இலங்கையின் தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், சர்வதேச சமுத்திர தினத்தையிட்டு மேற்கொள்ளப்பட்ட, கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம் சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைபேறானதன்மைக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வாதுவை கடற்கரையில், ஞாயிறு தினத்தில், சூழல் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்கும் முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில், ராஜா ஜூவலர்ஸ் ஊழியர்கள் மும்முரரமாக பங்கேற்றதோடு, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
இப்பிரசாரத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ராஜா ஜூவலர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அத்துல எலியபுர, “இலங்கையில் நம்பகமான நவநாகரிக நகை வர்த்தக நாமம் எனும் வகையில், சுற்றாடல் நலன், பாதுகாப்பு, நிலைபேண்தகைமைக்காக நாம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். கடற்கரையை தூய்மைப்படுத்தும் திட்டம் போன்ற முயற்சிகள் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதும், ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பதன் முக்கியத்துவம் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். எதிர்கால சந்ததியினருக்காக எமது சமுத்திரங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது தொடர்பான கூட்டு முயற்சிகள், குறிப்பிடும்படியான மாற்றத்தை ஏற்படுத்தும் என நாம் நம்புகிறோம்.
ராஜா ஜூவலர்ஸ் ஊழியர்களின் கூட்டு முயற்சியில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் 100 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்பிரச்சாரத்தில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட, நிறுவனத்தின் சமூக ஊடக கணக்குகளில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவானது, இத்திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க ஏனையவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது.
சமூகப் பொறுப்பு வாய்ந்த ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில், ராஜா ஜூவலர்ஸ் எப்போதும் தான் பெற்றதிலிருந்து சமூகத்திற்கு மீளக் கொடுப்பதில் உறுதியாக இருந்து வருகின்றது. கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டமானது நிறுவனத்தின் வருடாந்த நிகழ்வு அட்டவணையில் உள்ள ஒரு முக்கிய பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிகழ்வுகளில் ஒன்றாகும். இது சூழல் பாதுகாப்பிற்கான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை காண்பிக்கிறது. அந்த வகையில் ராஜா ஜூவலர்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்துவதில் பெருமை கொள்வதோடு, இது நிறுவனத்தின் தலைமைத்துவத்தையும், சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
கடந்த ஒன்பது தசாப்த காலப்பகுதியில், ராஜா ஜுவலர்ஸ் இலங்கையின் கலாசாரத்தை எப்போதும் மதிக்கும் வர்த்தக நாமமாக இருந்து வருவதோடு, இலங்கையின் நகைத் தொழிற்துறையில் சாதனை படைத்த நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்றது. அதன் நேர்த்தியான கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் யாவும் உள்நாட்டில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலும் புகழ் பெற்றவையாகும். அதே நேரத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்த நகைகள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றவையாக அவை கிடைக்கின்றன. மிகச்சிறந்த இரத்தினக்கற்கள், சிர்கோன்கள் (Zircons), சுத்திகரிக்கப்பட்ட தங்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, நன்கு பயிற்சி பெற்ற நகை வடிவமைப்பாளர்களால், தனித்துவமான அலங்காரத்துடனான, காலத்தால் அழியாத படைப்புகளை அவர்கள் உருவாக்குகிறார்கள். ராஜா ஜுவலர்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டதிலிருந்து நம்பிக்கை, சிறப்பான சேவை, தனித்துவமான கைவினை தாயரிப்புடனான நகைகளை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுடன் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நீடித்த உறவை பேணி வருகின்றது.
ராஜா ஜூவலர்ஸ் கொண்டுள்ள பரந்துபட்ட தயாரிப்புகள் பற்றிய மேலேதிக தகவல்களுக்கு, www.rajajewellers.com எனும் அதன் இணையதளத்தை அல்லது www.fb.com/Rajajewellers.lk எனும் அதன் பேஸ்புக் பக்கத்தை அல்லது www.instagram.com/rajajewellers.lk எனும் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்வையிடவும்.
END