உங்கள் வாகனத்தின் பெறுமதியை அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் எடுத்துச் செல்வதன் மூலம் அதிகரித்துக் கொள்ளுங்கள் – CMTA

வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களின் சந்தைப் பெறுமதியை அதிகரிக்க அவற்றை உற்பத்தியாளர்களின் விதிமுறைகளின் பிரகாரம் பராமரிக்க வேண்டுமெனவும், குறிப்பாக தற்போதைய இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் இதனை முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டுமெனவும், 100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இலங்கையின் முன்னணி வாகன சங்கமான, இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA) தெரிவித்துள்ளது. உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்தும் இச் சங்கம், வாகன உரிமையாளர்கள் தங்கள் மதிப்புமிக்க வாகனங்களுக்கு ஒரு சேவை வழங்குநரைத் தெரிந்தெடுக்கும் போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளது.

இது தொடர்பில் CMTA வின் தலைவர், யசேந்திர அமரசிங்க கருத்து தெரிவிக்கையில், “ஒரு பொறுப்பான தேசிய வர்த்தக சங்கம் என்ற வகையில், வாகன உரிமையாளர்களைப் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதனாலேயே அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். விபத்து பழுதுபார்ப்பு, அசல் உதிரிப்பாகங்கள் மாற்றுதல், வாகன சோதனைகள் மற்றும் ஒரே கூரையின் கீழ் முழுமையான சேவைகள்  உள்ளிட்ட அனைத்து வாகன பழுதுகளையும் தொழில் ரீதியாகவும் பொறுப்புடனும் கையாளும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நோக்கி அவர்களை வழிநடத்துவது எங்கள் பொறுப்பாகும்” என்றார்.

பெரும்பாலான அங்கீகரிக்கப்படாத பட்டறைகளில் உள்ள இயந்திரவியலாளர்களுக்கு இத்தகைய வாகனங்களை முறையாக சேவை செய்வதற்கு முறையான பயிற்சியும், இந்த மேம்பட்ட அமைப்புகளைப் பற்றிய போதுமான புரிதலும் இல்லை. அதே நேரத்தில் உலகளாவிய வாகன தயாரிப்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் கீழ் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நேரடிப் பயிற்சியை வழங்குகிறார்கள். இந்த அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் எப்போதுமே தங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் வாகனத் துறையில் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறார்கள்.

புதிய தலைமுறை வாகனங்கள் மிகவும் மேம்பட்டவை என்பதுடன் என்ஜின் கட்டுப்பாட்டுத் தொகுதி (ECU), சென்சர்கள், எக்சுவேட்டர்கள், இலத்திரனியல் பிரேக்கிங் அமைப்பு போன்ற இலத்திரனியல் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளன என்றும் தலைவர் அமரசிங்க சுட்டிக்காட்டினார். வாகன உற்பத்தியாளர்கள் தமது வர்த்தகநாமத்திற்கான உயர் தர சேவையை உறுதி செய்யும் முயற்சியாக அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை முறையாகக் கண்காணிப்பதுடன், பரிசோதிக்கவும் செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் முழுமையாக திருப்தி அடைவதை உறுதிசெய்து, வர்த்தகநாமத்தின் நற்பெயர் மற்றும் உயர் மட்ட சேவை தரத்தை பராமரிப்பதில் இந்த கண்காணிப்பு செயல்முறை மிகவும் முக்கியமானது,” என்று தலைவர் அமரசிங்க மேலும் தெரிவித்தார்.

“போலி உதிரிப்பாகங்களின் குறைந்த விலை காரணமாக சில வாகன உரிமையாளர்கள் போலி உதிரி பாகங்களுக்கு எவ்வாறு இரையாகிறார்கள் என்பதை CMTA அறிந்து வைத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் கட்டணங்கள் அதிகம்” என்ற பொதுமக்களிடையே உள்ள தவறான கருத்து, முக்கியமாக அங்கீகரிக்கப்படாத பட்டறைகளால் உண்மையான அல்லாத உதிரிப்பாகங்களைப் பயன்படுத்துவதாலும், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உண்மையான உதிரிப்பாகங்களை மட்டுமே பயன்படுத்துவதாலும் என சங்கம் தெரிவிக்கின்றது. அசல் இல்லாத உதிரிப்பாகங்களுடன் உடனடி செலவு குறைவாக இருக்கலாம் எனினும், வாகனத்தின் தொடர்புடைய பகுதிகளுக்கு சேதம் ஏற்படுவதும், பாவனையாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்வதும் முக்கிய பிரச்சினைகளாகும். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் அவர்களின் சேவை தரங்களுக்காக கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதையும், கட்டுப்படியாகும் மற்றும் உயர்தர சேவைகளை வழங்குவதற்கான ஒன்றுபட்ட நோக்கம் அவர்களுக்கு உள்ளது என்பதையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். மேலும், அவர்கள் வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவுகளை கட்டியெழுப்பவதிலும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வாகன வர்த்தகநாமத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதுடன், வாகன உரிமையாளர்களின் பணத்திற்கு சிறந்த பெறுமதியை வழங்குகிறார்கள்.

வாகன பழுதுபார்ப்பு மற்றும் உதிரிப்பாகங்கள் மாற்றுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட முகவரைத் தெரிவு செய்வதானது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், சரியான வாகன பராமரிப்பு பதிவுகளுக்கும் உதவுகிறது. இது வாகனத்தின் மீள் விற்பனை மதிப்பையும் அதிகரிக்கும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து உத்தரவாதத்தை வழங்குகிறார்கள், எனவே தயாரிப்பாளர் உத்தரவாதத்தின் செலவீனத்தை ஏற்கிறார். மேலும், பிரச்சினைகள் இதுவும் இருப்பின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் எந்த பகுதியையும் மாற்றுவார். ஆனால் ‘உத்தரவாதத்தை’ வழங்கும் வேறு எந்த சாராரும் உத்தரவாதக் காலத்தில் பழுதுபார்க்கும் செலவை ஏற்க வேண்டும், அது அவர்களுக்கு செலவாகும். எனவே அவர்கள் வாடிக்கையாளருக்கு பரிந்துரைக்கப்படாத அல்லது பாதுகாப்பற்ற குறுக்கு வழிகளைக் கையாள முடியும்.

நவீன வாகனங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன, அவற்றின் பிரச்சினைகளை தயாரிப்பாளர்கள் வழங்கும் மென்பொருளால் அறிய முடியும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் இந்த நவீன மற்றும் அசல் மென்பொருட்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளனர், அவை வாகனத்தின் பிரச்சினைகளைக் கண்டறிய உதவுகின்றன. அதேசமயம், அங்கீகரிக்கப்படாத பட்டறைகளுக்கு அசல் மென்பொருள் மற்றும் தயாரிப்பாளரால் வழங்கப்பட்ட கருவிகளுக்கான அணுகல் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஒவ்வொரு வர்த்தகநாமத்துக்கும் உலகளாவிய தயாரிப்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பு கருவிகள் மற்றும் உபகரணங்களை எப்போதும் பயன்படுத்துகிறார்கள், அவை வாகனத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை, அதேசமயம் அங்கீகரிக்கப்படாத பட்டறைகள் அவர்கள் சேவை வழங்கும் அல்லது சரிசெய்யும் அனைத்து வர்த்தகநாமத்தையும் சேர்ந்த வாகனங்களுக்கும் பொதுவான கருவிகளைப் பயன்படுத்துவார்கள். கடந்த காலங்களைப் போலல்லாமல், இந்த மேம்பட்ட கணினிமயமாக்கப்பட்ட மென்பொருள்கள் அல்லது நவீன காரில் உள்ள இயந்திரங்களின் எந்த தவறான கணிப்புகளும் வாகனம் மற்றும் பயணிப்பவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடும்.

ஒழுங்கான மென்பொருள், வன்பொருள், தொழில்நுட்ப அறிவு மற்றும் தேர்ச்சி பெற்ற முகவர்கள் ஆகியவற்றைக் கொண்ட சேவையை பெற்றுக்கொள்ளுமாறு  வாகன உரிமையாளர்களுக்கு CMTA பரிந்துரைக்கின்றது.

Ceylon Motor Traders Association (CMTA),  1920 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஒன்றிணைக்கப்பட்ட துணை அமைப்பாகவும், இலங்கையின் வாகன தொழிற்துறையின் குரலாகவும் திகழ்கின்றது. இப் பிராந்தியத்தில் மிக சிரேஷ்ட வாகன வர்த்தக சங்கம் இதுவென்பதுடன் தமது முகவர்களின் ஊடாக அனைத்து முன்னணி சர்வதேச வர்த்தக நாமங்களையும் பிரதிநித்துவம் செய்கின்றது. CMTA உறுப்பினர்கள் கூட்டாக ஆயிரக்கணக்கான இலங்கையர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர், அதே நேரத்தில் பொறியியல் மற்றும் முகாமைத்துவத்தில் சர்வதேச ரீதியாக கடைபிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகளை நாட்டிற்கு கொண்டு வருகிறார்கள். மேலும், நன்கு பயிற்றப்பட்ட மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடிய ஒரு தொழிற்படையை உருவாக்குகின்றது. CMTA உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தயாரிப்பாளர்களால் தணிக்கை செய்யப்படுகிறார்கள். மேலும், அவர்கள் இறக்குமதி செய்யும் வாகனங்கள் உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக தருவிக்கப்படுவதுடன், அவை அந்தந்த நாட்டின் தேவைப்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், முழு உத்தரவாதத்துடன் வருவதால் இலங்கை மக்களுக்கு வாகனத்தின் தரம் மற்றும் முகவரின் நம்பகத்தன்மை குறித்து உறுதி அளிக்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *