தலையால் சிந்தியுங்கள்” சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும் SHAKO

இலங்கையில் மோட்டார் சைக்கிள் தலைக்கவச பாதுகாப்பு தொடர்பில் முன்னணியில் உள்ள SHAKO தலைக்கவசம், பாதுகாப்பு, சௌகரியம், ஸ்டைல் ​​ஆகிய 3 முக்கிய கூறுகளின் அடிப்படையில் புதிய தரத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய SHAKO தலைக்கவச வரிசையை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது. SHAKO இலங்கை மக்களை “தலையால் சிந்தியுங்கள்” எனும் சந்தைப்படுத்தல் பிரசாரத்தின் மூலம் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்துகிறது. மேலும், பாதுகாப்பான தலைக்கவசம் தொடர்பான அவர்களது தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ள SHAKO தலைக்கவசங்கள், அதற்கான விசேடத்துவம் மற்றும் அர்ப்பணிப்புடன் தலைக்கவசத் துறையில் முன்னணியில் திகழ்கிறது.

பெருமைக்குரிய Stafford குழுமத்தில் அங்கம் வகிக்கும் Inventive Polymers Lanka நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு உள்ளக தர சோதனைகள் மூலம் SHAKO தலைக்கவசங்கள் தரத்தை மேலும் உறுதி செய்கின்றன. அத்துடன் SLS சான்றிதழுடன் வரும் ஒவ்வொரு SHAKO தலைக்கவசங்களும் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. வீதியில் நம்பகமான பாதுகாப்பை உறுதி செய்யும் SHAKO தலைக்கவசங்களின் ஒவ்வொரு அம்சமும் ஒப்பிடமுடியாத பாதுகாப்பையும், மோட்டார் சைக்கிளை செலுத்தும் ஒவ்வொருவருவருக்கும் மன அமைதியுடன் சவாரி செய்யும் வசதியையும் உறுதி செய்கிறது.

தலைக்கவச உற்பத்தியின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு கட்டத்திலும் நுணுக்கமாக கவனம் செலுத்தி, சந்தையில் 100% இலங்கை தயாரிப்பு எனும் பெருமையுடன் SHAKO தலைக்கவசங்கள் பெருமையுடன் அறிமுகமாகின்றன.

SHAKO தலைக்கவசங்களின் காற்று இயக்கவியல் (Aero Dynamic) வடிவமைப்பு காரணமாக, பயணிக்கும்போது காற்றினாலான தடையை குறைத்து, அதிக வேகத்தின் போது, நிலையான தன்மை மற்றும் கட்டுப்பாட்டை பேணுகிறது. SHAKO தலைக்கவசங்களின் வெளிப்புற ஓடானது, வலுவான புதிய Virgin ABS இனால் ஆக்கப்பட்டுள்ளதனால், அது தலைக்கவசங்களின் பாதுகாப்புத் தன்மையை அதிகரித்து, அதனை மேலும் பலப்படுத்துவதோடு, அதன் நிறையையும் குறைக்கிறது.

தலைக்கவசங்களுக்குள் உள்ள உயர்தர உட்புற துணிப் படலமானது, அதிக சொகுசை வழங்கும் அதே நேரத்தில், அதன் புத்தாக்கமான வடிவமைப்பானது, காற்றின் இரைச்சலைக் குறைத்து மிருதுவான, மிகவும் சுவாரஸ்யமான பயணத்தை உறுதி செய்கிறது. அத்துடன், அதிக அடர்த்தி கொண்ட EPS படலமானது, தாக்கத்தை உச்சபட்சம் உறிஞ்சுவதை உறுதி செய்து, மோதலின் போது சாரதிக்கு ஒப்பிடி முடியாத பாதுகாப்பை வழங்குகிறது.

வாகனத்தை செலுத்தும்போது வீதியில் தெளிவாகத் தெரிதல் மற்றும் வீதியில் பாதுகாப்பை மேம்படுத்த, SHAKO தலைக்கவசங்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒன்று சேர்க்கிறது. அதன் தெரிவு செய்யப்பட்ட வகைகளில், காணப்படும் கீறல் எதிர்ப்பு (Anti-Scratch) வைசர்கள் (Visors), அனைத்து நிலைமைகளிலும் தெளிவாக பார்ப்பதை உறுதி செய்யும் அதே சமயம், சீட் பெல்ட் மூலப்பொருளால் ஆக்கப்பட்ட உயர்தர பாதுகாப்பு கொண்ட தலைக்கவச பட்டி மற்றும் கொக்கிகள் சாரதிக்கு உச்சபட்ச பாதுகாப்பையும் மன அமைதியையும் வழங்குகின்றன.

இலங்கையில் தலைக்கவசத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் SHAKO தலைக்கவசங்கள், மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது பாதுகாப்பான, வசதியான பயண அனுபவத்தை பெறுவதற்காக SHAKO உடன் இணையுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. உயர்தர SHAKO தலைக்கவசம் மூலம் பயண வசதி, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்து, மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களை வலுவூட்டுவதே SHAKO வின் முக்கிய நோக்கமாகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *