கண்கவர் Pixel Bloom அனுபவத்தை இலங்கையில் வெளியிட்ட Bling Productions மற்றும் Eyeon

கொழும்பு தாமரை கோபுரமானது (CLT) தெற்காசியாவின் முதலாவது அதிவேக மற்றும் ஊடாடல் டிஜிட்டல் கலை அரங்கை இலங்கையில் உருவாக்கி, அத்திட்டத்திற்கான சரியான பங்காளிகளை தேடியது. அதன் பின்னரான விரிவான ஆய்விற்குப் பின்னர், அவர்கள் Bling Productions மற்றும் Eyeon நிறுவனங்களை தேர்ந்தெடுத்தனர். Bling Productions மற்றும் Eyeon இன் Marlon Jesudason மற்றும் Obed Kushan இருவரும் உள்ளூர் டிஜிட்டல் கலைத் துறை, தாமரைக் கோபுரத்தின் தூரநோக்கு மற்றும் பார்வையாளர்களின் புள்ளிவிபரங்கள் ஆகியவற்றை ஆழ்ந்து ஆராய்ந்து, அதிநவீன projection mapping தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கினர்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள திறமையான இலங்கையர்களை உள்ளடக்கிய Pixel Bloom இனை உருவாக்கவான வேலைகள் 14 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டன. Bling Productions நிறுவனத்தின் Marlon Jesudason மற்றும் Eyeon நிறுவனத்தின் Obed Kushan ஆகிய இருவரும், இலங்கை கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஊக்கமளிப்பதற்கும் வலுவூட்டுவதற்குமாக இத்திட்டத்தின் தேவைகளை திட்டமிட்டு, அதன் ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்கு தலைமை தாங்கினர். மஹிந்த இளயப்பெரும மற்றும் சந்துனி வர்ணசூரிய ஆகியோரால் உருவாக்கப்பட்ட, “Colombo Chronicles” மற்றும் “Beyond the Map” அனுபவங்களை ShakyaTM Studio நிறுவனத்தின் ஷாக்ய தென்னகோன்முதலி வரைந்து உயிர்ப்பித்தார். D4 இன் தனுஷ்க அருண 7 வெவ்வேறு வலயங்களை உருவாக்கி தனது ஒளி வடிவமைப்புகளுடன் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தினார்.

Pixel Bloom இன் ஒட்டுமொத்த ஒலி அமைப்பையும், அதற்கான இசையையும் அனுஷ்கா வீரக்கொடி, ரண்டி டி சில்வா ஆகியோருடன் இணைந்து அமெரிக்காவில் உள்ள இலங்கையைச் சேர்ந்த ஷெனன் ஜெக்கப் இயற்றினார். அஹமட் நிஷாத் மற்றும் மனோஜ் சாமிகர ஆகியோரால் தனித்துவமாக நிர்மாணிக்கப்பட்ட EX1 Automation System ஆனது, Pixel Bloom இன் அனைத்து ஒளி மற்றும் ஒலி இயக்கங்களையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துகிறது. Neon Jungle மற்றும் Butterfly Bloom ஆகியவற்றிற்கான ஆட்டோமேஷன் அமைப்புகளை இலத்திரனியல் நிபுணர் நுவன் பண்டார ஒருங்கிணைத்தார்.

தாமரைக் கோபுரத்தின் கட்டடக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வடிவமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள், பொறியியலாளர்கள் கொண்ட பல்துறைக் குழு இலங்கையில் டிஜிட்டல் கலைத்திறனின் எல்லைகளைத் தாண்டி Pixel Bloom இன் கருத்தாழத்தை வடிவமைக்கவும், செயற்படுத்தவும் ஒத்துழைப்பு வழங்கினர். EPSON laser projectors, media servers, fiber technology ஆகியவற்றினால் இயக்கப்படும் projection mapping உட்கட்டமைப்பானது, தங்கு தடையற்ற தரவு பரிமாற்றத்தையும், உயர்-தெளிவுத்தன்மை (HD) கொண்ட காட்சிகளையும் உறுதி செய்கிறது. அசைவு உணரிகள் மற்றும் தன்னியக்க தொகுதிகள் ஆகியன, பார்வையாளர்களை எதிர்காலத்திற்குள் செல்வது போன்றதோர் டிஜிட்டல் கலைப் பயணத்திற்கு கொண்டு செல்கின்றன.

Pixel Bloom ஆனது Colombo Chronicles, Beyond the Map, Pixel Kaleido, FlutterScape, Neon Jungle, Pixel Fusion, The Tower ஆகிய 7 தனித்துவமான வலயங்களில், ஊடாடல் அனுபவத்தையும் அதிநவீன அனுபவங்களையும் கொண்டுள்ளது. இந்த அனுபவங்கள் பொழுதுபோக்கு மற்றும் அறிவைப் பெறல் ஆகிய இரண்டையும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கங்களை வளர்ப்பதற்காக கலை வெளிப்பாட்டை தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் STEAM கல்வி அமைப்பை இது தூண்டுகின்றது.

தனது நிறுவல்களை மேலும் புதுப்பிக்க உள்ளூர் மற்றும் சர்வதேச படைப்பாளிகளுடன் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றி, பார்வையாளர்களுக்கு புதிய மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவங்களை வழங்க Pixel Bloom உறுதியளித்துள்ளது. Bling Productions மற்றும் Eyeon முக்கியமான சமூக ரீதியான நிகழ்வுகள் மற்றும் பருவகால நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அதன் நிறுவல்களைப் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளன. இது டிஜிட்டல் துறையில் ஆக்கபூர்வமான வெளிப்பாட்டைக் கண்டறிவதற்கான ஒரு புதுமையான தளமாக Pixel Bloom ஐ மாற்றுகிறது.

பார்வையாளர்கள் எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைத்து, டிஜிட்டல் கலையின் அதிசயத்தில் மூழ்குவதற்காக, இலங்கையில் டிஜிட்டல் கலைத் துறையை Pixel Bloom மீள்வரையறை செய்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *