
இலங்கையில் காப்புறுதித் துறையில் முன்னணி வகித்து வருகின்ற ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம், மத்துகமவில் தனது புதிய கிளையை பெருமையுடன் திறந்து வைத்துள்ளது. பல்வகைப்பட்ட ஆயுள் காப்புறுதி தீர்வுகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்கள் இன்னும் கூடுதலான அளவில் அணுகக்கூடியதாக விசேடமாக வடிவமைத்து இக்கிளை அவர்களுக்கு வழங்குகின்றது.
நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. ரவி லியனகே மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. நிரஞ்சன் தங்கராஜா ஆகியோர் இந்த திறப்புவிழா நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். நிறுவனத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதொரு படியாக அமைந்துள்ள இந்நிகழ்வில் அதன் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மதிப்பிற்குரிய விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
குடும்பங்களின் வாழ்வு பிரகாசிப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஆயுள் காப்புறுதி முக்கிய பங்கு வகிக்கின்றது என நிகழ்வின் போது திரு. லியனகே அவர்கள் வலியுறுத்தினார். “தமது அன்பிற்குரியவர்களின் நலனை உறுதிப்படுத்தும் நோக்குடைய எவருக்கும் ஆயுள் காப்புறுதி மிகவும் அத்தியாவசியமான ஒரு முதலீடாகும். மத்துகம கிளையை திறந்து வைத்துள்ளதன் மூலமாக எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என இரு தரப்பினருக்கும் சௌகரியமான மற்றும் திறன்மிக்க வசதியை நாம் வழங்குகின்றோம். புத்தாக்கம் மற்றும் தலைசிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் மீது நாம் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பு, தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் நீடித்து நிலைக்கும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பியுள்ளதுடன், அவர்கள் தமது அபிலாஷைகளை தன்னம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்ல இடமளித்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறான, வாழ்நாள் தீர்வுகளை வழங்கி, அவர்களுடன் வலுவான உறவுமுறைகளை வளர்ப்பதில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது. இலங்கை எங்கிலும் வலுவான கிளை வலையமைப்புடன், வாடிக்கையாளர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமானதைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்தி, உயர் தர காப்புறுதி சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கு இந்நிறுவனம் உத்தரவாதமளிக்கின்றது.
வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தி, நாடெங்கிலும் தனது பிரசன்னத்தை விஸ்தரித்து, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான ஜனசக்தியின் தற்போதைய இலக்கில் மற்றுமொரு முக்கியமான படியை மத்துகம கிளை திறப்பு விழா குறித்து நிற்பதுடன், நிதியியல் ரீதியான பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதில் நம்பிக்கைக்குரிய கூட்டாளர் என்ற அதன் ஸ்தானத்தையும் மீள வலியுறுத்துகின்றது.
முற்றும்.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி குறித்த விபரங்கள்
1994 ஆம் ஆண்டில் ஒரு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி ஆயுள் காப்புறுதி), 30 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் புத்தாக்கத்தின் சிற்பியாகவும்,அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படுகின்ற நாமமாகவும் தொழிற்துறையில் தன்னை முத்திரை குத்தியுள்ளது. ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் நாடெங்கிலும் வலுவான பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன்,வளர்ச்சி கண்டு வருகின்ற தனது வலையமைப்பின் கீழ் 80 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் பிரத்தியேக அழைப்பு சேவை மையமொன்றையும் கொண்டுள்ளது. “வாழ்வுகளை மேம்படுத்தி,கனவுகளுக்கு வலுவூட்டுதல்” என்ற தனது நோக்கித்திற்கு அமைவாக,காப்புறுதி என்பதற்கும் அப்பாற்பட்ட சேவைகளை தனது வாடிக்கையாளர்கள் மற்றும் தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்கி,ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக மாறுவதில் ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. காப்புறுதி,நிதி மற்றும் முதலீட்டுத் துறைகளில் தொழிற்பாடுகளைக் கொண்டுள்ள ஜனசக்தி குழுமத்தின் ஒரு உறுப்பு நிறுவனமாக ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி இயங்கி வருகின்றது.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் விபரங்கள் வருமாறு: பிரகாஷ் ஷாஃப்டர், ரவி லியனகே, ரமேஷ் ஷாஃப்டர், வரினி டி கொஸ்தா, அனிகா சேனாநாயக்க, சிவகிறிஷ்ணராஜா ரெங்கநாதன், கலாநிதி நிஷான் டி மெல், கலாநிதி கிஹான் குணதிலக மற்றும் திலிப் டி எஸ். விஜேரத்ன.
புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள்



