நாடு முழுவதும் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களிடையே சிறந்த வாய்ச் சுகாதாரத்தை ஊக்குவிக்கும் க்ளோகார்டின் நடமாடும் பல் மருத்துவப் பிரிவு

இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான க்ளோகார்ட், சிறுவர்களின் வாய்ச் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக அதன் நடமாடும் பல் மருத்துவ கிளினிக்கிற்கு புத்துயிரளித்துள்ளது. சுகாதார அமைச்சுடன் இணைந்து பல் மருத்துவ கிளினிக் மற்றும் விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகள் மீண்டும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு நாடு முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச பல் பரிசோதனைகள் மற்றும் பல் தூய்மைப்படுத்துதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணம், நல்லூர் திருவிழாவில், க்ளோகார்டின் நடமாடும் பல்மருத்துவ கிளினிக் தனது விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்திருந்தது. சுகாதார அமைச்சின் பல் சிகிச்சை நிபுணர்களால் முன்னெடுக்கப்பட்ட வேடிக்கையான மற்றும் யாவரையும் ஈர்க்கும் வகையிலான விழிப்புணர்வு அமர்வை இந்த கிளினிக் முன்னெடுத்திருந்தது.

ஒவ்வொரு சிறுவரும் பல் பரிசோதனை செய்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டதோடு, அதன் பிறகு, க்ளோகார்ட் குழுவிடமிருந்து பரிசுகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன. இது, சிறந்த வாய்ச் சுகாதாரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நினைவூட்ட உதவும்.

இது தவிர, மேலதிக நிகழ்வாக க்ளோகார்டின் உருவ பொம்மையான ‘சூட்டி லேனா’ வும், சிறுவர்கள் தங்களது கிளினிக்கை ஆரம்பித்த வேளையிலும் அதன் நிறைவிலும் அவர்களுடன் விளையாடி, மகிழ்வித்தது. சிறுவர்களை மகிழ்விக்கும் அதே வேளையில், சிறந்த வாய்ச் சுகாதாரத்தை பேணுவதற்காக சிறுவர்களை ஊக்குவிக்கவும் சூட்டி லேனா தனது பங்களிப்பைச் செய்து வருகிறது.

இத்திட்டம் தொடர்பில் Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் டெரிக் அந்தனி (Derrick Anthony) கருத்து வெளியிடுகையில், “நாம் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் இதுபோன்ற பல பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறோம். இதேவேளை, கொவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட சிறிய இடைவேளைக்குப் பின்னர், க்ளோகார்ட் நடமாடும் பல் கிளினிக்கை மீண்டும் ஆரம்பிக்க முடிந்தமை தொடர்பில் நாம் பெருமையடைகிறோம். ஒரு நம்பகமான வர்த்தக நாமம் எனும் வகையில், இலங்கையை பற் குழிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்காக இந்த முயற்சிகளை நாம் முன்னெடுப்பதும், சிறந்த வாய்ச் சுகாதார பராமரிப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதும் இன்றியமையாதவைகளாக உள்ளன.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *