உங்கள் செல்பிகளில் அதிக ஒளி அல்லது தெளிவின்மையா? புரட்சிகர நைட் கெமராவுடன் வெளியாகவுள்ள VIVOவின் முதற்தர 5G ஸ்மார்ட்போனை எதிர்பாருங்கள்

புதிய ஸ்மார்ட்போனொன்றை கொள்வனவு செய்யும் போது ஒவ்வொரு பாவனையாளரும் எதிர்பார்க்கும் பிரதான அம்சம் நன்கு மேம்பட்ட கெமராவாகும். DSLR கமெராவினை மாற்றீடு செய்யும் அளவுக்கு போன் கெமரா இன்று வளர்ச்சியடைந்துள்ளது. இதில் நிலவும் ஒரேயொரு சவால் குறைந்த ஒளி நிலைகளில் படமெடுப்பதாகும். ஒவ்வொரு பாவனையாளரும் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளார். ஒளி என்பது புகைப்படவியலுக்கு மிக முக்கியமான அம்சமாகும். ஒரு படத்தின் தரம் மற்றும் தெளிவு, சூழலில் ஒளி கிடைப்பதைப் பொறுத்தது என்பதுடன் இது இரவில் தெளிவான புகைப்படங்களைப் பிடிப்பதை சிக்கலாக்குகிறது. நவீன ஸ்மார்ட்போன்கள் குறைந்த ஒளி புகைப்பட அம்சத்தை வழங்கினாலும், அவை பெரும்பாலும் சிறந்த படங்களை தராது.

இரவு நேரங்களில் படங்களைப் பிடிப்பதும் மிகவும் கடினமான காரியமாகும். குறைந்த ஒளி நிலை காரணமாக படம் மிகுந்த இருட்டாக இருக்குமென்பதால் விவரங்களைக் காண்பதும் இலகுவானதல்ல. எங்கள் ஸ்மார்ட்போன் கெமரா சென்சர்கள் மங்கலான ஒளியின் கீழ் படத்தை செயன்முறைக்குட்படுத்த முடியாததால், நம்மில் பலர் விலைமதிப்பற்ற தருணங்களை படம்பிடிக்கும் வாய்ப்பை இழக்கிறோம்.

முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, நுகர்வோர் முகங்கொடுக்கும் சிக்கல்களை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதுடன், நுகர்வோர் வாழ்க்கையை மேம்படுத்த புதுமையான மற்றும் அதிநவீன ஸ்மார்ட்போன்களை வழங்குகிறது. vivo ஸ்மார்ட்போன் வரிசையின் பிரீமியம் V  தொடர் ஒவ்வொரு ஆண்டும் புதிய எல்லைகளை நிர்ணயிக்கின்றது. இது நுகர்வோரின் தனித்துவமான மற்றும் வளர்ந்து வரும் தேவைகளை,  குறிப்பாக புதிய செல்பி விரும்பும் நவ நாகரீக தலைமுறை மற்றும் ஆர்வமுள்ள புகைப்படவியலாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்கிறது.

அண்மையில் கசிந்த தகவலொன்றின் படி, vivo தனது V21 தொடரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகவும், இது இரவு நேர புகைப்படமெடுத்தலின் சிக்கல்களைத் தீர்க்க சிறந்த நைட் கெமரா பொருத்தப்பட்டதெனவும் தெரிவிக்கப்படுகின்றது. செல்பிக்கான முன் கெமராவின் செயற்திறனில் அதிக கவனம் செலுத்துவதால், vivo V21 தொடர் சிறந்த இரவு செல்பி விளைவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்தியல், புதுமை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றிற்காக நுகர்வோரை மையப்படுத்திய அணுகுமுறையை பின்பற்றுவதுடன், குறைந்த ஒளிகொண்ட சூழலில் கூட பிரகாசமான, தெளிவான மற்றும் நிலையான படங்களை வழங்க V21 தொடர் உயர் தரமான வன்பொருளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு நேர புகைப்படவியலின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில் சிறப்பான விவரங்களுடன் கூடிய படங்களை எடுப்பதற்கு சரியான ஒளியின் சமநிலை மற்றும் சமநிலையமைவினை அடைவதாகும். இரவு நேர படப்பிடிப்பின் முக்கிய சிக்கலை எதிர்கொள்ளும் வகையில் படத்தின் சமநிலையை உறுதிப்படுத்தல், பொருத்தமான அளவிலான ஒளி உள்வாங்குதல் போன்றவற்றில் vivo தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தொடரில் உள்ள ஸ்மார்ட்போன்கள் பாவனையாளருக்கு அனைத்து சவால்களையும் இல்லாமலாக்கவும், குறைந்த வெளிச்சத்தில் கூட சிறந்த புகைப்படங்களைப் பிடிக்கவும் உதவும். V21 5G இன் கெமரா தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் குறைந்த ஒளி காட்சிகளில் exposure இனை கணிசமாக மேம்படுத்த முடியுமென்பதுடன் இரவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தெளிவாகவும் பிரகாசமாகவும் மாற்றுகின்றது. இந்த புரட்சிகர மேம்படுத்தலானது பாவனையாளர்கள் இவ்வளவு காலமாக எதிர்கொண்ட பிரச்சினைகளை தீர்க்க உதவும். கடந்த காலத்தில், போனில் குறைந்த வெளிச்சத்தில் புகைப்படங்களை எடுப்பது மங்கலான புகைப்படங்களை மட்டுமேயாகும். எனினும், இது இனிவரும் காலங்களில் இது ஒரு பிரச்சினையாக இருக்காது.

இலங்கை 5G சந்தையின் தவிர்க்க முடியாத அபிவிருத்தியையும், 5G மீதான நுகர்வோரின் அதிகரித்து வரும் ஆர்வத்தையும் vivo கவனித்து வருகிறது. எனவே, SA மற்றும் NSA இரண்டையும் ஆதரிக்கும் dual-mode 5G உடன் வரும் 5G திறன்களுடன் V21 வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்திற்கு தகுந்ததான ஸ்மார்ட்போனைக் கோரும் பாவனையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சீரான, திறமையான மற்றும் சக்திவாய்ந்த இணைப்பு அனுபவத்தை வழங்க எங்களுக்கே உரிய 5G antenna தொழில்நுட்பத்தையும் இது உள்ளடக்குகின்றது.

புதிய V21 தொடரில் vivo வழங்கும் தனித்துவமான திறன்களைக் கண்டறிய காத்திருங்கள்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *