Hayleys Agriculture Holdings நிறுவனம், அதன் சமீபத்திய விவசாய அறுவடை தொழில்நுட்பமான Kubota DC-93G இணைந்த அறுவடை இயந்திரத்தை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. பொலன்னறுவையைச் சேர்ந்த தனது பெருமைமிகு வாடிக்கையாளரான டி சரத் ஜயரத்னவிடம் முதலாவது இயந்திரத்தை 2023 ஜூலை 27ஆம் திகதி நிறுவனம் கையளித்திருந்தது. இதன் மூலம், உற்பத்தித்திறன் மற்றும் செயற்றிறனில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஒரு மைல்கல்லை நிறுவனம் கொண்டாடுகின்றது.
அமிழ்ந்த வயல்களுக்கு ஏற்ற வகையில் செயற்படும் Kubota DC-93G இன் தன்மை, அதிக செயற்றிறனுக்கான அகலமான வெட்டை ஏற்படுத்துவதற்கான அகலம் மற்றும் சேற்று நிலங்களில் சிறந்த செயற்றிறன் ஆகியன, இலங்கையின் வயல்களுக்கு சிறந்த அறுவடை இயந்திரமாக அமைகிறது. வயலின் நிலமைகளைப் பொறுத்து, இந்த அறுவடை இயந்திரம் உச்சபட்சமாக ஒரு நாளில் 15 ஏக்கரில் அறுவடை செய்யும் திறனை கொண்டது. அதன் உறுதியான வடிவமைப்பானது, அசைக்க முடியாத நிலைக்கும் தன்மையை உறுதி செய்கிறது. இது கடுமையான சூழ்நிலையிலும் தடையின்றி அறுவடை செய்ய வழியேற்படுத்துகின்ற அதேவேளையில், நெல் அறுவடை செய்வதில் அதன் குறிப்பிடும்படியான திறனானது, ஏனைய எல்லா மாதிரிகளையும் விஞ்சி நிற்கிறது.
மேற்படி அம்சங்கள் Kubota DC-93G அறுவடை இயந்திரத்தை புரட்சிகரமானதாக ஆக்குகின்ற அதே வேளையில், உற்பத்தித்திறனை அதிகப்படுத்தி, வேலையைக் குறைக்கும் ஒரு அதிநவீன கருவியாக செயற்பட்டு விவசாயிகளை மேம்படுத்துகிறது.
இது தொடர்பில், விவசாய உபகரணப் பிரிவின் பணிப்பாளர்/BU தலைவர் சுமித் ஹேரத் தெரிவிக்கையில், “விவசாய சமூகத்திற்கு Kubota DC-93G இணைந்த அறுவடை இயந்திரத்தை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இயந்திரம் விவசாயப் பொறியியலின் உச்சத்தை பிரதிபலிப்பதோடு, ஒப்பிடமுடியாத செயற்பாடு, செயற்றிறன், நிலைமைக்கு ஏற்ற தழுவும் திறனை வழங்குகிறது. Kubota DC-93G மூலம், விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதன் மூலம் விவசாயிகளின் நீடித்த மற்றும் செழிப்பான விவசாயத்தை நோக்கிய பயணத்தில் அவர்களுக்கு இது உறுதுணையாக இருக்கிறது” என்றார்.
விவசாயத் துறையில் முன்னணியில் உள்ள Hayleys Agriculture Holdings Limited ஆனது, விவசாய சமூகத்திற்கு அவசியமான புத்தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை தொடர்கிறது. Kubota DC-93G Combine Harvester ஆனது, சிறந்த விவசாயத் தீர்வுகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக அமைகின்றது.
END