இலங்கை 1 GW சூரிய மின்சக்தி மைல்கல்லை எட்ட பக்கபலமாக இருந்த Huawei

இலங்கை 1 ஜிகா வாற் (GW) சூரிய மின்சக்தி திறனை அடைந்த ஒரு முக்கிய சாதனையை அண்மையில் அடைந்துள்ளது. இதற்கு பாரிய பங்களிப்பு வழங்கிய Huawei Sri Lanka புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் இந்த கூட்டு முயற்சியை கொண்டாடும் வகையில், கடந்த 2024 ஓகஸ்ட் 15 ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அதன் கூட்டாளர்களுடன் இணைந்து முன்னெடுத்த நிகழ்வில் இந்த மைல்கல்லானது கொண்டாடப்பட்டது.

தனது பங்காளிகளுடன் இணைந்து இந்த சாதனைக்காக 40 சதவீத பங்களிப்பை Huawei Sri Lanka வழங்கியுள்ளது. மின்சக்தி அமைச்சின் “சூர்ய பல சங்கமய” எனும் திட்டத்திற்கு இணங்க இந்த சாதனை அமைந்தது. இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகார சபை (SLSEA), இலங்கை மின்சார சபை (CEB), Lanka Electricity Company (Private) Limited (LECO) ஆகியவற்றின் ஆதரவுடன், குடியிருப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் நிறுவன கட்டடங்களின் கூரைகள் மீதான சிறிய சூரிய மின் சக்தி தொகுதிகளை நிறுவுவதை இந்த திட்டம் ஊக்குவிக்கிறது.

இந்நிகழ்வில், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷனா ஜயவர்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியதுடன், மைல்கல்லை நோக்கி இட்டுச் சென்ற இந்த கூட்டு முயற்சி தொடர்பில் தாம் பெருமையடைவதாக தெரிவித்தார். பொதுமக்கள், சேவை வழங்குநர்கள், தனியார் துறை பங்காளிகளின் கூட்டுப் பங்களிப்பு மூலம், 2025ஆம் ஆண்டுக்குள் தேசிய மின்கட்டமைப்பில் 1,000 MW சூரிய மின்சக்தியை இணைக்கும் இலக்கு மேம்பட்டுள்ளதாக அவர் இங்கு தெரிவித்தார். புதிய சட்ட கட்டமைப்பானது, நாடு எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ளும் என்பதோடு, எதிர்கால எரிசக்தி இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் என அவர் இங்கு நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் இங்கு தெரிவிக்கையில், “சவால்கள் எதிரே உள்ளன. ஆனால் ஒன்றாக, புதிய முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகள் யாவும் இச்செயன்முறையை வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன். இதன் மூலம் அனைத்து பங்குதாரர்களும் எதிர்வரும் வருடங்களில் தங்கள் இலக்குகளை அடைய முடியும். இந்த மைல்கல்லை அடைவதற்கு பங்களித்த Huawei மற்றும் SLSEA நிறுவனங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இந்த மைல்கல்லை எட்டுவதில் நிறுவனத்தின் பங்கை  Huawei Sri Lanka பிரதம நிறைவேற்று அதிகாரி Zhang Jinze (Zeh) தனது வரவேற்பு உரையில் எடுத்துரைத்தார். இங்கு Huawei நிறுவனத்தின் பங்களிப்பானது, மொத்தத் திறனில் 40 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். மின்கல சேமிப்பகம், PV கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளிட்ட ஏனைய அது தொடர்பான தொழில்நுட்பங்களில் முன்னேற்றங்கள் உள்ளிட்ட சூரிய மின்சக்தி தொழில்நுட்பத்தில் நிறுவனம் முன்னெடுத்துள்ள தற்போதைய முயற்சிகளையும் அவர் இங்கு விபரித்தார்.

“எதிர்காலத்தை நோக்கிப் பார்க்கும்போது, grid-behind Battery  தொழில்நுட்பங்களை தழுவியுள்ளதன் மூலம் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் புதிய மைல்கற்களை அடைவதில் Huawei உற்சாகமாக உள்ளது. சூரிய சக்தி PV பிரிவில் எமது பயணம் நம்பிக்கைக்குரியது என்பதோடு, energy storage systems, smart PV controllers, EV chargers மற்றும் பாரிய அளவிலான மின்சக்தி சேமிப்பு தீர்வுகள் ஆகியவற்றில் எமது வளர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். ஏராளமான சூரிய ஒளியால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நாட்டில், நிலைபேறான மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியானது, எதிர்காலத்திற்கு பங்களிக்கும் என்பதை காண நாம் ஆர்வமாக உள்ளோம். நாம் தொடர்ச்சியாக புத்தாக்க கண்டுபிடிப்புகளை உருவாக்கி, ஒன்றாக வளர உங்கள் ஆதரவு மற்றும் கூட்டாண்மைக்கு நன்றி.” என்றார்.

ஐக்கிய இராச்சியத்தின் (UK) Huawei இன் Energy Storage Solution Sales Department இல் உள்ள Smart PV & BESS Service Solutions பணிப்பாளர் உஸ்ஸாமா ராய் வழங்கிய விளக்கக்காட்சியும் இந்த நிகழ்வில் இடம்பெற்றது. ராயின் விளக்கக்காட்சியில் grid flexibility, virtual inertia, grid-forming தொழில்நுட்பங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியில் உலகளாவிய போக்குகள் மற்றும் சவால்கள் ஆகியன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

நிலைபேறான வலுசக்தித் தீர்வுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதிலான கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு எடுத்துரைத்தது. இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் நாட்டின் மின்சக்தி இலக்குகளுக்கு பங்களிப்பு செய்வதற்கும் Huawei Sri Lanka தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் உள்ளது.


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *