இலங்கையில் McMart சங்கிலியை அறிமுகப்படுத்தும் McLarens Lubricants

இலங்கையின் மசகு எண்ணெய் (lubricant) தொழில்துறையில் முன்னணி நிறுவனமான McLarens Lubricants, பிரத்தியேகமான Oil Mart சங்கிலியான புதிய McMart எண்ணக்கருவை வெளிக்கொணரும் வகையில், இலங்கையில் உள்ள சிறந்த முகவர்களுடன் தனது கூட்டாண்மையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இரத்மலானை, கடவத்தை, எம்பிலிப்பிட்டிய, ஹொரண, பொரலஸ்கமுவ ஆகிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட விற்பனை நிலையங்களைத் திறந்து வைப்பதன் மூலம், வாகன மசகு எண்ணெய்த் தயாரிப்புகளை கொள்வனவு செய்வதற்கான இணையற்ற அனுபவத்தை McLarens Lubricants வழங்கவுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான மசகு எண்ணெய் தயாரிப்புகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ், வசதியாக வழங்குவதை McMart நோக்கமாகக் கொண்டுள்ளது. வாகனங்களில் ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் Mobil மற்றும் Lockheed வர்த்தகநாமங்களின் கீழான தயாரிப்பு மசகு எண்ணெய்த் தெரிவுகளை பெறுவதற்கு இந்த புத்தாக்கமான எண்ணக்கரு மையம் அனுமதிக்கிறது.

உலகின் முதல்தர செயற்கை இயந்திர எண்ணெயாக Forbes இனால் அங்கீகரிக்கப்பட்ட Mobil ஆனது, McMart மூலம் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு அதன் ஒப்பற்ற தரம் மற்றும் செயற்றிறனைக் கொண்டு வர உதவுகிறது. Mobil இன் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த உருவாக்கமானது, வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களின் எஞ்சினுக்கான சரியான பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட எரிபொருள் செயற்றிறனை வழங்க உதவுகின்றது.

இலங்கையில் மிகவும் விரும்பப்படும் பிரேக் ஒயில் தயாரிப்பான Lockheed, உள்ளூர் சந்தையில் பெருமையுடனான 80 வருட அனுபவத்தை கொண்டுள்ளது. McLarens Lubricants உடன் கூட்டுச் சேர்ந்துள்ளதன் மூலம் Lockheed ஆனது. வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த தரமான பிரேக் ஒயில்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, வீதிகளில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.

வாடிக்கையாளர்களுக்கான வர்த்தக அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்துவதே McMart இன் முதன்மை நோக்கமாகும். பரந்த அளவிலான மசகு எண்ணெய்த் தயாரிப்புகளை வழங்குவதற்கு அப்பால், வாடிக்கையாளர்களுக்கு ஆழ்ந்த அறிவுடன் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக இவ்வர்த்தக நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் மசகு எண்ணெய்க் கொள்வனவு பற்றிய தகவலறிந்து முடிவுகளை எடுக்கலாம் என்பதோடு, வாகன பராமரிப்பு தொடர்பான நிபுணத்துவ ஆலோசனையையும் பெறலாம். இதன் மூலம் அவர்களது வாகனங்கள் சிறந்த முறையில் செயற்படுவதையும் சிறந்த நிலையில் இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

McLarens Lubricants இலங்கைச் சந்தையில் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதோடு, 2023 ஆம் ஆண்டளவில் 3ஆவது பெரிய மசகு எண்ணெய் நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய மசகு எண்ணெய் இறக்குமதி நிறுவனமாகவும் அது தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கூட்டாண்மை மற்றும் பிரத்தியேகமான Oil Mart சங்கிலியின் ஸ்தாபிப்பு ஆனது, வாடிக்கையாளர் திருப்தி, தயாரிப்பு சிறப்பம்சங்கள் ஆகியன மசகு எண்ணெய்த் துறையில் புத்தாக்கமான McLarens Lubricants இன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

McLarens Lubricants இன் இணை முகாமைத்துவப் பணிப்பாளர் சமிந்த குணரத்ன இது தொடர்பில் குறிப்பிடுகையில், “உயர் மட்ட முகவர்களுடன் கூட்டுச் சேர்ந்து Mobil மற்றும் Lockheed போன்ற முன்னணி வர்த்தகநாமங்களை ஒன்றிணைப்பதன் மூலம், McMart எண்ணக்கருவை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்கள் அனுபவத்திலும் வாகன மசகு எண்ணெயை பெற்றுகொள்ளும் விதத்திலும் McMart புரட்சியை ஏற்படுத்தும் என நாம் நம்புகிறோம். எமது நோக்கம் வாடிக்கையாளர்கள் உயர்தர தயாரிப்புகளைக் கண்டறிந்து, அவர்களின் வாகன மசகு எண்ணெய்த் தேவைகளுக்கான நிபுணத்துவ வழிகாட்டலைப் பெறக்கூடிய ஒரே கூரையின் கீழான வசதியை வழங்குவதாகும்.” என்றார்.

McLarens Lubricants நாடு தழுவிய ரீதியிலான பிரசன்னத்தைத் தொடர்ச்சியாக பரவலாக்கமடைந்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திறக்கப்படவுள்ள மேலும் பல McMart விற்பனை நிலையங்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். தனது சிறப்பம்சத்தை வழங்குவதற்கும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்குமான நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது, வாகன மசகு எண்ணெய்த் துறையில் ஒரு புதிய தரத்தை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு, 077777 2008 (உபுல்) எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *