இலங்கை சாரணர் சங்கத்துடன் இணைந்து சிறந்த கை தூய்மை சுகாதாரத்தை பரிந்துரைக்கும் லைஃப்போய்

2022 உலக கை கழுவும் தினத்தை கொண்டாடுகிறது

     யுனிலீவர் ஸ்ரீலங்காவின் முதன்மையான சுகாதார சவர்க்கார வர்த்தக நாமமான லைஃப்போய் (Lifebuoy), இலங்கை சாரணர் சங்கத்துடன் இணைந்து, கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியில் 13ஆவது முறையாக இடம்பெறும் 2022 தேசிய கியூபொரி (Cuboree) நிகழ்வை முன்னெடுத்திருந்தது. இந்நிகழ்வில் சிறுவர்களிடையே கை கழுவுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில், உலகளாவிய கை கழுவுதல் தினத்தை நினைவுகூர்ந்தது. சமூகங்களுக்கிடையே நீண்ட காலமாக சிறந்த சுகாதார நடத்தைகளை பேணுவதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு இடம்பெற்றது

இந்நிகழ்வில் 12,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு, ஒழுங்கற்ற கை தூய்மை தொடர்பான சுகாதார ரீதியான அபாயங்கள் குறித்து தெளிவூட்டல் மற்றும் அவர்களின் நேரடி பங்குபற்றல் மற்றும் தகவல் வழங்கல் செயற்பாடுகள் மூலம், கை கழுவுதல் தொடர்பான எளிய படிகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. இந்நிகழ்வில், சிறுவர்களுக்குள்ள இயல்பான தலைமைத்துவ திறன்களை  வெளிக்கொண்டு வரும் வகையில், மேலும் 5 பேருக்கு கை கழுவுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி, அவர்கள் கற்றறிந்த விடயங்களை ஏனையோருக்கும் சென்றடைவது ஊக்குவிக்கப்பட்டது.

இந்த முக்கியமான செய்தியைப் பரப்புவதற்கான அவர்களின் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில், கை கழுவுதல் பிரதம விழிப்பூட்டல் அதிகாரிகளாக (Chief Education Officers – CEOs) அவர்களை பதிவுசெய்யுமாறு ஊக்குவிக்கப்பட்டனர். இதில், இலங்கை முழுவதும் இருந்து மொத்தமாக 9 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, கைகழுவுதல் CEO அதிகாரிகளின் தலைமையில் தங்கள் பாடசாலை வளாகத்திற்குள் தனியான கை கழுவும் நிலையங்களை அமைப்பதற்காக தலா ரூ. 100,000 நிதியும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு போதியளவான லைஃப்போய் ஹேண்ட் வொஷ் உடன், சவர்க்காரம் மற்றும் கியூபொரி கையேடுகளையும் சிறுவர்களுக்கு லைஃப்போய் வழங்கியது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த, யுனிலீவர் ஸ்ரீலங்காவின் Personal Care and Beauty & Wellbeing சந்தைப்படுத்தல் பணிப்பாளர் நிலூஷி ஜயதிலக, எமது உலகளாவிய கை கழுவும் தின நிகழ்ச்சித் திட்டத்தில், இலங்கை சாரணர் சங்கத்துடன் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு, கைகளை கழுவுவதன் முக்கியத்துவம் மற்றும் முறையற்ற கை கழுவல் தொடர்பான சுகாதார ரீதியான அபாயங்களைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு விழிப்பூட்ட முடிந்ததையிட்டு நாம் பெருமையடைகிறோம். இலங்கையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கைகழுவல் தொடர்பில் முன்னணியில் இருக்கும் ஒரு வர்த்தக நாமம் எனும் வகையில், Lifebuoy சிறந்த சுகாதாரத்தை பேணுவதை ஆதரிப்பதில் தொடர்ந்து முன்னணியில் இருந்து செயற்படும் என்பதுடன், சுகாதார ரீதியான அடிப்படை பழக்கவழக்கங்களை சிறுவர்களுக்கு அவர்களின் ஆரம்ப கல்விப் பருவத்திலேயே கற்பிப்பதை உறுதி செய்யும்.” என்றார்.

2007 ஆம் ஆண்டு முதல், சவர்க்காரத்தை பயன்படுத்தி, சிறந்த சுகாதாரம் மற்றும் முறையான கை கழுவுதல் ஆகியவற்றை பரிந்துரைப்பதன் மூலம் நோயைத் தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவுமான பணியில் லைஃப்போய் ஈடுபட்டுள்ளது. சிறந்த கை கழுவும் சுகாதார நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், சரியான கைகழுவும் முறைகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை சிறுவர்களுக்கு கற்பிப்பதற்கும், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் 100 இற்கும் மேற்பட்ட கை கழுவும் தொகுதிகளை நிறுவ, கல்வி அமைச்சுடன் இணைந்து லைஃப்போய் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது. பாடசாலைகளில் துப்புரவு வசதிகள் மற்றும் நீர்க் குழாய் தொகுதிகளை மேம்படுத்துவதற்கும் சமூகத்தில் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கும், சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. 2021 இல் அதன் ‘H for Handwashing’ பிரசாரத்தை அறிமுகப்படுத்தியது முதல், 3.6 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களிடம் லைஃப்போய் சென்றடைந்துள்ளது. இதன் மூலம் கை கழுவுதல் தொடர்பான செய்தியை பரப்ப விழிப்பூட்டுபவர்களுடனும் கைகோர்த்துள்ளது.

லைஃப்போய் வர்த்தகநாமத்தின் வரலாறு 1894ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. முறையற்ற சுகாதார பழக்கம் மற்றும் பரவலான தொற்றுநோய்களை எதிர்த்து பிரிட்டனில் இதன் ஆரம்ப தயாரிப்பு வெளியிடப்பட்டது. பாரிய அளவிலான சமூக மாற்றங்களுக்கு லைஃப்போய் தனது ஆதரவை வழங்கி வந்ததோடு, சுகாதாரம் மற்றும் தூய்மையை அடைவதை கட்டுப்படியாகும் விலையில் மாற்றுவதன் மூலம் நலிவடைந்தோரின்  வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. லைஃப்போய் தனது ஆரம்பம் முதல், தினசரி இன்றியமையாத பொருளாக இருந்து வருகின்றதோடு, நோயிலிருந்து பாதுகாப்பை வழங்கி, ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் சிறந்த சுகாதாரத்தை அளிக்கிறது.

இன்று, லைஃப்போய் ஆனது வெறுமனே சவர்க்கார துண்டாக அல்லாமல் பாரிய வளர்ச்சியடைந்துள்ளதோடு, இது இன்று ஹேண்ட் வொஷ், பொடி வொஷ், சனிட்டைசர்கள் போன்ற வடிவங்களில் பல்வேறு தேவைப் பிரிவுகளை பூர்த்தி செய்யும் ஏராளமான புத்தாக்கமான தயாரிப்பு வகைகளை உற்பத்தி செய்து வழங்குகிறது. லைஃப்போய் ஆனது, உலகளாவிய ரீதியில் 30 நாடுகளில் விற்பனை செய்யப்படுவதோடு, உலகின் நம்பர் 1 விற்பனையைக் கொண்ட கிருமி நீக்கும் சவர்க்கார வர்த்தகநாமமாக இருந்து வருகின்றது.

~End~

Lifebuoy பற்றி:

உலகின் நம்பர் 01 கிருமிப் பாதுகாப்பு சவர்க்கா வர்த்தகநாமமான லைஃப்போய், அனைவரும் அணுகக்கூடிய சுகாதாரப் பொருட்களை உற்பத்தி செய்து, ஆரோக்கியமான, தூய்மையான சுகாதார பழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1800 களின் ஆரம்பத்தில் முதன்முதலில் உற்பத்தி செய்யப்பட்ட லைஃப்போய், இங்கிலாந்தில் வாந்திபேதி பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய கைகழுவும் நடத்தை மாற்றத் திட்டங்களில் ஒன்றை முன்னெடுத்து வரும் இவ்வர்த்தகநாமம், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைகின்றது.

Unilever பற்றி

1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம், இலங்கையில் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (Fast-Moving Consumer Goods – FMCG) நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அதன் தற்போதைய தயாரிப்பு வகைகள், வீட்டு பராமரிப்பு, தனிநபர் பராமரிப்பு, அழகு மற்றும் சுகவாழ்வு, போசாக்கு போன்ற வகைகளில் சந்தையின் முன்னணி 30 வர்த்தகநாமங்களை உள்ளடக்கியுள்ளது. அதன் 96% தயாரிப்புகள் கடுமையான உற்பத்தித் தரங்களை பேணி உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. யுனிலீவர், கடந்த 84 ஆண்டுகளில் இலங்கை சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, உண்மையான இலங்கையர் வாழ்க்கை முறையைப் பாதுகாத்து பேணி வருகிறது. தொழிற்துறைத் தரங்களைத் தொடர்ந்தும் பேணுவதன் மூலம், அது உற்பத்திகளை விநியோகிக்கும் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, இந்த முயற்சியில் அது தொடர்ந்தும் முன்னின்று செயற்படும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *