இலங்கை இளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய  Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo, நவீன தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் நிரம்பிய Y தொடர் மூலமாக அதன் ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு சிறப்பியல்பு நிறைந்த அம்சங்கள், நீண்ட கால பற்றரி ஆயுள், flash charge தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றை கவர்ச்சிகரமான விலையில் வழங்கி வருகின்றது. Y தொடர் கைபேசிகள் பாடசாலை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் போன்ற வேகமாக நகரும் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. Y தொடர் ஸ்மார்ட்போன்களின் புதிய மொடல்கள் ஸ்மார்ட் தலைமுறைக்கு ஏற்ப தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. மேலும், ஸ்மார்ட்போன்கள் அதன் உயர் திறன் கொண்ட Battery, செயலிகள் மற்றும் நம்பிக்கைக்குரிய கெமரா தொழில்நுட்பங்களை பூர்த்தி செய்யும் உறுதியான மற்றும் நம்பிக்கைக்குரிய செயல்திறனை வழங்குகின்றன.

Y தொடரின் அறிமுகத்துடன் vivo, இளைஞர்களுக்கு சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கும், வெவ்வேறு விலை வரம்புகளில் அர்த்தமுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கும் அதன் தொலைநோக்குப் பார்வையை விரிவுபடுத்தியது. Y தொடரில் புதிதாக இணைந்து கொண்ட ஸ்மார்ட்போனே Y51 ஆகும். இது சிறப்பான கெமரா மற்றும் செயற்திறனுடன் வருகின்றது. Y51, 8GB RAM + 128GB ROM உடன் Qualcomm® Snapdragon™ 6 Series மொபைல் தளத்தினால் வலுவூட்டப்படுவதனால் சக்திவாய்ந்த, நீண்ட நேரம் நீடிக்கும் செயற்பாட்டினை வழங்குகின்றது. தெளிவாக படம்பிடிப்பதற்காக 48MP கெமராவை Y51 கொண்டுள்ளது. இதன் AI triple கெமராவானது இரவோ பகலோ பாவனையாளர்கள் மிகத் தெளிவாக படம் பிடிக்க உள்ளமைக்கப்பட்ட பல தரபட்ட பயன்முறைகளை வழங்குகின்றது. Super Wide Angle Camera, Super Macro Camera மற்றும் Super Night Mode ஆகிய அம்சங்களுடன் இதன் பின்புற கெமரவானது பல புதுமைகளை முயற்சி செய்துபார்க்கும் சிறப்பம்சத்தைக் கொண்டது. குறைந்த ஒளி நிலைகளில் கூட, புகைப்படங்களில் இரைச்சலைக் (Noise) குறைக்க சூப்பர் நைட் பயன்முறை multi-frame இரைச்சல் குறைப்பு வழிமுறையைப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.  சுற்றுப்புற வெளிச்ச நிலைகளை தானாக சரிசெய்ய இது Aura திரை ஒளியையும், குறைந்த ஒளி நிலைகளில் சிறப்பான தரத்தைப் பெற இரைச்சல் இரத்துச்செய்யும் வழிமுறையையும் பயன்படுத்துகிறது. நீடித்து நிலைக்கும் 5000mAh Battery உடன் கூடியதாக வரும்,  18W Fast Charge மற்றும் AI power saving தொழில்நுட்பத்தையும் வழங்குவதானது HD movie மற்றும் தீவிர கேமிங் அனுபவத்துக்கு ஏற்றது. மேலும் மேம்பட்ட கேளிக்கைக்காக பிரத்தியேகமாக வடிமைக்கப்பட்ட உட்கட்டமைக்கப்பட்ட Audio Boosterஇனை Y51 கொண்டுள்ளது. டைட்டானியம் சபையர் (Titanium Sapphire) மற்றும் கிரிஸ்டல் சிம்பொனி (Crystal Symphony) ஆகிய கவர்ச்சியான வண்ணங்களில் கிடைக்கின்றது.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் Y12 மிக சக்தி வாய்ந்த, AI power saving தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்படும் நீடித்து நிலைக்கும் 5000mAh battery ,  face wake சிறப்பம்சத்துடன் கூடிய Side-Mounted Fingerprint மற்றும் AI Dual Camera ஆகியவற்றுடன் கூடியது. சிறப்பான செல்பிகளுக்காக 8MP முன்பக்க கெமராவையும் இது கொண்டுள்ளது. HD resolution உடன் கூடிய Halo FullView™   திரையினால் எல்லையற்ற பொழுதுபோக்கு அனுபவத்தை Y12s வழங்குகின்றது. கேம்களின் போது சீராக செயற்படுவதை multi-turbo 3.0 உறுதி செய்கின்றது. பான்டொம் பிளக் (Phantom Black) மற்றும் கிளசியர் புளூ (Glacier Blue) ஆகிய நவநாகரிக வண்ணங்களில் இது கிடைக்கின்றது. FlashCharge தொழில்நுட்பத்துடன் கூடிய பாரிய 5000mAh battery இனைக் கொண்டுள்ள  vivo Y20s தீவிர பாவனையாளர்களுக்கு ஏற்றது. புகைப்படவியலுக்கு AI Triple Macro Camera கெமராவைக் கொண்டுள்ளதுடன், தெளிவான படங்களுக்கு Face Beauty, Portrait Light Effects மற்றும் Filter அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் 13MP rear கெமரா மற்றும் PDAF தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு விவரமும் பிரகாசிக்கும். இத் தொழில்துறையில் முன்னணி வகிக்கும் Qualcomm Snapdragon புரசசரினால் (Processor) வலுவூட்டப்படும் Y20s, 4GB RAM+128GB ROM உடன்  அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களுக்கு நிலையான செயற்பாட்டை வழங்குகின்றது. Side-mounted fingerprint scanner உடன் கூடிய, நன்கு வடிவமைக்கப்பட்ட 2.5D தோற்றத்தைக் கொண்டதுடன், ஒப்சிடியன் கறுப்பு (Obsidian Black) மற்றும் பெரிஸ்ட் புளூ (Obsidian Black) ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.

உறுதியான செயற்திறனுடன் கூடிய ஸ்மார்ட்போனொன்றுக்கு மாற விரும்புவோருக்கு ஏற்ற ஸ்மார்ட்போனே 5000mAh battery  உடன் கூடிய  AI Macro triple கெமராவைக் கொண்டுள்ள Y20 ஆகும். இலகுவான பாவனைக்கு, Side Mounted Fingerprint scanner உடன் கூடிய புதிய வடிவமைப்பானது போனை இலகுவாக unlock செய்கின்றது. மேலும், 3GB/4GB RAM + 64GB ROM ஆகியவற்றுடன் பல்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களை பாவிப்பது இலகுவாக உள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக,  2MP macro கெமரா,  2MP Bokeh கெமராவுடன் கூடிய தனித்துவமான 13MP Primary கெமராவையும்,   8MP முன்பக்க கெமராவையும் இது கொண்டுள்ளது. கண்ணைக் கவரும் ஒப்சிடியன் பிளக் (Obsidian Black ) மற்றும் நெபியுளா புளூ (Nebula Blue) ஆகிய நிறங்களில் இது கிடைக்கின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *