தொடர்சியாக 22ஆவது வருடமாக கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தை ஒளியூட்டும் சுதேசி கொஹொம்ப

இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் 2023 எசல திருவிழாக்களுக்கு, முன்னணி மூலிகைகள் கொண்ட தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளர்களான Swadeshi Industrial Works PLC நிறுவனத்தினால் ஒளியேற்றப்பட்டன.  ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ எனும் கருப்பொருளின் கீழ் இந்த ஒளியூட்டும் நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்வுகள் 2023 ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 04ஆம் திகதி நிறைவடைந்தன. அத்துடன் சுதேசி நிறுவனம் தொடர்ச்சியாக 22ஆவது வருடமாக இந்த ‘ஆலோக பூஜா’ நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சொந்தமான நிறுவனம் என்ற வகையில், இவ்வாறான வருடாந்த ‘ஆலோக பூஜா’ போன்ற செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பாதுகாப்பதை கடமையாக கருதுவதாக, சுதேசி நிறுவனத்தின் தலைவி அமரி விஜேவர்தன தெரிவித்தார்.

அனைத்து வழிபாட்டாளர்களின் நலனுக்காக மாத்திரமன்றி நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்டுவதனையும் இது அடிப்படையாகக் கொண்டு, சுதேசியினால் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் ஒளியூட்டப்பட்டு வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த ஓளியூட்டும் நிகழ்வுகளைத் தொடர்ந்து, இலங்கையின் பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையான வண்ணமயமான கலாசாரப் போட்டிகளும் இடம்பெற்றன.

‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ நிகழ்வுடன் இணைந்ததாக, கதிர்காமத்தில் உள்ள சுகாதார மருத்துவ அலுவலகத்தில் ‘சுதேசி கொஹொம்ப பேபி மாத்ரு சத்காரய’ எனும் நிகழ்ச்சியை சுதேசி நடத்தியது. இங்கு 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு அத்தியாவசியமான பராமரிப்புத் தயாரிப்புகளை சுதேசி கொஹொம்ப பேபி நன்கொடையாக வழங்கியது.

மகாவம்சத்தின் படி, புத்த பெருமான் தனது மூன்றாவது இலங்கை விஜயத்தின் போது தர்மத்தை போதிப்பதற்காக கதிர்காமம் கிஹிரி உயனவிற்கு விஜயம் செய்ததன் நினைவாக மகாநாக மன்னனால் கிரி வெஹெர கட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதாகச் செய்த சபதத்தை நிறைவேற்றும் வகையில் கதிர்காமம் தேவாலயம் துட்டகைமுனு மன்னரால் கட்டப்பட்டது. கதிர்காம கடவுள், இலங்கையில் மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல்வேறு இன, மதங்களைச் சேர்ந்த மக்கள் வழிபடுகின்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தம்பதெனிய ரஜமஹா விகாரையின் ‘ஸ்ரீ தலதா மாளிகை’ மற்றும் பழங்கால சுவரோவியங்கள், அதன் பெருமையை மீண்டும் கொண்டு வரும் வகையில் திருமதி அமரி விஜேவர்தனவினால் 2013 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டன.

1927 இல் களனி ரஜ மகா விகாரையின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்த ஹெலனா விஜேவர்தன லமாதெனியின் கொள்ளுப் பேத்தியே திருமதி அமரி விஜேவர்தன ஆவார்.

அத்துடன், தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலய, அலுத் நுவர தெடிமுண்ட தேவாலாயம், கண்டி ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம், சப்ரகமுவ மகா சமன் தேவலயம், ரெதிகம ரிதி விஹாரை, லங்கா திலக ரஜ மாக விகாரை, தெரணியகல சமன் தேவாலயம், அம்மதுவ குடா கதரகம தேவலாயம், சங்கபலி ரஜ மகா விகாரை, கொலம்பகம ரஜ மாக விகாரை, தம்பதெனிய ரஜா மகா விகாரை, கேரகல ரஜ மகா விகாரை ஆகியவற்றின் வருடாந்த ஆலோக பூஜைகளுக்கும், சுதேசி பங்களிப்பு செய்து வருகின்றது.

100% முழுமையான உள்ளூர் நிறுவனமான சுதேசி, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. சுதேசி கொஹொம்ப ஆனது, இயற்கை அன்னையை பராமரித்தல், கலாசார விழுமியங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிலைபேறான திட்டங்களை நிறைவேற்றுதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது.

‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ ‘சுதேசி கொஹொம்ப மிஹிந்தலா சத்காரய” உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள ஆலயங்களின் வருடாந்த ஒளியேற்றல் நிகழ்வுகள், வேம்பு மர நடும் பிரசாரங்கள், இலங்கையில் வரட்சியான பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கும், பாடசாலைகள், விகாரைகளுக்கு நீர்த் தொட்டிகளை நன்கொடையாக வழங்குதல், கொஹொம்ப பேபி பராமரிப்பு பொருட்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சுதேசி நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு முயற்சிகளாக குறிப்பிடலாம்.

“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், சுதேசியாகிய நாம் எமது அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். நாம் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவை. சுதேசி கொஹொம்ப மற்றும் ராணி சந்தனம், கொஹொம்ப பேபி ஆகியன இங்கிலாந்தின் Vegetarian Society, UK யின் அங்கீகாரம் பெற்றவையாகும்.” இந்த உறுதிமொழியானது, நிறுவனத்தின் முன்னோக்கிய சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ளவும் உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளிக்கின்றது. உண்மையான இலங்கை நிறுவனமான சுதேஷி, கடந்த 80 வருடங்களில் தொழில்துறையில் முந்திக் கொண்டு தனது பெயரில் பல்வேறு முதல் சாதனை உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது.

இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசியின் முன்னணி வர்த்தகநாமங்களில் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பெர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் ஆகியவை உள்ளடங்குகின்றன. சுதேசி நிறுவனம், இலங்கையில் முதலிடத்திலுள்ள மூலிகை வர்த்தகநாமமான ‘கொஹொம்ப ஹேர்பல்’ மற்றும் பாரம்பரிய அழகு வர்த்தகநாமமான ராணி சந்தனம் ஆகியவற்றை தயாரித்து சந்தைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், ISO 9001 – 2015 தரச் சான்றிதழின் அடிப்படையில் அவை தயாரிக்கப்படுகின்றன.

Photo Caption:

சுதேசி நிறுவனத் தலைவி திருமதி அமரி விஜேவர்தன, கதிர்காமம் கிரிவெஹெர ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கோபவக்க தம்மிந்த தேரர், ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலேமே திஷான் விக்ரமரத்ன குணசேகர மற்றும் சுதேசி நிறுவன அதிகாரிகளை படத்தில் காணலாம்…

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *