இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் உறுதியான பிரசன்னத்தைக் கொண்டுள்ள ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, அண்மையில் நடைபெற்ற தெற்காசிய இஸ்லாமிய நிதியியல் அமர்வு (IFFSA) விருதுகள் 2024 நிகழ்வில் ஐந்து பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்திருந்தது. இந்த விருதுகளை சுவீகரித்தமையின் ஊடாக, இஸ்லாமிய நிதியியல் துறையில் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாடு உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெற்றுக் கொண்ட விருதுகளில், ஒரியன்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் மாற்று நிதியியல் வியாபார அலகு, 2023/2024 ஆண்டுக்கான சிறந்த இஸ்லாமிய நிதியியல் நிறுவனத்துக்கான தங்க விருதை சுவீகரித்திருந்தது. அதனூடாக, நிதித் துறையில் நம்பிக்கையை வென்ற முன்னோடி எனும் தனது ஸ்தானத்தை மேலும் உறுதி செய்தது. பரந்தளவு சமூகங்களுக்குப் பொருத்தமான நிதியியல் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் நிறுவனம் கொண்டுள்ள சிறந்த செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் 2023/2024 ஆண்டின் இஸ்லாமிய வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் (NBF) பிரிவு/அலகு என்பதற்கான தங்க விருதையும் சுவீகரித்தது.
இந்த கூட்டாண்மை விருதுகளுக்கு மேலதிகமாக, சிறந்த தனிநபர் சாதனைகளையும் ஒரியன்ட் பைனான்ஸ் பதிவு செய்திருந்தது. நிதித் துறையில் மிகச் சிறந்த சேவைக்கான விசேட கௌரவிப்பு விருதை மாற்று வியாபார அலகின் தலைமை அதிகாரி இபாத் சுஹ்ரி பெற்றுக் கொண்டார். நிறுவனத்தினுள் வளர்ந்து வரும் நட்சத்திரமான நாசிக் ஹசன், 2023/2024 ஆண்டுக்கான வளர்ந்து வரும் நட்சத்திரத்துக்கான வெண்கல விருதை சுவீகரித்தார். துறைக்கு ஆற்றும் அதிசிறந்த பங்களிப்புகளுக்கான இந்த கௌரவிப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஒரியன்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முயற்சிகளை கௌரவித்து விருதுகள் வழங்கப்பட்டிருந்தமை இந்த ஆண்டின் விருதுகள் வழங்கும் நிகழ்வில் விசேட கவனத்தைப் பெற்றிருந்தது. 2023/2024 ஆண்டுக்கான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரச்சாரத் திட்டத்துக்கான தங்க விருது மற்றும் 2023/2024 ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் பிரச்சாரத் திட்டத்துக்கான வெள்ளி விருது போன்றன இதில் அடங்கியிருந்தன. அணியினால் நிறைவேற்றப்பட்ட புத்தாக்கமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் சந்தைப்படுத்தல் மூலோபாயங்களை கொண்டாடும் வகையில் இந்த விருதுகள் அமைந்திருந்ததுடன், அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்த சந்தையில் நிறுவனத்தின் வர்த்தக நாம பிரசன்னத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.
இந்த சாதனைகள் தொடர்பில் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கே.எம்.எம். ஜபிர் கருத்துத் தெரிவிக்கையில், ‘தெற்காசிய இஸ்லாமிய நிதியியல் அமர்வு (IFFSA) விருதுகள் 2024 நிகழ்வில் எமது மாற்று நிதியியல் வியாபார அலகு அண்மையில் பெற்றுக் கொண்ட கௌரவிப்புகள் தொடர்பில் மட்டற்ற மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எமக்கு ஐந்து விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இவற்றில், 2023/2024 ஆண்டுக்கான சிறந்த இஸ்லாமிய நிதியியல் நிறுவனத்துக்கான தங்க விருது சிறந்த சாதனையாக அமைந்துள்ளதுடன், இஸ்லாமிய நிதியியல் துறையில் எமது தலைமைத்துவம் மற்றும் சிறப்பை வெளிப்படுத்தியமைக்கான, மகத்தான சாதனையாகவும் இது திகழ்கின்றது.’ என்றார்.
‘இந்த பெருமைக்குரிய விருதுகளினூடாக, வாடிக்கையாளர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை பிரதிபலிக்கப்பட்டுள்ளமை மட்டுமன்றி, ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சியை வரையறுக்கும் அர்ப்பணிப்பு, புத்தாக்கம் மற்றும் சிறப்பு ஆகியவற்றை கௌரவிப்பதாகவும் அமைந்துள்ளது. கடந்த 43 வருடங்களில், சமூகங்களுக்கு வலுவூட்டும் நிதித்தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் நாம் தொடர்ச்சியாக எம்மை அர்ப்பணித்துள்ளோம். இந்நிலையில், தொழிற்துறையில் சிறப்பை நோக்கிய தொடர்ச்சியான பயணத்தில் இந்த விருதுகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன.’
‘ஒரியன்ட் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சகல அணியினருக்கும் அவர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்பு, ஆக்கத்திறன் மற்றும் மூலோபாய நோக்கு போன்றவற்றுக்காக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன். அவர்களின் திரண்ட செயற்பாடுகள், ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு போன்றவற்றினூடாக இந்த சாதனை சாத்தியப்பட்டிருந்தது. இந்த வெற்றிகளின் ஊடாக வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களில், இஸ்லாமிய நிதியியல் பிரிவில் சிறந்த செயலாற்றுனர் எனும் எமது நிலையை மேலும் உறுதி செய்ய முடிந்துள்ளது.’
ஜபிர் மேலும் தெரிவிக்கையில், ‘இந்த சாதனையை நாம் கொண்டாடும் நிலையில், எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் மாற்றமடைந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக புத்தாக்கமான தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல், எமது தீர்வுத் தெரிவுகளை மேம்படுத்தல் மற்றும் வரையறைகளுக்கு அப்பால் செயலாற்றல் போன்றவற்றுக்கான எமது அர்ப்பணிப்பை தொடர்ந்தும் உறுதியாக பேணுகின்றோம். ஒன்றிணைந்து புதிய தொழிற்துறை நியமங்களை ஏற்படுத்தவும், சிறப்பை மாற்றியமைக்கவும் மற்றும் எதிர்கால வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு வழியமைக்கவும் நாம் தொடர்ந்தும் செயலாற்றுவோம். எமது குறிக்கோளில் நம்பிக்கை வைத்து ஒப்பற்ற ஆதரவளிக்கும் எமது சகல வாடிக்கையாளர்கள், பங்காளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இஸ்லாமிய நிதியியல் உலகில் மேலும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த நாம் மேற்கொள்ளும் முயற்சியில், சிறந்த மைல்கற்கள் மற்றும் சாதனைகள் போன்றன காத்திருக்கின்றன.’ என்றார்.
நான்கு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட ஒரியன்ட் பைனான்ஸ் இன் மாற்று நிதி அலகானது ஒழுக்கமான மற்றும் ஷரியா முறைக்கமைவான நிதிச் சேவைகள் வழங்குவதை உறுதி செய்துள்ளது. மூன்று வருடங்களினுள் இஜாரா வியாபாரத்தில் ரூ. 1.4 பில்லியனுக்கு அதிகமாகவும் வகாலா தவணை முதலீடுகளில் ரூ. 1.25 பில்லியன் தொகையை கொண்டிருப்பதனூடாக, வாடிக்கையாளர்களின் பரந்தளவு தேவைகளை நிவர்த்தி செய்யும் ஆற்றலை நிறுவனம் உறுதி செய்துள்ளதுடன், மாற்று நிதிச் சேவைகள் துறையின் முன்னோடியாகவும் திகழ்கின்றது.
பிரிவுகளின் தலைமை அதிகாரி சமிந்த ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ‘2023/2024 ஆண்டின் தெற்காசியாவின் இஸ்லாமிய நிதி நிறுவனம் எனும் கௌரவிப்பைப் பெற்றுள்ளமை உண்மையில் மாபெரும் சாதனையாகும். பிராந்தியத்தில் காணப்படும் சிறந்த நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் கடுமையான போட்டிக்கு மத்தியில் இந்த உயர் கௌரவிப்பு எமக்கு கிடைத்திருந்தது. எமது அணியினரின் தொடர்ச்சியான சிறந்த செயற்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்காக கிடைத்த சிறந்த கௌரவமாகும். புத்தாக்கமான, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் இவர்கள் தம்மை அர்ப்பணித்துள்ளனர். இந்த மைல்கல் சாதனை தொடர்பில் நாம் மிகவும் பெருமை கொள்வதுடன், இஸ்லாமிய நிதியியல் துறையில் சிறப்புக்கான புதிய நியமங்களை ஏற்படுத்தும் தொடர்ச்சியான பயணத்தில் எமக்கு உறுதியான ஊக்குவிப்பாக இது அமைந்திருக்கும்.’ என்றார்.
மாற்று நிதியியல் வியாபார அலகின் தலைமை அதிகாரி இபாத் சுஹ்ரி கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது அணியினரின் ஒப்பற்ற முயற்சிகளுக்கும், இஸ்லாமிய நிதியியலில் நாம் பேணும் உயர் நியமங்களுடனான உறுதியான மூலோபாய குறிக்கோளுக்கும் கிடைத்த நேரடியான பெறுபேறாக இந்த கௌரவிப்புகள் அமைந்துள்ளன. தீர்வுகளின் கட்டமைப்புகளும், தொழிற்பாட்டு செயன்முறைகளும் ஷரியா கொள்கைகளை பின்பற்றி முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை அடிக்கடி ஷரியா ஆலோசகர் மீளாய்வு செய்கின்றார். நாம் தொடர்ந்தும் முன்னேறுகையில், தயாரிப்பு பின்பற்றல் மற்றும் வாடிக்கையாளர் தன்னிறைவு போன்றவற்றுக்கான எமது ஒப்பற்ற அர்ப்பணிப்பு, எம்மை மேலும் உயர்ந்த ஸ்தானத்துக்கு வழிநடத்தும்.’ என்றார்.
இஸ்லாமிய நிதியியல், ஒழுக்கமான நிதியியல் தீர்வுகள் மற்றும் புத்தாக்கமான சந்தைப்படுத்தல் போன்றவற்றில் ஒரியன்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமைத்துவத்தை இந்த சிறந்த சாதனைகள் வெளிப்படுத்தியுள்ளன. வங்கிசாராத நிதிச் சேவைகளை வழங்கும் தொழிற்துறையில் ஒரியன்ட் பைனான்ஸ் நிறுவனத்தை முன்னோடியான செயற்பாட்டாளராக கொண்டிருப்பதில், நிறுவனத்தின் சிறப்பான நிதி சார் தயாரிப்பக்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றவற்றில் நிறுவனம் கொண்டுள்ள மூலோபாய நோக்கு போன்றன பங்களிப்பு செய்துள்ளன.
ஒரியன்ட் பைனான்ஸ் பற்றி
தமது வாடிக்கையாளர்களின் குறித்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பரந்த நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாக ஒரியன்ட் பைனான்ஸ் திகழ்கின்றது. இந்த சேவைகளில் வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், குத்தகை, தங்கக்கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிதித்துறையில் 43 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிறுவனம் கொண்டுள்ளது. புத்தாக்கத்துக்கு முக்கியத்துவம் வழங்குவது மற்றும் அதிசிறந்த தீர்வுகளையும், வாடிக்கையாளர் சேவையையும் பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தி, வாடிக்கையாளரை-மையப்படுத்திய நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
ஒரியன்ட் பைனான்ஸ் ஒரு ஜனசக்தி குழும நிறுவனம் என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்று இயங்கும் நிறுவனமாகும். LRA தரப்படுத்தலினால் BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.
ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி பணிப்பாளர் சபையில் ராஜேந்திர தியாகராஜா (தவிசாளர்), கே.எம்.எம். ஜபிர் (நிறைவேற்று பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி), பிரகாஷ் ஷாப்டர், ஸ்ரீயான் கூரே, தர்ஷன ரத்நாயக்க, நளின் கருணாரட்ன, மனோஹரி அபேசேகர, சந்தமாலி சந்திரசேகர மற்றும் டேனியல் அல்போன்சஸ் ஆகியோர் அங்கம் பெற்றுள்ளனர்.
படம்