ஒவ்வொரு இலங்கையருக்குமான 5G ஸ்மார்ட்போனான Huawei Nova 7 SE இனை தற்போது முன் கூட்டியே ஓர்டர் செய்யும் வாய்ப்பு

உலகளாவிய புத்தாக்க ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனது புதிய ஸ்மார்ட்போனான Huawei Nova 7 SE இனை அறிமுகப்படுத்தியதன் மூலம் அதன் புதிய வடிவமைப்பை மிகவும் பிரபல Huawei Nova  வரிசையில் சேர்த்துள்ளது. Huawei’ இன் மத்திய தர 5G ஸ்மார்ட்போன் வரிசையின் முதல் ஸ்மார்ட்போனான Nova 7 SE,  தற்போது இடம்பெற்று வரும்  Novaவின் வடிவமைப்பு சார்ந்த பரிணாம வளர்ச்சிக்கான புதிய வருகையாகும். மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இதன் 3D கண்ணாடி மேற்பரப்பானது அதனை கையில் வைத்திருக்கும் போது மிகவும் மென்மையான உணர்வை ஏற்படுத்துவதுடன், Novaவின் பசுமையான வண்ண வகைகளான ஸ்பேஸ் சில்வர், க்ரஷ் கிரீன் மற்றும் மிட்சம்மர் பேர்ப்பில் போன்றன அதன் வடிவமைப்பின் கவர்ச்சியை பல மடங்கு உயர்த்துகிறது.

Nova 7 SE இன் 2400×1080 பிக்சல்கள் தெளிவுத்திறனுடன் கூடிய 6.5 அங்குல LTPS Full HD  திரையானது பாவனையாளர்களுக்கு முழுமையான காட்சி அனுபவத்தை வழங்குகின்றது. இதேவேளை, மெல்லிய Punch Full View உடன் கூடிய திரையானது  (90% screen to body ratio)  திரைப்படங்கள் மற்றும் கேம்ஸ்களுக்கு ஏற்ற எல்லையற்ற காட்சிக்கான இடவசதியைக் கொண்டுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் தொடர்பில் கருத்து வெளியிட்ட Huawei Devices Sri Lanka வின் இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியூ,”அதி துரித 5G இணைப்பினைக் கொண்ட சகாப்தத்தில் முன்னோடியாக வெளியாகும் 5G திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போனே Huawei Nova 7 SE. இந்த Nova வரிசையானது என்றுமே தமது விலைப் பிரிவுக்கு மேலான பெறுமதியை வழங்கிய மத்திய தர சாதனங்கள் என்பதுடன், Nova 7 SE இவை அனைத்திலுமே  சிறந்ததாகும். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தடையற்ற செயற்கை நுண்ணறிவு AI வாழ்க்கையை ஒவ்வொரு பாவனையாளரின் விரல் நுனிக்கே கொண்டு வருகின்றது. அதன் Quad கெமராவின் image stabilization தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவு AI அடிப்படையிலானது,” என்றார்.

Huawei Nova 7 SE ஆனது 64MP AI Quad கெமரா அமைப்பைக் கொண்டுள்ளதுடன், இது மனித பார்வையைக் கூட கடந்து மிகக் கூர்மையான படங்களை பிடிக்கின்றது.

இந்த கெமரா அமைப்பானது  64 MP (High resolution Lens, f/1.8 aperture) பிரதான கெமரா, 8 MP (Ultra Wide Angle Lens, f/2.4 aperture), 2 MP (bokeh lens, f/2.4 aperture) மற்றும் 2 MP (Macro lens, f/2.4 aperture) ஆகியவற்றை உள்ளடக்கியது. பின்புற கெமரா Autofocus மற்றும் Huawei AI image stabilization (AIS)  ஐ ஆதரிக்கிறது. பாவனையாளர்கள்  தமது வாழ்வின் அனைத்து மதிப்பு மிக்க தருணங்களையும் 4K வீடியோக்களையும், 960 fps slow motion வீடியோக்களையும் பயன்படுத்தி தமக்கு விருப்பமான வகையில் படமெடுக்க முடியும். செல்பி பிரியர்களுக்காக Nova 7 SE, 16 MP (f/2.0 aperture) கெமராவுடன் வருகின்றது. இது BM3D denoising algorithmஐக் கொண்டுள்ளதுடன், இந்த அம்சம் தெளிவான, இரைச்சல் இல்லாத படங்களை இரவில் கூட பிடிப்பதற்கு ஒளியைக் கையாளுகிறது.

Huawei Nova 7 SE, 8GB RAM மற்றும் 128GB சேமிப்பகத்தால் வலுவூட்டப்படுவதனால், இவை இரண்டும் இணைந்து தொடர்ச்சியான கேமிங், வீடியோ பிளேபெக் மற்றும் இணையத்தில் உலா வருதல் போன்ற எதுவாக இருந்தாலும் அதற்கான போதியளவு வலுவை வழங்குகின்றன. இதன் Kirin 820 7nm 5G chipset அடுத்த கட்ட அறிவைப் பயன்படுத்தி அதி வேக செயன்முறைப்படுத்தலை அடைய வழிசெய்வதுடன்,  EMUI 10.1 (Android 10 ஐ அடிப்படையாகக் கொண்டது) AppAssistant போன்ற புதிய அம்சங்களுடன்  நவீன பயனர் இடைமுகத்தை வழங்குகிறது.

Huawei Nova 7 SE  கொண்டுள்ள 4000 mAh நீடித்துழைக்கும் மின்கலமானது, ஒரு நாளைக்கு மேல் நீடிக்கின்றது. மேலும், 40W Huawei SuperCharge செயல்பாட்டை ஆதரிக்கின்றமையால் சார்ஜிங் நேரத்தை வெகுவாகக் குறைக்கிறது. இதன் SuperCharge தொழில்நுட்பம் TÜV Rheinland பாதுகாப்பிற்காக சான்றிதழ் பெற்றது. இது அரை மணி நேரத்தில் 70% வரை ரீசார்ஜிங் திறன் கொண்டதுடன், போனின் நீண்ட பயன்பாட்டுக்கு ஈடு கொடுக்கக்கூடியது. Huawei Nova 7 SE இப்போது நாடு முழுவதும் உள்ள சிங்கர் காட்சியறைகள், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் Daraz.lk ஆகியோரிடமிருந்து முன்கூட்டியே ரூ. 64,999 / – என்ற அற்புதமான அறிமுக விலையில் -முன்பதிவு  செய்து கொள்ள முடியும். ஒவ்வொரு Huawei Nova 7 SE  கொள்வனவுடமும் இலவச Huawei பரிசுப் பொதி வழங்கப்படுவதுடன், கிரெடிட் / டெபிட் அட்டை கொடுப்பனவுகள், தவணைத் திட்டங்களையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei ஒவ்வொரு நபருக்கும், வீடு மற்றும் நிறுவனத்திற்கும் ஒரு முழுமையான இணைக்கப்பட்ட, அறிவுபூர்வமான உலகத்திற்காக நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவதில் உறுதியாக உள்ளது. ஸ்மார்ட்போன் ஜாம்பவானான Huawei நன்கறியப்பட்ட விருது வழங்கும் நிகழ்வுகளில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய வர்த்தகநாம சுட்டிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes சஞ்சிகையின் உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. Interbrandஇன் சிறந்த உலகளாவிய வர்த்தக நாமங்கள் கொண்ட பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *