உள்ளூர் தானிய பதப்படுத்தும் தொழில்துறையை மேம்படுத்த அதிநவீன ஜப்பானிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் Hayleys Agriculture

விவசாய தீர்வுகளை வழங்கும் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Hayleys Agriculture நிறுவனம், 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய இயந்திரங்களை உற்பத்தி செய்து வரும் ஜப்பானிய Shizuoka Seiki நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. அதிநவீன ஜப்பானிய தொழில்நுட்பத்துடன், நாட்டின் தானிய பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்தும் முயற்சியின் அடிப்படையில், தானியங்களை பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து புத்தாக்க அம்சங்களை உருவாக்கி, புதிய Shizuoka Circulation வகை தானிய உலர்த்தியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Shizuoka தானிய உலர்த்தியானது, வழக்கமான உலர்த்தும் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீண்ட காலமாக நெருக்கடிக்குள்ளாகியுள்ள உள்ளூர் தானிய பதப்படுத்தும் தொழில்துறையின், தானிய உலர்த்தும் செயன்முறையில் புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. இத்தொழில்துறையின் பெரும்பகுதி தற்போது வெயிலில் உலர்த்தும் செயன்முறையை நம்பியுள்ளது. இங்கு நீண்ட உலர்த்தும் நேரம் மற்றும் குறைந்த நிலைக்கும் தன்மையின் காரணமாக அவற்றை ஆலையில் இட்டு நுகர்வுக்காக எடுக்கும் போது அதிக சேதத்திற்குள்ளாவதோடு, விதைகளாக பயன்படுத்துவதற்கான நோக்கத்தில் குறைந்த முளைப்பு விகிதத்தையும் ஏற்படுத்துகின்றது. அத்துடன், சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கும் உணர்திறனை கொண்டுள்ளதன் காரணமாக முழுச் செயன்முறையும் மிகவும் சவாலானதாக காணப்படுகின்றது.

இந்தச் சிக்கல்களை மனதில் கொண்டே Hayleys Agriculture ஆனது, ஒரு புதிய, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தானிய உலர்த்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மேம்படுத்தப்பட்ட உலர்த்தும் பொறிமுறையின் காரணமாக, அது சந்தையில் தனது போட்டியாளர்களிடமிருந்து தனித்து நிற்க உதவுகிறது. இது தானியத்தில் ஏற்படும் சேதத்தை குறைத்து, வானிலை நிலைமைகளைப் பொருட்படுத்தாது உலர்த்தும் நடவடிக்கையை மேம்படுத்துகிறது.

இந்த தானிய உலர்த்தியானது, தானியத்திற்கு இயந்திரத்தால் ஏற்படும் எந்தவொரு சேதத்தையும் குறைக்கும் வகையிலான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாளி உயர்த்தி (bucket elevator) மற்றும் திருகு அமைப்பை (screw system) கொண்டுள்ளது. உலர்த்தும் செயன்முறையின் நிலைக்கும் தன்மையை அதிகரிக்க உலர்த்திக்குள் தானியத்தின் சீரான அனுப்பலையும் இது உறுதி செய்கிறது. இதில் மற்றுமொரு முக்கிய அம்சமாக மேம்படுத்தப்பட்ட ஒன்லைன் தானிய ஈரப்பதன் பகுப்பாய்வு கருவி அமைகிறது. இது மிகவும் துல்லியமான மற்றும் தொடர்ச்சியான உலர்த்தும் அளவீடுகளை வழங்குகிறது. செயன்முறையின் சிறந்த கட்டுப்பாட்டிற்கு இது வழிவகுக்கிறது. அது தவிர, இந்த உலர்த்திகளின் கச்சிதமான வடிவமைப்பு காரணமாக அதனை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றுடன் செயற்பாட்டை மிகவும் எளிதாகவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் ஆக்குகிறது.

Hayleys Agriculture நிறுவனத்தின் இயக்குனர்/பொது முகாமையாளரும் விவசாய உபகரணப் பிரிவின் தலைவருமான சுமித் ஹேரத் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்: “1950களில் இருந்து, மிக உயர்ந்த தரம் வாய்ந்த இயந்திரங்களை வழங்கி வருவதன் மூலம் விவசாயத் தொழில்துறையை பாதுகாப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்கும் நாம் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். Shizuoka உடனான கூட்டிணைவு ஆனது அந்த அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும். இலங்கையில் விவசாய தொழில்நுட்பத்தின் தரத்தை தொடர்ச்சியாக எதிர்காலத்திலும் முன்னேற்றமடையச் செய்வோம் என்பதில் நாம் நம்பிக்கையுடன் உள்ளோம் மேலும் Hayleys Agriculture இன் இணையற்ற வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை மற்றும் விற்பனைக்குப் முன் மற்றும் பிந்தைய சேவைகளுடன், பல தசாப்தங்களாக விவசாய இயந்திரங்கள் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் உலகளாவிய ரீதியில் Shizuoka பெற்றுள்ள நம்பகத்தன்மை மற்றும் நீடிக்கும் தன்மை ஆகியவற்றின் சிறந்த அம்சங்களின் நேரடி அனுபவத்தை தற்போது இலங்கை விவசாயிகள் பெற முடியும். அனைத்து உலர்த்திகளும் Hayleys Agriculture ஊடாக Shizuoka மூலம் வழங்கப்படுகின்ற உற்பத்தியாளரின் உத்தரவாதத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.”

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *