புதிய மைல்கல்லை எட்டுவதற்கும், vivoவை இலங்கையின் சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கும், தொடர்ந்து ஆதரவளித்து, உதவி வரும், இலங்கையின் அனைத்து பங்காளிகள், ஊழியர்கள், விநியோகத்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு vivo தனது நன்றிகளை தெரிவிக்கிறது.

நான்கே ஆண்டுகளில், vivo இலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையில் கணிசமான இடத்தை பிடித்துள்ளதுடன், நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் வளர்ந்துள்ளது. வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அதன் அணுகுமுறையைப் பின்பற்றி, vivo தொடர்ந்தும் தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தவும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் ஆற்றல்மிக்க தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்து விலைப் பிரிவுகளிலும் உள்ள உலகளாவிய புத்தாக்க கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தவும் அது அர்ப்பணித்து வருகிறது.

அதன் இலங்கை தொடர்பான அர்ப்பணிப்பை வலுப்படுத்தி, ‘அதிக உள்ளூர், அதிக உலகளாவிய’ அணுகுமுறையால் வழிநடாத்தப்பட்டு, 300 இற்கும் அதிகமானோருக்கு vivo வேலைவாய்ப்பை வழங்குகிறது. அத்துடன் நாடு முழுவதும் 2000 இற்கும் அதிகமான சில்லறை விற்பனைக் நிலையங்களின் வலுவான வலையமைப்பைக் கொண்டுள்ள vivo, விற்பனைக்குப் பின்னரான சிறந்த சேவைகளை வழங்கும் பொருட்டான இரண்டு பிரத்தியேக சேவை மையங்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம் இலங்கை மக்களுக்கு தன்னால் இயன்ற வகையிலான சேவையை சிறந்த முறையில் தொடர்ந்தும் மேற்கொள்வோம் என அது உறுதி பூண்டுள்ளது. அது சமீபத்தில், புதிய Y53s மற்றும் இலங்கையில் அதன் முதலாவது 5G ஸ்மார்ட்போனான முதன்மையான V21 5G ஆகியவற்றை அறிமுகப்படுத்தியிருந்தது. அத்துடன் அதன் மதிப்புமிக்க நுகர்வோர், அதற்கு வழங்கும் நிலையான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது கவர்ச்சிகரமான சலுகைகளையும் அது நடாத்தி வருகிறது.

அந்த வகையில் அதன் 4ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், #vivocares எனும் சமூக பொறுப்பு (CSR) முயற்சியின் கீழ் கடந்த 2021 நவம்பர் 08ஆம் திகதி vivo தனது நன்கொடை நிகழ்வொன்றை நடாத்தியிருந்தது. இத்திட்டத்தில், இரத்தினபுரி மாவட்டத்தின் கெட்டஹெத்த தமிழ் வித்தியாலயத்திற்கு பாடசாலை பைகள் மற்றும் காகிதாதி பொருட்களை வழங்கியது. கல்வியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்கும் நம்பிக்கையில் மேற்கொண்ட இம்முயற்சியானது, இலங்கை மக்களின் அன்பு மற்றும் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கான நன்றியை வெளிப்படுத்துகிறது. இதற்கு முன்னதாக, ஒன்லைன் கற்றலுக்கான, ஸ்மார்ட் கற்றல் கருவிகளை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் உள்ளீட்டை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, காலியில் உள்ள ஒல்கொட் மகா வித்தியாலயத்திற்கு ஒன்லைன் கற்றலுக்கான ஸ்மார்ட்போர்டையும் vivo வழங்கியிருந்தது.

Vivo Sri Lanka பிரதம நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் (Kevin Jiang) இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இது ஒரு நம்பமுடியாத பயணமாகும். இலங்கையில் மகிழ்ச்சிகரமான 4 ஆண்டுகளை நிறைவு செய்ததில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம். vivo ஆகிய நாம், நாட்டிற்கு சிறந்த தரத்திலான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும், நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அதிநவீன ஸ்மார்ட்போன்கள் மூலம் அவற்றை நடைமுறைப்படுத்தவும் நாம் அர்ப்பணித்துள்ளோம். இதன் மூலம்  நாம் எமது இருப்பை உயர்த்துவதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். Benfen தத்துவம் மூலம் வழிநடாத்தப்பட்டு, இலங்கைச் சந்தையில் தொடர்ந்து சேவை செய்வதற்கும் விரிவுபடுத்துவதற்கும் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்குவதற்கு நாம் இங்கு வந்துள்ளோம். நாம் சந்தையில் நுழைந்ததிலிருந்து எமக்கு மிகுந்த அன்பையும் ஆதரவையும் வழங்கிய எமது வாடிக்கையாளர்கள், மதிப்பிற்குரிய கூட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அனைவருக்கும் நாம் மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.” என்றார்.

அர்த்தமுள்ள, பயனர் மைய கண்டுபிடிப்புகளால் vivo இயக்கப்படுவதுடன், தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதன் மூலம் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் எல்லைகளைத் தொடர்ச்சியாக விலக்கி வருகிறது. இது சமீபத்தில் Little V எனும் mobile hyper-causal game ஒன்றை அறிமுகப்படுத்தியது. இது முதல் முறையாக தெற்காசிய பிராந்தியத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்கு வேடிக்கையானதும், அதிவேகமான கேமிங் அனுபவத்தை வழங்கும் ஒன்றாக அமைந்தது. vivo ஆனது, இலங்கை நுகர்வோருக்கு அதன் முழுத் திறனுடனான சேவையை வழங்கும் வகையில், Abans PLC, Dialog Axiata, SLT-Mobitel, Singhagiri, Daraz, BuyAbans, Takas.lk உள்ளிட்ட முக்கிய தொழில்துறை நிறுவனங்களுடன் உறுதியான கூட்டுறவை உருவாக்கியுள்ளது.

சிறந்த தொழில்முறை தரத்திலான கெமரா அம்சங்கள், கேமிங் அனுபவம், மின்கல ஆயுள் ஆகியவற்றுடன், இளைஞர்களை மையமாகக் கொண்ட வர்த்தக நாமமாக vivo இலங்கையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் வளர்ந்து வரும் வாழ்க்கை முறை தேவைகள் மற்றும் கட்டுப்படியான விலைத் தெரிவு விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றியமைக்கிறது. வாய்ப்புகளை அடையாளம் கண்டு, சவால்களை சமாளித்து, அதன் புத்தாக்கத்தை முதன்மைப்படுத்திய அணுகுமுறை மூலம் vivo முன்னேறிச் செல்வதுடன், சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவையின் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறது.

vivo பற்றி

vivo ஆனது, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த சேவைகளை மையமாகக் கொண்டு, வடிவமைப்பு சார்ந்த மதிப்பின் அடிப்படையில் சிறந்த தயாரிப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் மனிதர்களுக்கும் டிஜிட்டல் உலகத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனித்துவமான படைப்பாற்றல் மூலமான வழிகளில் தொழில்நுட்பத்தையும் நவநாகரிகத்தையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான, புதிய போக்கினை உருவாக்கும் ஸ்மார்ட் மொபைல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதன் மூலம் பாவனையாளர்களை டிஜிட்டல் உலகத்துடன் இணைக்க vivo உறுதிபூண்டுள்ளது. Benfen*, வடிவமைப்பு சார்ந்த மதிப்பு, நுகர்வோர் சார்ந்த நிலை, தொடர்ச்சியான கற்றல் மற்றும் குழு மனப்பான்மை ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளைப் பின்பற்றி, vivo ஒரு முன்னணி, நீண்டகால, உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக மாறுவதற்கான தனது தொலைநோக்கினை அடைய நிலைபேறான அபிவிருத்தி மூலோபாயத்தை செயல்படுத்தியுள்ளது.

சிறந்த உள்ளூர் திறமையாளர்களை ஒன்றிணைத்து மேம்படுத்தும் அதே வேளையில், vivo வின் தலைமையகம் சீனாவின் Dongguanஇல் அமைந்துள்ளதுடன் Shenzhen, Dongguan, Nanjing, Beijing, Hangzhou, Shanghai, Xi’an, Taipei, Tokyo, San Diego ஆகிய இடங்களில் 10 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையங்கள் 5G, செயற்கை நுண்ணறிவு, புகைப்படவியல், வடிவமைப்பு மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகள் உள்ளிட்ட அதிநவீன நுகர்வோர் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. vivo சீனா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் (வர்த்தகநாம அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி மையங்கள் உட்பட) 7 உற்பத்தி மையங்களை ஸ்தாபித்துள்ளது. இது ஒவ்வொரு வருடமும் 200 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை அது தயாரிக்கின்றது. தற்போதைய நிலையின் பிரகாரம், vivo அதன் விற்பனை வலையமைப்பை 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உருவாக்கியுள்ளது, இது உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களை தன்வசம் கவர்ந்துள்ளது.

*“Benfen” என்பது சரியான விடயங்களைச் செய்வது மற்றும் விடயத்தை சரியாகச் செய்வது பற்றிய அணுகுமுறையை விபரிக்கும் ஒரு சொல்லாகும்இது சமூகத்திற்கான மதிப்பை உருவாக்குவதற்கான vivo வின் செயற்பணியின் சிறந்த விளக்கமாகும்.

சமீபத்திய vivo தகவல்களுக்கு: https://www.vivo.com/en/about-vivo/news

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *