தொலைத்தொடர்பாடல் அனுபவத்தை “ஸ்மார்ட்”தெரிவாக மீள்வரையறை செய்யும் HUTCH

புத்துணர்ச்சியூட்டும் புதிய தொடர்பாடல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள HUTCH அதன் சந்தை நிலையை “ஸ்மார்ட்” தொலைத்தொடர்பாடல் சேவை அனுபவத்தை வழங்குபவராக நிலைநிறுத்தியுள்ளது.

ஒரு பாரிய மற்றும் சிறந்த வலையமைப்பு, உள்ளமைக்கப்பட்ட நுகர்வோர் வசதிகள் மற்றும் பணப் பொருட்களுக்கான சிறந்த பெறுமதி ஆகியவற்றின் மூலம் ஒரு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, HUTCH அதன் நம்பிக்கையான மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளத்திற்கு சேவை செய்ய முடிந்தது. மேலும், HUTCH நிறுவனம் தான் மட்டுமே வழங்கக்கூடிய சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் உறுதிப்படுத்த பல புதிய முயற்சிகளை திட்டமிட்டு வைத்துள்ளது.

“Yanko! Vango! Let’s Go! HUTCH Go Smart” எனப் பெயரிடப்பட்டுள்ள  Hutch இன் புதிய வர்த்தகநாம பிரசாரமானது தேசமானது எழுந்து, ஸ்மார்டான முறையில் சிந்திக்கவும், வாழவும், நடவடிக்கை எடுப்பதற்கும் அழைப்பு விடுக்கின்றது.

“இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் வினையூக்கியாக நாங்கள் இருக்கிறோம் என்று நம்புகிறோம். குறிப்பாக இலங்கையின் இளைஞர்களை மாற்றத்தைத் தழுவி வேலை செய்யவும், கற்றுக்கொள்ளவும், விளையாடவும், ஸ்மார்டாக கனவு காணவும் ஊக்குவிப்போம், இதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கை இலக்குகளை அடைய முடியும்,” என Hutchஇன் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரியான ரம்சீனா மொர்சத் தெரிவித்தார்.

பல சந்தை ஆய்வுகள் நுகர்வோர் ஒதுக்கீட்டு வரம்புகள் , தரவு பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் அதன் விளைவாக வரும் கட்டணப்பட்டியலினால் ஏற்படும் அதிர்ச்சிகள், மோசமான வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்துறையில் உள்ள பிற இடைவெளிகள் குறித்து வாடிக்கையாளர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன.

முழுமையான வாடிக்கையாளர் சார்ந்த வர்த்தகநாமமாக, வாடிக்கையாளர் எதிர்கொள்ளும் சிக்கல்களை விரைவாக தீர்க்க HUTCH முன் வந்ததுடன்,  அண்மைய ஆண்டுகளில் நிறுவனத்தின் வெற்றிகரமான சந்தை ஊடுருவலுக்கு பங்களித்த ஒரு முக்கிய காரணம் இதுவாகும். ஒரு பாரிய மற்றும் சிறந்த 4G வலையமைப்புடன் தற்போது வாடிக்கையாளர்கள் எதை எதிர்பார்க்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டு அதன் சேவை வழங்கல்களுக்கு தொடர்ச்சியான மேம்படுத்தல்களை மேற்கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய தயாராகவுள்ளது.

புதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care app செயலி மற்றும் அதன் தனித்துவமான HUTCH cliQ app ஊடாக செலுத்தும் பணத்துக்கு சிறந்த பெறுமதியை வழங்குவதுடன், தனது பெக்கேஜ்களின் கட்டணம் மற்றும் பாவனை தொடர்பில் 100% வெளிப்படைத்தன்மையை பேணுகின்றது. HUTCH இணையத்தளம் ஊடாக அணுகும் போதோ, பெக்கேஜ்களை செயற்படுத்திக்கொள்ள Hutch USSD நிரற்தொடர்களை டயல் செய்யும் போதோ விலைகள் மற்றும் பெக்கேஜ் விபரங்கள் தொடர்பில் முறையாக அறிவிக்கப்படுவர். முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இரு சாராரும் தமது தரவு ஒதுக்கீட்டு வரம்பை எட்டும்போது எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படுவார்கள், இது அவர்களின் பிரதான நிலுவைத் தொகையிலிருந்து தேவையற்ற விதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்கிறது.

Hutch தனது வாடிக்கையாளர் சேவையை, அர்ப்பணிக்கப்பட்ட துரித அழைப்புச் சேவை , சமூக ஊடகங்கள், வட்ஸ்எப், இணையத்தளம் மற்றும் ஹட்ச் செல்ப் கேர்  மூலம் முழுமையான ஸ்மார்ட் அனுபவத்தை வழங்கும் பல்வேறு அணுகல் புள்ளிகள் வழியாக பலப்படுத்தியுள்ளது.

புதிய பிரசாரம் தொடர்பில் HUTCH  நிறுவனத்தின் பிரதான  நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா கருத்து தெரிவிக்கையில், “இன்று, ஸ்மார்ட் தொலைத்தொடர்பு வர்த்தகநாமமாக ஒரு புதிய பயணத்தை நாங்கள் ஆரம்பிப்பதுடன், இது தனது அனைத்து நடவடிக்கைகளிலும் விவேகமானதாகவும், உணர்திறன் உடையதாகவும் இருக்கிறது, ஏனெனில் நாங்கள் எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை மட்டுமே மனதில் வைத்திருக்கிறோம். இலங்கை மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வேறுபாட்டை மிகவும் நடைமுறை சார்ந்த மற்றும் மலிவு வழிமுறைகள் மூலம் தடுப்பதில் துணிச்சலான முன்னேற்றத்தை எடுக்க நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பல வகையான புதுமையான திட்டங்கள் மற்றும் அணுகல் புள்ளிகள் எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுடன் உண்மையிலேயே பொருந்துகிறது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடிந்தது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறந்த சேவை கிடைப்பதை உறுதி செய்வதற்காக இதுவரை நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்ளலாம், மேலும் புதிய ஹட்ச் அனுபவத்தை முயற்சி செய்ய அனைவரையும் அழைக்கிறேன்!”

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *