DIMO நிறுவனத்தின் கல்விப் பிரிவான DIMO Academy, அண்மையில் அதன் 32ஆவது பட்டமளிப்பு விழாவை நடாத்தியிருந்தது. இதில் German Automobile Mechatronics டிப்ளோமா மற்றும் Automobile Mechatronics சான்றிதழ் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 50 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது திறமைகளை வெளிப்படுத்திய, D.G. கசுன் இந்துஜ விக்ரமரத்ன, U.L.D. சமத் மிலிந்த குணசிங்க, சியம்பலாபிட்டியகே இஷான் பியத்ரோ சில்வா ஆகியோர் இப்பட்டமளிப்பு விழாவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றனர்.
இவ்வருடம் டிப்ளோமா பட்டம் பெற்ற சிலர், தங்களுடைய பட்டமளிப்பு விழாவிற்கு முன்னதாக 4 புகழ்பெற்ற ஜேர்மன் நிறுவனங்களில் வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டமை இங்கு விசேட அம்சமாகும். DIMO Academy ஆனது, வாகனத் துறையுடன் ஏற்படுத்தியுள்ள ஒத்துழைப்பையும் தொழில்துறையில் தொடர்ச்சியாக மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திறமையான பணியாளர்களை உருவாக்குவதற்கான அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது.
DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதான மனித வள அதிகாரியும், குழுமத்தின் கல்விப் பிரிவை மேற்பார்வையிடும் திருமதி தில்ருக்ஷி குருகுலசூரிய இது பற்றி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கையில், “DIMO Academy வழங்கும் இலவச Automobile Mechatronics சான்றிதழ் கற்கை மற்றும் மிகவும் பிரபலமான ஜேர்மன் Automobile Mechatronics டிப்ளோமா பாடநெறி ஆகியன, வாகனத் துறையில் சரியான திறன்களைக் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதில் தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளன. சர்வதேச தொழில்நுட்ப திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் வாகனத் துறையில் அவர்களது வெற்றியை எம்மால் உறுதிப்படுத்த முடியும்.” என்றார்.
DIMO Academy ஆனது, அதன் தனித்துவமான சுய-கற்றல் அணுகுமுறை மூலம், மாணவர்கள் நடைமுறை ரீதியான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அடித்தளத்தை வழங்குகிறது. அத்துடன், DIMO நிறுவனத்தின் உயர்தர வாகன சேவை மையங்கள் மற்றும் திட்டங்கள் மூலம் தொழில்துறை நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
DIMO Academy இல் கல்வித் தவணை பரீட்சைகள் உள்ளிட்ட பல்வேறு மதிப்பீடுகளும் முன்னெடுக்கப்படுவதோடு, மாணவர்களின் செயற்றிறனை மதிப்பிடுவதில் விசேட கவனம் செலுத்தப்படுகின்றது. ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனம், இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் நடத்தப்படும் சுயாதீன பரீட்சைகள் மூலம் இந்த மதிப்பீடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுகின்றன. அத்துடன் DIMO Academy இன் பயிற்றுவிப்பாளர்கள், ஜேர்மன் தரத்திற்கு ஏற்ப உயர்தர தொழில்முறை கல்வியை உறுதி செய்கிறார்கள். அதே போன்று இந்த நடைமுறைகள் DIMO Academy இன் உள்ளூர் மற்றும் சர்வதேச தரத்தை பேணுவதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.
DIMO Academy இன் பட்டதாரிகள் DIMO நிறுவனத்திலும், இலங்கை முழுவதும் அது போன்று சர்வதேச அளவில், குறிப்பாக ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, மத்திய கிழக்கு நாடுகளில் வாகனத் துறையில் பல்வேறு தொழில் வாய்ப்புகளைத் தொடர முடியும்.
1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட DIMO Academy, 600 இற்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த வாகன தொழில்நுட்ப வல்லுனர்களை வெற்றிகரமாக உருவாக்கி, அதன் மூலம் இலங்கையில் தொழிற்கல்வித் துறையை மீளமைத்துள்ளது. DIMO Academy ஆனது அதன் 34 வருட வரலாற்றில், இலங்கை இளைஞர்களுக்கு சர்வதேச தகுதிகள் மற்றும் உயர்தர தொழில்சார் கல்வியை வழங்குவதன் மூலம் அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுவூட்டி வருகிறது.