நவீன குடும்பத்திற்கான புராதன இலங்கை மூலிகையிலான ஆரோக்கிய தீர்வு Hemas அறிமுகப்படுத்தும் ‘பிராசர’ ஆயுர்வேத தயாரிப்புகள்

‘பிராசர’ புராதன ஆயுர்வேத செயன்முறைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும், 100% இயற்கையான நாட்டு மருத்துவச் சாறுகளைக் கொண்டுள்ளது. இது நவீன குடும்பத்தினர் எதிர்பார்க்கும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்ற தயாரிப்புகளாக வருகின்றன. சவர்க்காரம், பற்பசை, பேஸ் க்ரீம், பேஸ் வொஷ், ஆயுர்வேத டொனிக் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராசர தயாரிப்பு வகைகள் யாவும், தலைமுறை தலைமுறையாக பரிமாற்றப்படும் இலங்கை பாரம்பரிய மூலிகைகள் மற்றும் பாரம்பரிய செயல்முறைகள் மூலம் தயாரிக்கப்பப்படுகின்றன. ஆயுர்வேத நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிராசர உற்பத்திகள், நுகர்வோருக்கு உகந்த ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வை உறுதிப்படுத்தும் முழுமையான ஆயுர்வேத தயாரிப்புகளாகும்.

இன்றைய நுகர்வோர், ஆரோக்கியம் தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாகவும், தாம் எதை கொள்வனவு செய்ய வேண்டும் என்பதில் விழிப்புடனும் இருக்கின்றமையை தெளிவாகக் காண முடிகின்றது. அதே நேரத்தில், அவர்கள் ஆயுர்வேத மருத்துவ நலன்கள் மற்றும் ஆயுர்வேத பொருட்கள் உள்ளடக்கப்பட்ட தயாரிப்புகளில் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

Hemas Manufacturing (Pvt) Ltd. நிறுவனமானது, நுகர்வோரின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் அதே வேளையில், சிறந்த தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. அந்த வகையில் பிராசர எனும் புதிய வர்த்தகநாமத்தை Hemas நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இது முழுக் குடும்பத்தினருக்குமான முழுமையான ஆயுர்வேத தயாரிப்பு வகைகளாக வருகின்றன. பிராசர எனும் பெயரானது சிங்கள மொழியில் ‘பிராணயட்ட சாரயக்’ (ஆன்மாவிற்கு சாராம்சம்) என பொருள் பெறுவதோடு, இவ்வர்த்தக நாமம் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வை மையமாகக் கொண்டு இலங்கையர்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்வர்த்தகநாமத்தின் மிகவும் தனித்துவமான தயாரிப்புகளில், பிராசர சாரம் அல்லது தைலமானது, இலங்கையிலுள்ள அரிய வகை மூலிகைகளைப் பயன்படுத்தி பண்டைய இலங்கைக்கே உரித்தான செயன்முறைகளை பின்பற்றி தயாரிக்கப்படுகிறது. இது உடலின் இயற்கைச் சமநிலையை பேண உதவுவதோடு, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட முழுக் குடும்பத்திற்கும் ஏற்றதாக விளங்குகின்றது.

இலங்கை மூலிகை மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட, புதிய பிராசர சவர்க்காரமானது, தூய்மையான, ஆரோக்கியமான சருமத்தை வழங்குவதோடு, பிரகாசமளிக்கும் பேஸ் கிரீம் ஆனது, சருமத்தின் சீரற்ற நிறத்தை நீக்கி, பொலிவான சருமத்தை வழங்குகிறது. தூய்மைப்படுத்தும் பேஸ் வொஷ் ஆனது, தெளிவான மற்றும் பிரகாசமான சருமத்தை வழங்கி தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. பாரம்பரிய அரிய மூலிகைகளை உள்ளடக்கிய பிராசர பற்பசையானது, முழுமையான வாய்ச் சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. உடலை சுத்திகரிக்கச் செய்யும் அருந்தக் கூடிய டானிக்கானது, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஒரு மருந்தாகும். இது ஆரோக்கியமான சருமம், முடி, நகங்களை பேண உதவுவதோடு, அவற்றிற்கு போசணையையும் வழங்குகின்றது. அனைத்து பிராசர தயாரிப்புகளும் ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு, சருமத்தில் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது என பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய பிராசர பராமரிப்பு தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் செயற்றிறன் ஆகியன ஆயுர்வேத வல்லுனர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அனைத்து பிராசர தயாரிப்புகளும் சிறந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை கடைப்பிடித்து தயாரிக்கப்படுகின்றன. பிராசர உற்பத்திகள், Hemas நிறுவனத்தின் 100% முழுமையான இலங்கை வர்த்தக நாமமாக இருப்பதன் காரணமாக, முழுக் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கும் ஆயுர்வேத மூலப்பொருட்களின் நன்மையுடன் வெளிவரும் நம்பகமான வர்த்தகநாமமாக திகழ்கின்றது. பிராசர தயாரிப்பு வகைகள் விரைவில் பல்பொருள் அங்காடிகள் (Super Market), பெரிய பலசரக்குக் கடைகள், அழகுசாதன பொருட்கள் விற்கும் நிலையங்கள், மருந்தகங்கள், ஆயுர்வேத நிலையங்களில் கிடைக்கும்.

Hemas Manufacturing (Pvt.) Ltd ஆனது, 70 வருட பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கையின் மிகப் பழமையான கூட்டு நிறுவனங்களில் ஒன்றான Hemas Holdings PLC யின் ஒரு அங்கத்துவ நிறுவனமாகும். விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG), சுகாதார பராமரிப்பு, மருந்துகள், போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் நாட்டின் உற்பத்தித் துறைகளில் Hemas நிறுவனம் முன்னோடியாக இருந்து வருகிறது. Hemas நிறுவனத்தின் பிரத்தியேகமான உற்பத்திகள் யாவும் தினமும் மில்லியன் கணக்கான நுகர்வோரின் வாழ்க்கையை தொடுகின்ற பல்வேறு நம்பகமான மற்றும் மதிப்புமிக்க நுகர்வோர் தயாரிப்புகளாக வெளி வருகின்றன

-END-

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *