தகவல் தொடர்பாடல் சேவைகளுக்கான நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வேகமாக அதிகரித்து வரும் செலவுகளின் காரணமாக, தமது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பெரும் சிரமங்களை நன்கு அறிந்துள்ளது.
தமது பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில நிவாரணங்களை வழங்கும் பொருட்டு, HUTCH தனது வாடிக்கையாளர்களுக்கு 100% வரையான போனஸ் அழைப்பு நேரத்தை அவர்களது ரீசார்ஜ்களுக்கு வழங்குவதற்காக ‘HUTCH Relief Recharge Bonus’ (Hutch நிவாரண மீள்நிரப்பல் போனஸ்) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியான இந்த நேரத்தில் தமது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், Hutch நிறுவனம் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக இத்திட்டமும் அமைந்துள்ளது.
HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா இந்த சலுகை பற்றி கருத்துத் தெரிவிக்கையில், “தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், மக்கள் தமது கையடக்கத் தொலைபேசிக்கு ரீசார்ஜ்களை மேற்கொள்வதில், நிதி ரீதியாகவும், போக்குவரத்து ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலவிடும் பணத்திற்கு பெறுமதியான அதிக அழைப்பு நேரத்தை வழங்குவதற்காக இத்திட்டத்தை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் அவர்கள் தங்களது கணக்கை மீள் நிரப்புவதற்கு அடிக்கடி வெளியில் செல்வதையும் நாம் குறைக்கிறோம்.” என்றார்.
இத்திட்டத்தின் மூலம், Hutch முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள், ரூ. 250 முதல் ரூ. 1,050 வரையிலான குறிப்பிட்ட ரீசார்ஜ் பெறுமதிகளுக்கு, 30 நாட்கள் வரை செல்லுபடியாகும் வகையில், எந்தவொரு வலையமைப்பிற்கும் 500 நிமிடங்கள் வரையான அழைப்பு நேரத்துடன், 100% வரையான இலவச அழைப்பு நேர போனஸை பெறுவார்கள்.
END