தனித்துவமான முதற்தர கணினித்திரையான HUAWEI MateView இனை அறிமுகப்படுத்தும் Huawei

Huawei Consumer Business Group (BG) தனது நிறுவனத்தின் முதலாவது முதற்தரமான சுயாதீனமாக இயங்கக்கூடிய கணினித்திரையை  அறிமுகப்படுத்தியுள்ளது. “Mate” என்ற பெயர் தாங்கி வரும் இந்த புத்தம் புதிய கணினித்திரையானது Huawei இன் புத்தாக்கச் சிந்தனையை முற்றிலுமாக உள்ளடக்கியுள்ளது. இதன் அறிமுகத்தின் மூலம் Huawei ஒரு புதிய சந்தையில் நுழைவதுடன், அதன் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில்  மேற்கொண்டதைப் போலவே புதுமைகளை படைக்கும் உற்சாகத்துடன் மீண்டும் வருகின்றது. பரந்த அளவிலான ஸ்மார்ட் அம்சங்களை ஆதரிக்கும், அழகாக குறைந்தபட்ச  Wireless · Real Colour கணினித்திரையாக HUAWEI MateView, அடுத்த தலைமுறை ஸ்மார்ட் கணினித்திரை தயாரிப்பு பிரிவினை மீள்வரையறை செய்யவுள்ளது.

HUAWEI MateView என்பது 28.2-இன்ச் 3: 2 பேனலைக் கொண்ட ஒரு உயர் தரமான முழுமையான கணினித்திரை ஆகும். இது 3840 × 2560 நிலையான பிரிதிறனை ஆதரிப்பதுடன், முதற்தரமான காட்சி அனுபவத்தை அளிக்கிறது. அங்கு மிகச் சிறிய விபரங்கள் கூட திரையில் உண்மையாக மீண்டும் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு கணினித்திரையும் வண்ணங்களைத் துல்லியமாக வெளிப்படுத்தும் பொருட்டு தொழிற்சாலையில் அளவீடு செய்யப்படுகிறது. இது sRGB பயன்முறையில்  ΔE <1 in sRGBமற்றும் DCI-P3  பயன்முறையில் ΔE <2 ஆகிய வண்ண துல்லிய மதிப்பீட்டை அடைகிறது. மேலும், HUAWEI MateBook குடும்பத்தில் உள்ள பல குறிப்பேடுகளைப் போலவே, HUWAEI MateView TÜV Rheinland Low Blue Light  மற்றும் Flicker Free சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. இது தீங்கு விளைவிக்கும் ஒளி வெளியேற்றங்களை திறம்பட வடிகட்டுவதற்கும், ஸ்கிரீன் ஃப்ளிக்கர்களால் ஏற்படும் கண் சோர்வைத் தணிக்கும் அதன் திறனை உறுதிப்படுத்துகிறது.

HUAWEI தனது தொலைதொடர்பு நிபுணத்துவத்தை இங்கு பயன்படுத்தியுள்ளது. HUAWEI MateView கேபிள் இணைப்புகளை ஆதரிப்பதுடன், பாவனையாளர்கள் தங்கள் மொபைல் போன், நோட்புக், டெப்லெட்டை கம்பியில்லாமல் கணினித்திரையுடன் இணைப்பதன் மூலம் தமது வாழ்வை இலகுவாக்கிக் கொள்ள முடியும்.OneHop Projection இற்கு ஆதரவளிப்பது மட்டுமன்றி, கம்பியின்றி ​Desktop Modeஇனை ஆரம்பிக்கவும் HUAWEI MateView பாவனையாளர்களுக்கு உதவுகின்றது. இந்த பயன்முறையில், பாவனையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களின் கணினி சக்தியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுடன் பெரிய திரையில் முழுமையான உற்பத்தித்திறன் அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். கணினித் திரைக்குப் பின்னால், பாவனையாளர்கள் USB-C ports , USB-A ports , HDMI port, ஒரு Mini DisplayPort மற்றும் ஒரு 3.5mm audio jack உள்ளிட்ட ஒவ்வொரு அலுவலக பயன்பாட்டுக்கும் ஏற்ற பல்துறை போர்ட்ஸ்களுக்கான அணுகலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

HUAWEI MateView உடன் இணைக்கப்பட்ட மவுஸ் மற்றும் விசைப்பலகைகள் நோட்புக்குகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற இணைக்கப்பட்ட சாதனங்களுக்கான உள்ளீடு மற்றும் வழிசெலுத்தல் சாதனங்களாகப் பயன்படுத்தப்படலாம், இது பாவனையாளர்கள் அனைத்து சாதனங்களையும் மீண்டும் ப்ளக் செய்யாமல் பல சாதனங்களுக்கு இடையில் நெகிழ்வாக மாற்ற அனுமதிக்கிறது. இதற்கு அவர்கள் செய்ய வேண்டியது USB-C போர்ட் வழியாக HUAWEI MateView உடன் ப்ளக் செய்ய வேண்டியது மட்டுமே.

பாரம்பரிய கணினித்திரைகளைப் போலன்றி,HUAWEI MateView புத்திசாலித்தனமாக மறைந்த நிலையில் உள்ள HUAWEI Smart Bar இணை அறிமுகப்படுத்துகிறது. இரண்டு உயர் ஆற்றல் கொண்ட ஸ்பீக்கர்கள் இரண்டை முன்பக்கத்தில் கொண்டுள்ளதுடன், இது தரத்தில் குறைவின்றிய ஓடியோவை வழங்குகின்றது. இரைச்சல் குறைப்பு வழிமுறைகளைக் கொண்ட இரண்டு மைக்ரோஃபோன்கள் உள்ளமைக்கப்பட்டதுடன் நான்கு மீட்டர் வரையான தொலைவில் உள்ள மூலங்களிலிருந்து ஒலியை எடுக்கும் திறன் இதற்கு உள்ளது. HUAWEI MateView மூலம் பாவனையாளர்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ எங்கிருந்து அழைத்தாலும், அவர்கள் எப்போதும் தெளிவாக  செவிமடுக்கப்படுவது உறுதிசெய்யப்படுகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *