இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் டிஜிட்டல் மாற்றத்திற்கான இலங்கையின் மிகப்பெரிய பாதுகாப்பான தரவு மையத்தை நடைமுறைப்படுத்தும் Softlogic Information Technologies Ltd

இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) வங்கி கடன் மதிப்பெண் தரவு மைய உட்கட்டமைப்பை Softlogic Information Technologies Ltd (SITL) நிறுவனம் வெற்றிகரமாகச் செயற்படுத்தி முடித்துள்ளது. CRIB என்பது தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள முதலாவது இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் ஆகும். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக CRIB ஆனது, நாட்டின் சிறந்த நிதி உட்கட்டமைப்பின் தூண்களில் ஒன்றாக இருந்து வருவதோடு, இலங்கையில் கட்டுப்பாட்டுடனான கடன் கலாசாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கு அமைதியாக தனது பங்களிப்பை வழங்கி, வங்கிகள் மற்றும் முழு நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை உறுதியாக பேணி வருகிறது.

CRIB ஆனது, தனது தற்போதைய தொழில்நுட்ப மாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக, வசதியளித்தல், உட்கட்டமைப்பு, பயன்பாட்டு அடுக்கு ஆகியவற்றின் மூலம் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்துகின்றது. இச்செயற்பாடு மீள்திறனை அதிகரிக்கவும், விரைவான வணிக தயாரிப்பு புத்தாக்க கண்டுபிடிப்புகளை செயற்படுத்தவும், மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்கவும் உதவும். இப்புதிய உட்கட்டமைப்பு வசதியானது, தனது பயன்பாட்டாளர்கள் நிகழ்நேரத்தில் தரவை அணுகவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கும். நாட்டின் ஒரேயொரு கடன் பணியகமான இலங்கையின் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்துடன் (CRIB) இணைந்து பணியாற்றும் SITL நிறுவனமானது, CRIB இன் ஸ்கோர் உட்கட்டமைப்பின் மையமாகக் காணப்படுகின்ற, மீளெழுச்சி கொண்ட, பாதுகாப்பான, நெகிழ்வான தரவு மையம் மற்றும் கிளவுட் கட்டமைப்பை வெற்றிகரமாக நிறுவுவதற்கு, தனது உச்ச பங்களிப்பை வழங்கி செயற்பட்டுள்ளது.

SITL இனால் செயல்படுத்தப்படும் CRIB தரவு மையமானது, நாட்டின் மிகப்பெரிய தரவு மையமாகும். மேலும் இது 13 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளைப் பாதுகாக்கும் வகையிலான மிகவும் விரிவான இணைய பாதுகாப்பு உத்தியைப் பயன்படுத்துகிறது. இது வினைத்திறனான தரவு முகாமைத்துவம் மற்றும் செயன்முறை நிர்வாகத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதோடு, தரவு இரகசியத்தன்மை, செயன்முறை ஒருமைப்பாடு என்பவற்றை உயர் தரத்துடன் பேணுவதை உறுதிப்படுத்துகிறது. CRIB ஆனது இலங்கையின் நிதி உட்கட்டமைப்பில் ஒரு தூணாக இருந்து வருவதுடன், நாட்டில் ஒழுக்கமான கடன் கலாச்சாரத்தின் அடித்தளத்தை தொடர்ச்சியா பலப்படுத்தி வருகிறது.

இது தொடர்பில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் (CEO) குழும பணிப்பாளருமான ரொஷான் ரசூல், தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டபோது, “மீள்திறன் கொண்ட, பாதுகாப்பான, நெகிழ்வான தரவு மையம் மற்றும் கிளவுட் கட்டமைப்பை, உரிய முறையில் கட்டமைத்து செயற்படுத்துவது CRIB பணியனத்தின் பிரதான செயற்பாடாகும். Crib Score தரவு மையத்தின் வெற்றிகரமான மேம்படுத்தலானது, எமது ஒரு மகத்தான சாதனையாகும். ஏனெனில் இது உட்கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ள, உள்நாட்டு ICT துறையில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இவ்வேளையில் எமது குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புவதோடு, இந்த உட்கட்டமைப்பை வெற்றிகரமாகச் செயற்படுத்த எம் மீது நம்பிக்கை வைத்த Credit Information Bureau நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இலங்கையின் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான நந்தி அந்தோனி இது தொடர்பான தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட போது: “எமது தரவு மையத்தை மேம்படுத்துவதில் Softlogic IT ஒரு அற்புதமான பணியைச் செய்து முடித்துள்ளது. நாம் எதிர்பார்த்ததை விட மிக உயர்ந்த சேவையை அது வழங்கியுள்ளது. இது வெறுமனே ஒரு பட்டியலில் உள்ள பொருட்களை பூர்த்தி செய்கின்ற இலகுவான ஒரு விடயம் இல்லை என்பதோடு, கொவிட் தொற்று உச்சத்தை அடைந்திருந்த வேளையில், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் Softlogic IT நிறுவனத்தின் குழுக்கள் யாவும் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தது. Softlogic IT போன்ற சிறந்த வளங்களைக் கொண்ட ஒரு நிறுவனத்துடன் பணிபுரிந்தமை தொடர்பில், நாம் பெருமை கொள்வதோடு, இத்திட்டத்திற்கு அவர்களைத் தவிர சிறந்த பங்காளியை நாம் பெற்றிருப்போமா என்பது சந்தேகமே” என்றார்.

30 வருடங்களுக்கும் மேலான அனுபவம் மற்றும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிக கேள்வி கொண்ட தொழில்நுட்ப சேவையை வழங்குவதில் பெற்றுக் கொண்ட வெற்றி மற்றும் இலங்கையின் ICT துறையின் வளர்ச்சிக்கான நிறுவனம் வழங்கும் ஒப்பற்ற அர்ப்பணிப்பு ஆகியன SITL நிறுவனத்தின் இத்தரவு மையத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தமைக்கான காரணங்களாகும். இலங்கையிலும் வெளிநாட்டிலும் 70 இற்கும் மேற்பட்ட தரவு மையத்தை SITL செயற்படுத்துவதோடு, இலங்கையில் நிறுவன தீர்வுகளை வழங்குவதில் அது முன்னணியில் உள்ளது. பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், பெரிய/நடுத்தர பெரு நிறுவனங்கள், பாதுகாப்பான தரவு சேமிப்பு தீர்வுகளை செயற்படுத்துவதை உறுதிசெய்ய SITL சேவைகளைப் பயன்படுத்துகின்றன. தற்சமயம் Dell வர்த்தகநாமத்தின் Titanium கூட்டாளராக விளங்கும் SITL நிறுவனம், VMware இற்கான முதன்மை கூட்டாளர் அந்தஸ்தையும் கொண்டுள்ளது. அது இலங்கையில் இணைய பாதுகாப்பு வர்த்தகத்தில் வலுவான பங்களிப்ப்பை வழங்கி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *