சக்தி வாய்ந்த கேமிங் அனுபவத்திற்காக உலகளவிய ரீதியில் வெளியிடப்பட்ட realme GT Master Edition Series

realme Book: 2K டிஸ்ப்ளே கொண்ட realme யின் முதலாது மடிகணினியும் அறிமுகம்

வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme அதன் GT தொடரில் புதிய ஆச்சரியமூட்டும் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. realme GT Master பதிப்பு மற்றும் realme GT Explorer Master பதிப்பு ஆகிய இரண்டு பதிப்புகளை இன்று அது சீனாவில் வெளியிட்டுள்ளது.

அது தவிர, அதன் தனித்துவமான வடிவமைப்பில் உருவான, மெலிதானதும், 2 K-திரையைக் கொண்டதுமான  realme Book இனை அறிமுகப்படுத்தியதன் மூலம் அது முதன்முறையாக மடிகணனித் துறையில் காலடி வைத்துள்ளது. முன்னெப்போதையும் விட ஒரு உயர்தர தொகுப்புகளுடன் அதன் 1+5+T AIoT தொகுதி அமைப்பை உருவாக்கும் வகையில், realme தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கு இது ஒரு முக்கியமான படியாகும்.

realme இன் பிரதான நிறைவேற்று அதிகாரியும் அதன் நிறுவுனருமான Sky Li இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “realme நிறுவப்பட்டதிலிருந்து, உலகளாவிய இளைஞர்களுக்காக முன்னோக்கி செல்லும் வகையிலான தயாரிப்புகளைக் கொண்டுவருவதற்கான எமது நோக்கத்திலிருந்து நாம் ஒருபோதும் விலகியதில்லை. இளம் தலைமுறையினரை ஊக்குவித்தல் மற்றும் அவர்களை மகிழ்விக்கும் அம்சங்கள், அனுபவங்களை வழங்கும் வகையில், மேலும் பல AIoT தயாரிப்புகளை நாம் கொண்டு வருகின்றோம் என்பதை உலகெங்கிலும் உள்ள 100 மில்லியன் realme இரசிகர்களுக்கு, அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

இளைஞர்களின் வாழ்க்கைப் பயணத்துடன் இணைந்த வகையில், அவர்களால் ஈர்க்கப்படுவதற்கு அமைய, realme, GT Master பதிப்பு தொடரினை வடிவமைக்க, தொழில்துறையின் புகழ்பெற்ற வடிவமைப்பாளரான, நவோட்டோ புகாசாவா (Naoto Fukasawa) அவர்களை அது நாடியது. அவர் ஒரு தனித்துவமான வடிவமைப்பினை வழங்க வேண்டுமென்பதை தனது மனதில் கொண்டு இத்தயாரிப்புகளை வடிவமைத்தார். அதன் தனித்துவமான வடிவத்திற்கு மேலதிகமாக, ஸ்மார்ட்போன் வரலாற்றில் முதலாவது, வளைவான சைவ ரீதியான-தோல் வடிவமைப்புடன், அதன் பின்புறம் ஒரு சூட்கேஸின் அலை அலையான வரிகளை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

realme GT தொடருக்கு உரித்தான முதன்மையான செயல்திறனின் அடிப்படையில் அமைந்த, GT Explorer Master பதிப்பில் Qualcomm Snapdragon 870 புரொசசர், 12GB வரையான RAM இணைக்கப்பட்டுள்ளது. GT Master பதிப்பானது, Snapdragon 778G 5G புரொசசர், 8GB வரையான RAM  இனை கொண்டுள்ளது. GT Master பதிப்பு தொடரானது, Vapor Chamber Cooling System (நீராவி அறை கூலிங் தொகுதியை) கொண்டுள்ளது. இது அதன் முதன்மையான realme GT யினை தழுவியதான அம்சமாகும். இது சக்தி வாய்ந்த கேமிங் அனுபவங்களை எளிதாக கையாள இவ்விரண்டு தொலைபேசிகளுக்கும் உதவுகிறது.

அதன் வலிமையான செயல்திறனைத் தவிர, realme GT Master பதிப்புத் தொடரானது, 32MP Sony செல்பி கெமராவையும் கொண்டுள்ளது. இதற்கிடையில், GT Explorer Master பதிப்பானது, OIS உடன்  50MP Sony IMX766 பிரதான கெமராவை கொண்டுள்ளது. GT Master பதிப்பானது, 64MB பிரதான கெமராவுடன் வருகிறது. Portrait முதல் Landscape வரை, பகல் முதல் இரவு வரை எடுக்கின்ற புகைப்படங்கள் யாவும் மிருதுவான தோற்றத்துடன், தெளிவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பயனர்கள் முதன் முறையாக வீதி புகைப்படப் பயன்முறையை (street photography mode) இனையும் இதில் அனுபவிக்க முடியும். இதற்காக, பயனர்களுக்கு நிலையான குவியம் மற்றும் வீதி புகைப்பட filter கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இவை, வீதி புகைப்படம் எடுக்கும் தொழில்துறை DSLR கெமராக்களில் மட்டுமே காணப்படும் அம்சங்களாகும்.

இரண்டு தொலைபேசிகளிலும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடனான, பெரிய 120HZ Samsung AMOLED திரை மூலம் காட்சிகள் உயிரோட்டமாக்கப்படுகின்றன. GT Explorer Master பதிப்பு 56 பாகை வளைந்த திரையைக் கொண்டுள்ளதுடன், 10240-மட்ட பிரகாச சரிசெய்தல் மற்றும் HDR10+ இனை ஆதரிப்பதுடன், Dolby Atmos Dual Speakers மற்றும் Tactile Engine இனையும் ஆதரிக்கிறது.

realme GT Master பதிப்பின் விலை ரூ. xxx இலிருந்து ஆரம்பிக்கிறது. அதன் 6GB + 128GB விலை ரூ. Xxx ஆகவும் அதன் 12GB + 256GB விலை ரூ. xxx ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

realme யின் முதல் மடிகணினியான, realme Book ஆனது, மிக மெல்லிய 14.9 மி.மீ உலோக உடலில் இணைக்கப்பட்டுள்ளது. இது நீலம் மற்றும் சாம்பல் வண்ண அமைப்புகளில் கிடைக்கிறது.

இது 14 அங்குல 2K முழுக் காட்சியைத் தோற்றுவிக்கும் திரையுடன், 400 nits உச்ச பிரகாசம், 3 : 2 திரை விகிதத்தை கொண்டுள்ளது. பாரம்பரிய 16 : 9 திரைகளுடன் ஒப்பிடுகையில் Microsoft Office மென்பொருளில் உள்ள மேலதிக தகவல்களை இதில் காணலாம்.

realme Book ஆனது, 11th Gen Intel-Core புரொசசரை கொண்டுள்ளதுடன், இரட்டை மின்விசிறிகளுடன் அமைந்த அதியுயர் குளிர்விக்கும் தொகுதியையும் கொண்டு இயங்குகிறது. இதன் மூலம் உயர் வகை விளையாட்டுகளும் எவ்வித குறைபாடுகளுமின்றி இயங்குவதை இது உறுதி செய்கிறது. இது 16GB Dual-channel LPDDR4x RAM, 512GB வரையான PCIe® SSD சேமிப்பகம் வரை வழங்குகிறது. இதன் 65W Super-Fast Charge தொழில்நுட்பம் ஆனது, 11 மணிநேர மின்கல ஆயுளை வழங்குகிறது.

அதிலுள்ள இணைப்புகளைப் பொறுத்தவரை, ஒரு thunderbolt 4/USB 4 ports(i5 பதிப்பில் மாத்திரம்), ஒரு 3.5mm earphones port, ஒரு Type-A port, ஒரு Type C port உடன், realme Book ஆனது, புதிய Wi-Fi 6 தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது.

realme Book ஆனது, 2 HARMAN ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. அவை DTS HD stereo ஒலி விளைவுகளை வழங்குவதுடன், ஒன்லைன் வேலை மற்றும் கற்றலுக்கு ஏற்ற Dual Mic Noise Cancellation (இரட்டை ஒலி வாங்கி இரைச்சலை இரத்து செய்தல்) அம்சம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

realme இனது “PC Connect” அம்சமானது பயனர்கள் தங்கள் போன்களை தங்கள் மடிகணினியுடன் ஒத்திசைக்க உதவுவதுடன் அதிலுள்ள உயர் வகை செயலிகளை எளிதாக பயன்படுத்தவும் உதவுகிறது. இது வேலை மற்றும் கற்றலை மேலும் வசதியாக்குகிறது. இதில் Windows 10 நிறுவப்பட்டே வருகின்றமையும் ஒரு விசேட அம்சமாகும்.

realme Book ஆனது, 1.3 மி.மீ. பொத்தான் பதிவு ஆழத்துடனான (key travel) மூன்று மட்ட பின்புல ஒளி கொண்ட விசைப்பலகையை கொண்டுள்ளது. அத்துடன் ஒரே பொத்தானில் அமைந்த கைரேகை மற்றும் பவர் பட்டனையும் இது கொண்டுள்ளது.

realme GT Master பதிப்பு தொடர் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.realme.com இணையத்தை அணுகவும்.

realme பற்றி:

realme ஆனது வளர்ந்து வரும்  உலகளாவிய நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாகும். இது புதிய தொழில்நுட்பங்களை மிக இலகுவாக அடையும் வகையிலான உற்பத்திகளை வழங்கி, ஸ்மார்ட்போன் மற்றும் AIoT சந்தையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் வாழ்க்கைமுறைகளுக்கு அவசிமான பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உயர்ந்த அம்சங்களை உள்ளடக்கியவாறு, காலத்திற்கு ஏற்ற போக்கில், சிறப்பான வடிவமைப்புகளுடன், இளம் நுகர்வோருக்கு கட்டுப்படியாகும் விலையில் வழங்குகிறது.

2018 ஆம் ஆண்டில் Sky Li இனால் நிறுவப்பட்டு, அதன் “Dare to Leap” (முன்னேற பயமில்லை) எனும் உயிர் நாடிக்கு ஏற்ப, realme ஆனது, உலகின் 7ஆவது மிகப் பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளது. 2021 இன் இரண்டாம் காலாண்டு நிலவரப்படி, உலகளாவிய ரீதியில் சீனா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட 61 சந்தைகளில் realme தனது கால்தடத்தை பதித்துள்ளதுடன், 100 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களையும் அது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவலுக்கு, www.realme.com இனைப் பார்வையிடவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *