தொடர்ந்து 15ஆவது தடவையாக ஆண்டின் சிறந்த தரக்குறியீட்டுக்கான விருதை வென்ற சிங்கர்

இளைஞர்கள் தெரிவு தரக்குறியீட்டு விருதை மீண்டும் தனதாக்கியது

நாட்டின் முன்னணி நுகர்வோர் நீடித்த பொருட்களின் சில்லறை விற்பனையாளரான சிங்கர் ஶ்ரீ லங்கா நிறுவனம், SLIM People’s Awards விருது விழாவில், மிக முக்கியமான விருதுகளை வென்று, நுகர்வோர் நீடித்த பொருட்கள் துறையில் அதன் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. சில்லறை வர்த்தக ஜாம்பவானான சிங்கர் நிறுவனம், தொடர்ந்து 15ஆவது முறையாக, People’s Brand of the Year (ஆண்டின் மக்கள் விரும்பும் சிறந்த தரக்குறியீடு) விருதின் மூலம், இந்த மறக்கமுடியாத இரவில் முடிசூடியுள்ளது.

அந்த வகையில் மற்றுமொரு சாதனையை நிலைநாட்டியுள்ள சிங்கர் நிறுவனம், ஆண்டின் சிறந்த நுகர்வோர் நீடித்த பொருட்களின் தரக் குறியீட்டு விருதை பெற்றுள்ளதன் மூலம், இலங்கையின் முதன்மையான நுகர்வோர் நீடித்த பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனையாளராக அது தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்சியான வெற்றியை ஈட்டி வரும் சிங்கர் நிறுவனம், 3 ஆண்டுகளுக்குப் பின்னர் வருடத்தின் இளைஞர்களின் தெரிவான தரக்குறியீட்டுக்கான விருதை மீண்டும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் தொடர்பாடல் மூலோபாயங்கள் மற்றும் நவீன தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் மீள் புதுப்பிக்கப்பட்ட தனது கவனம் செலுத்தல் உத்திகள் காரணமாக, இளைஞர்களை ஈர்க்கும் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. ஒரு பாரம்பரியமான தரக்குறியீட்டின் வலுவான முன்னேற்றமானது, அதன் மெதுவானதும், மிகவும் முற்போக்கானதுமான, எதிர்கால நோக்கின் மூலம் அடையப் பெறுகிறது.

தொடர்ச்சியாக 15ஆவது ஆண்டாக இடம்பெறும் SLIM People’s Awards விருதுகள், மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் தரக்குறியீடுகள் மற்றும் ஆளுமைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இலங்கையில் சந்தைப்படுத்தல் தொடர்பான தேசிய நிறுவனமான, Sri Lanka Institute of Marketing (SLIM) இனால் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் மக்கள் தாம் விரும்பும் தரக்குறியீடுகள் மற்றும் ஆளுமைகளுக்கு வாக்களிப்பதற்கான வசதியையும் அது ஏற்படுத்தித் தந்துள்ளது.

இவ்விருதுகள் தொடர்பில் சிங்கர் ஶ்ரீ லங்கா பி.எல்.சி. குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மகேஷ் விஜேவர்தன தெரிவிக்கையில், “இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற விருது வழங்கும் விழாவில் மூன்று விருதுகளை வென்றமையானது, எமக்கு மிகவும் பெருமையளிக்கிறது. இவ்விருது வழங்கும் விழாவின் ஆரம்ப காலத்திலிருந்தே, சிங்கர் நிறுவனம் ஆண்டின் சிறந்த மக்கள் தெரிவு தரக்குறியீட்டு விருதை (People’s Brand) வென்று வருகிறது. இவ்விருதுகள், எமது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மிகச் சிறந்த சில்லறை வர்த்தகத் தளமாக சிங்கரை மாற்றுவதற்காக, தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் எமது அங்கத்தவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்கான வெளிப்பாடாகும். அதிலும் முக்கியமான விடயம் யாதெனில், நாம் உண்மையாகவே வாடிக்கையாளர் மையமாக செயற்படுபவர்கள் என்பதை, இவ்விருதுகள் மூலம் மக்கள் எமக்கு தீர்ப்பாக வழங்கியுள்ளனர்.” என்றார்.

சிங்கர் ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர், ஷனில் பெரேரா தெரிவிக்கையில், “இவ்விருதுகள் குறித்து நாம் உண்மையில் பெருமிதம் கொள்வதோடு, இது சில்லறை வர்த்தக பிரிவில் புதிய உச்சத்தை எட்டுவதற்கு எம்மை மேலும் ஊக்கமளிக்கிறது. எமது வாடிக்கையாளர்களுடன் சிறந்த விதத்தில் எவ்வாறு தொடர்பை பேண வேண்டும் என்பதன் அவசியத்தை அடையாளம் கண்டு, கடந்த 2 வருடங்களாக பல்வேறு புதுமையான சந்தைப்படுத்தல் அணுகுமுறைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம், அத்துடன் இலங்கையில் முன்னணி நுகர்வோர் நீடித்த பாவனைப் பொருட்களின் வழங்குநராக சிங்கர் நிறுவனத்தை நிலைநிறுத்துவதற்காக, எமது குழுவினர் அயராது உழைத்து வருகின்றனர். இவ்விருதுகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள நுகர்வோரின் நாடித்துடிப்பின் உண்மையான பிரதிபலிப்பாகும். ஒரு சந்தைப்படுத்தல் நிறுவனமாகிய எமது முக்கிய குறிக்கோள், நுகர்வோரின் இதயங்களையும்  அவர்களது உணர்வையும் வெல்வதேயாகும். இவ்விருதின் மூலம் விருப்பத்திற்கும் பாராட்டுக்கும் உரியவர்களாக நாம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறோம். எனவே இதனை சாத்தியமாக்கிய எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ”

விற்பனையை மேம்படுத்தல், ஊழியர்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயற்றிறனை மேம்படுத்துதல், முக்கியமான தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுத்தல் மூலம்,  வலுவான உத்திகளைக் கொண்டு சிங்கர் நிலைத்தன்மையையும் மீள் எழுச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது. Fitch தரப்படுத்தலில் சிங்கர் ஶ்ரீ லங்கா பி.எல்.சி ஆனது, (AA) LKA நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், வலுவான நிதி வெளிப்படுத்தல்களையும், கொவிட்-19 தொற்றுக்கு மத்தியிலான பாரிய சவால்களுக்கு மத்தியிலும், ஒரு வலுவான திருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. அண்மையில், SLIM Restart Resilience (மீள் தொடக்கம் மீண்டெழுதல் விருதுகள்) விருது விழாவில், தங்க விருதையும் சிங்கர் நிறுவனம் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிங்கர் ஶ்ரீ லங்கா பி.எல்.சி ஆனது, இலங்கையின் நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்கள் சந்தையில் முன்னணியில் உள்ளதுடன், நாடளாவிய ரீதியில் நாளாந்தம் வளர்ந்து வரும் அதன் வாடிக்கையாளர்களுக்காக, பரந்த அளவிலான உயர்தர உள்ளூர் மற்றும் பிரபல்யமான சர்வதேச வர்த்தக நாமங்களைக் கொண்ட பொருட்களை வழங்குவதில் புகழ் பெற்று விளங்குகின்றது. சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் காட்சியறைகள், இலத்திரனியல் வணிகத் தளம் (www.singer.lk) உள்ளிட்ட 432 சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் சிங்கர் நிறுவனம் தொடர்ச்சியாக அதன் வாடிக்கையாளர்களை சென்றடைகின்றது. சிங்கர் நிறுவனம், 600 இற்கும் மேற்பட்ட இலத்திரனியல் பொருட்கள், 1,200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50 இற்கும் மேற்பட்ட சர்வதேச புகழ் வாய்ந்த வர்த்தக நாமங்களுடனான பொருட்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கொள்வனவின்போது நுகர்வோருக்கு அதிக நெகிழ்வுத் தன்மையை வழங்கும்  பொருட்டு, சிங்கர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டி இல்லாத கொள்வனவுத் திட்டங்கள், விசேட தள்ளுபடிகள், மாற்றீடு தள்ளுபடிகள், இலவச வழங்கல்கள், கடனட்டை சலுகைகளையும் வழங்கி வருகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *