இலங்கையின் வாகனத் துறையில் 75 வருடங்களுக்கும் மேலாக நம்பகமான பெயராத் திகழும் Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனம், AMW Karate Battery வர்த்தக நாமத்தின் புதிய 12V 5Ah மோட்டார் சைக்கிள் மின்கலத்தை பெருமையுடன் வெளியிடுகின்றது. ஒரு போர்வீரரின் வலுவை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள AMW Karate மின்கலங்கள் ஒப்பிட முடியாத நம்பகத்தன்மை மற்றும் செயற்றிறனை வழங்குவதன் மூலம் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களுக்கு புதிய தர நிலையை வழங்குகின்றன.
அதன் பல்வேறு தனித்துவமான விற்பனை அணுகுமுறைகளைக் கொண்ட AMW Karate மின்கலம், அதன் ஆயுளை நீடிப்பதற்காக சமீபத்திய தொழில்நுட்பம், உயர்தர மின்கல அமிலம் மற்றும் கட்டம் கட்டமான (step charging) சார்ஜிங் கட்டமைப்பு ஆகியவற்றை பயன்படுத்துகின்றது. அது சமீபத்திய சீலிடல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதால், மோட்டார் சைக்கிள் பயனர்களுக்கு நீண்ட கால நம்பகத்தன்மையுடன் நீண்ட ஆயுளுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
AMW Karate மின்கலங்கள் ‘Powered by Energ1’ மூலம் இயங்குவதால், அது நிறுவனத்தின் மேம்பட்ட பொறியியல் தொழில்நுட்பத்தையும் நம்பகத்தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. AMW கொண்டுள்ள கொள்கைகளுக்கு இணங்க, இந்த மின்கலங்கள் உயர் தரம், செயற்றிறன் மற்றும் கவர்ச்சிகரமான விலை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மோட்டார் சைக்கிள் பயனர்களுக்கு சிறந்த தெரிவாக அமைகிறது.
AMW Karate மின்கலத்தின் அறிமுகமானது, அதன் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புத்தாக்கமான, உயர்தர தயாரிப்புகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் வாக்குறுதியின் ஒரு முக்கிய படியாக அமைகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஈடு இணையற்ற ஆற்றல், நம்பகத்தன்மை, ஒப்பிட முடியாத செயற்றிறனை வழங்குவதில் AMW இன் இணையற்ற அர்ப்பணிப்பானது, ‘The Power of a Warrior’ (ஒரு போர் வீரனின் சக்தி) எனும் அதன் சுலோகத்தின மூலம் எடுத்துக் காட்டப்படுகிறது.