உலக வாய்ச் சுகாதார தினம் 2025 ஐ முன்னிட்டு லிங்க் சுதந்த ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதான நிகழ்வு

Link Natural Products நிறுவனத்தின் ஒரு முன்னணி வர்த்தகநாமமாகவும், இலங்கையில் மிகவும் நம்பிக்கைக்குரிய வாய்ப் பராமரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்ற லிங்க் சுதந்த, ருவான்புர தேசிய கல்வியியல் கல்லூரியில் பிரதான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து, உலக வாய்ச் சுகாதார தினம் 2025 ஐ சிறப்பாகக் கொண்டாடியுள்ளது. 400 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், ஒட்டுமொத்த உடல்நலனுக்கு வாய்ச் சுகாதாரம் எந்தளவு தூரம் முக்கியமானது என்ற வர்த்தகநாமத்தின் நிலைப்பாட்டை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளனர். ‘மகிழ்ச்சியான வாழ்க்கை, மகிழ்ச்சியான உள்ளம்’ என்ற சர்வதேச தொனிப்பொருளுடன் உலக வாய்ச் சுகாதார தினம் 2025 கொண்டாடப்பட்டதுடன், வாய்ச் சுகாதாரம் மற்றும் உள நலன் ஆகியவற்றுக்கிடையிலான ஆழமான தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்த முக்கியமான இணைப்பை தெளிவாக இனங்கண்டுள்ள லிங்க் சுதந்த, சிறந்த வாய்ப் பராமரிப்பு பழக்கங்களை ஊக்குவிப்பதற்காக நிபுணர்களின் தலைமையில் கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப்பரிமாற்றங்கள் அடங்கிய நிகழ்வை நடாத்தியுள்ளது.          

கஹவத்தை உதவிப் பிரதேச செயலாளர் ஜே.என்.ரி.பீ. குமாரி அவர்கள் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளதுடன், புகழ்பெற்ற பல் மருத்துவ நிபுணர் வைத்தியர் அனுர அபேவர்த்தன அவர்கள் வாய்ச் சுகாதாரம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவற்றுக்கிடையிலான உள்ளார்ந்த உறவுமுறை குறித்து ஆழமான அறிவைப் பகிரும் அமர்வொன்றை நடாத்தினார். பல்வேறு விருதுகளை வென்றுள்ள பயிற்சியாளர், படைப்பாளர் மற்றும் வழிகாட்டியான திரு. பாத்திய அத்தநாயக்க அவர்களும் கலந்துகொண்டவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். சிறந்த வாய்ச் சுகாதாரம் என்பது ஆரோக்கியமான புன்னகை என்பதற்கும் அப்பால், தன்னம்பிக்கையை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நேர்மறை சிந்தனைக்கு பங்களிக்கின்றது என்பதை வலியுறுத்தினார். ருவான்புர தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி திருமதி தக்ஷிலா ஜெயமினி அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளார்.

நடமாடும் பல் சிகிச்சை மையம் இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்ததுடன், அங்கு தரித்திருந்த இச்சிகிச்சை மையம், பங்குபற்றியவர்களுக்கு அத்தியாவசிய பற் சிகிச்சை சேவைகளை வழங்கியது. Link Natural Products நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி திரு. ராஜ் குமார் அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “வாய்ச் சுகாதாரத்தை ஊக்குவிப்பதாக காலங்காலமாக நிரூபிக்கப்பட்ட ஒன்பது ஆயுள்வேத மூலிகைகளின் சிறப்பான பலனுடன் தயாரிக்கப்பட்ட ஒரு வர்த்தகநாமமாக லிங்க் சுதந்த காணப்படுகின்றது. இலங்கை, பேராதனை பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரு மருத்துவ சோதனைகள் மூலமாக இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவின் வோஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் மூலமாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை மக்கள் அனைவருக்கும் சிறந்த வாய்ப் பராமரிப்பிற்கான அணுகலை வழங்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நாம் தற்போது முன்னெடுத்து வருகின்ற வாய்ச் சுகாதார விழிப்புணர்வு மற்றும் நடமாடும் பற் சிகிச்சை முகாம் நிகழ்ச்சித்திட்டங்களினூடாக நாடெங்கிலும் 10,800 க்கும் மேற்பட்டவர்களுக்கு பற் பராமரிப்பு சேவைகளை வழங்கியும், 120,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ச் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து அறிவூட்டியும் சமூகங்களுக்கான தனது சேவைகளை Link Natural தொடர்ந்தும் சிறப்பாக ஆற்றி வருகின்றது,” என்று குறிப்பிட்டார்.            

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “லிங்க் சுதந்த என்பது வெறுமனே ஒரு வாய்ச் சுகாதார வர்த்தகநாமம் என்பதற்கும் அப்பாற்பட்டது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறை குறித்து அது ஆலோசனைகளை வழங்கி வருகின்றது. காலங்காலமாக நிரூபிக்கப்பட்ட ஒன்பது ஆயுள்வேத சேர்க்கைப்பொருட்களைக் கொண்ட அதன் தனித்துவமான தயாரிப்புச் சூத்திரம், வாயில் ஆபத்தான பாக்டீரியாக்களைத் தடுக்கும் அதன் திறன் குறித்து உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய சிறப்பைக் கொண்டுள்ள லிங்க் சுதந்த, நிபுணர்கள், நிறுவனங்கள், மற்றும் உத்தியோகபூர்வ அமைப்புக்களுடனான ஒத்துழைப்பினூடாக ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்பும் தனது இலக்கில் தொடர்ந்தும் மிகவுறுதியாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் ஆராய்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்ட அதன் தயாரிப்புக்கள் ஆகியவற்றுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியம், தன்னம்பிக்கை மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத்தரம் ஆகியவற்றுக்கு வழிவகுப்பதில் மக்கள் வாய்ச் சுகாதாரத்தைப் பின்பற்றுவதை லிங்க் சுதந்த தொடர்ந்தும் ஊக்குவித்து வருகின்றது.  

Link Natural நிறுவனம் குறித்த விபரங்கள்

இலங்கையில் ஆயுள்வேத தயாரிப்புக்களின் தனித்துவமான நாமமாகத் திகழும் Link Natural, இலங்கை மற்றும் வெளிநாடுகளிலுள்ள மக்களுக்கு தலைசிறந்த உடல்நல தயாரிப்புக்களைக் கொண்டு வருவதற்கு பண்டைய ஆயுள்வேதம் மற்றும் நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை சங்கமிக்கச் செய்வதில் ஒரு முன்னோடி நிறுவனமாகும். அதன் தயாரிப்புக்கள் குறித்த ஆதாரங்களுக்குப் பின்னணியாக பல்வேறு மருத்துவ சோதனைகள் மற்றும் வெளியீடுகளுடன், ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொள்வதில் ஒரு உச்ச நிறுவனம் என பெயர்பெற்றுள்ளது. Link Natural  வழங்கும் Samahan, Sudantha, Swastha Amurtha, Swastha Triphala, Musclegard, SP Balm, Kesha மற்றும் பல காலங்காலமாக நிரூபிக்கப்பட்ட தயாரிப்புக்கள் நீண்ட காலமாக அனைத்து இல்லங்களிலும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளதுடன், தலைமுறை தலைமுறையாக முழுமையான ஆரோக்கியத்தை நுகர்வோருக்கு வழங்கி வந்துள்ளது.    

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *