உலகத் தரம் வாய்ந்த வர்த்தக உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப உதவுகின்றத சமீபத்திய ஸ்மார்ட் சுங்கம் மற்றும் துறைமுக தீர்வுகளை அறிமுகப்படுத்தும் Huawei

சமீபத்தில் பெங்கொக்கில் நடைபெற்ற HUAWEI CONNECT 2022 இல், சுங்க மற்றும் துறைமுகங்களுக்கான சமீபத்திய தனது தீர்வுகளை Huawei அறிமுகப்படுத்தியது. கடந்த ஒக்டோபரில், சுங்கம் மற்றும் துறைமுக குழுவை Huawei நிறுவிய பின்னர், துறைமுகங்கள் மற்றும் சுங்கம் ஆகியவற்றின் டிஜிட்டல் மாற்றத்திற்கு உதவும் நிறுவனத்தின் சமீபத்திய மூலோபாய நகர்வை இது குறிக்கிறது.

ஆசிய பசிபிக் பகுதியில் சுங்கம் மற்றும் துறைமுகக் குழுவின் அறிமுகமானது Huawei நிறுவனத்திற்கு ஒரு மிகப் பெரும் மைல்கலாகும் என, Huawei சுங்கம் மற்றும் துறைமுகக் குழுவின் சிரேஷ்ட துணைத் தலைவரும் COO வுமான Robin Lu தெரிவித்தார். சுங்கம் மற்றும் துறைமுகத் தொழில்துறைகள் போன்ற உலகளாவிய வர்த்தக உட்கட்டமைப்பில் Huawei நிறுவனம் பல்வேறு வெற்றிகரமான டிஜிட்டல் மாற்ற நடைமுறைகளையும் சந்தர்ப்பங்களையும் கண்டுள்ளது. இது தொடர்பில் ரொபின் லூ மேலும் தெரிவிக்கையில், “இந்த ஆண்டு HUAWEI CONNECT இல், ஆசிய பசிபிக்கில் சுங்கம் மற்றும் துறைமுக உட்கட்டமைப்பை நவீனமயமாக்கல் மற்றும் புத்திசாலித்தனமான மேம்பாட்டை அடைய உதவுகின்ற நம்பிக்கையுடன், எமது முன்னணி ICT தயாரிப்புகள் மற்றும் வெற்றிகரமான தொழில்துறை சூழ்நிலை அடிப்படையிலான தீர்வுகளை நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம். அவ்வாறு செய்வதன் மூலம், துறைமுக செயல்பாட்டுத் திறனையும், எல்லை தாண்டிய வர்த்தக வசதியையும் மேம்படுத்த முடியும்,” என்றார்.

எதிர்கால துறைமுகம்: பாதுகாப்பான, திறமையான, ஸ்மார்ட்டானது

லூவின் கூற்றுப்படி தற்காலத்தில் துறைமுகங்கள், சர்வதேச வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய உட்கட்டமைப்பை குறிக்கின்றன. உலகம் டிஜிட்டல் மயமாகும்போது, ​​துறைமுகங்களின் உபகரணங்களுக்கு நுண்ணறிவை இணைக்க, அவற்றின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் சுரங்கத் தரவு மதிப்பை அதிகரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் அவசியம் ஏற்படுகின்றன. டிஜிட்டல் மயமாக்கலானது, சவாலானதும் வாய்ப்புகளைக் கொண்டதுமாகும்.

Brain — ஸ்மார்ட் கொள்கலன் திட்டமிடல்: எந்தவொரு துறைமுகத்திலும் திட்டமிடல் என்பது ஆரம்ப புள்ளியாகும். இது செயற்பாட்டுத் திறனில் ஆதிக்கம் செலுத்துகின்றது. புத்திசாலித்தனமான திட்டமிடலை செயற்படுத்த Huawei Cloud OptVerse AI Solver தீர்வை Huawei பயன்படுத்துகிறது. இதன் மூலம் துறைமுகங்கள் அவற்றின் உற்பத்தித் திறனின் ஒவ்வொரு படியையும் மேம்படுத்த உதவுகிறது.

Arms — ஒப்டிகல் வலையமைப்புகளுடனான ரிமோட் கண்ட்ரோல்:

வழக்கமான துறைமுக முனைய செயற்பாடுகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதோடு, அதிக வேலைப்பளு மிகுந்தவையுமாகும். இங்கு செயற்படுத்துபவர்கள் பல மணி நேரம் உணவு, நீரின்றி கடுமையான சூழலில் வேலை செய்ய வேண்டியுள்ளது. Quay crane (QC) செலுத்துநர்கள் பொதுவாக தரையில் இருந்து 40 மீற்றர் உயரத்தில் பணியாற்றுவதோடு, தொழில் சார்ந்த நோய்களுக்கு உட்படும் அபாயத்துடன் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.

Legs — ஸ்மார்ட்டான கிடையான போக்குவரத்து: துறைமுகங்கள் பொதுவாக 24 மணி நேரமும் 7 நாட்களும் இயங்குகின்றன. எனவே, உள்ளக கொள்கலன் சாரதிகள் பொதுவாக பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் அதிக பணிச்சுமைகளை எதிர்கொண்டு, மூன்று பணி நேர இடைவெளிகளில் பணியாற்றுகிறார்கள். அப்படியிருந்தும், தன்னியக்கமற்ற மனித செயற்பாடு மூலம் அனுப்புதல், சிக்கலான சூழ்நிலைகளுக்கான திட்டங்களைச் செம்மைப்படுத்தத் தவறிவிடுகிறது. இதன் விளைவாக குறைந்த வளப் பயன்பாடு ஏற்படுகிறது.

Eyes — ஸ்மார்ட் உற்பத்திப் பாதுகாப்பு: துறைமுகங்களில் பாதுகாப்பு முக்கியமானதாகும். புதிய தானியங்கி முனையங்களுக்கு வானிலை பாதுகாப்பு உறுதிப்படுத்தல் தொகுதி அவசியமாகும். இதற்காகவே, முனையங்களுக்கு பாதுகாப்பு அபாயங்களைத் தவிர்க்க உதவும் ஸ்மார்ட் உற்பத்தி, பாதுகாப்புத் தீர்வுகளை Huawei வழங்குகிறது.

ஸ்மார்ட் சுங்கம்: திறந்த, கட்டுப்படுத்தக்கூடிய, வேகமானது

கைமுறை ரீதியான தன்னியக்கமற்ற பொதுவான ஆய்வுகள்  நீண்ட நேரம் எடுப்பதுடன், அவை சுங்க அனுமதி பெறல் நடவடிக்கையை மெதுவாக்குகிறது. மற்றொரு முக்கியமான பிரச்சினை, செயற்றிறனற்ற மேற்பார்வை ஆகும். இது வர்த்தகத்தை எதிர்மறையான வகையில் பாதிக்கிறது. இந்த சிக்கல்களைத் தீர்க்க, Huawei திறந்தநிலை, எளிதான கட்டுப்பாடு கொண்ட, விரைவான அணுகல், தரமான சேவைகளை செயல்படுத்துவதற்கான தீர்வுகளை வடிவமைத்துள்ளதாக லூ தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *