Hyperglade, Miris by Islandmom, True by Tina, Feelo ஆகிய நான்கு Hatch வணிக தொடக்கங்கள், தமது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நிதியுதவி பெற்றுள்ளன. இந்த நிதி வாய்ப்புகளில் மிக முக்கியமான விடயம் யாதெனில், அவை சிலிக்கன்வெலி (Silicon Valley) முதலீட்டாளரான (Tim Draper) ரிம் ட்ரேப்பர், Hyperglade வணிக தொடக்கத்திற்கு 350,000 அமெரிக்க டொலர்களை நிதியளித்துள்ளார். இதன் மூலம் Hatch வணிக தொடக்கங்களில் உள்ள உள்ளூர் தொழில் முனைவோரின் திறமை உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கிறது.
Hatch அதன் அடைகாத்தல் மற்றும் விரைவாக்கம் ஆகிய வணிக தொடக்கத்திற்கான திட்டங்கள் மற்றும் இணைந்த பணியிட வசதி மூலம் தொழில்முனைவோரை மேம்படுத்துகின்ற அனைத்து விடயங்களுக்கும் ஒரு மையவிசையாக திகழ்கிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் கூட்டுச் சூழலை உருவாக்குவதன் மூலம் தொழில்முயற்சியாளர்களை இணைக்க Hatch முயற்சிக்கிறது. இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு செழிப்பான வணிக தொடக்க சூழலை உருவாக்கும் இலக்கை அது கொண்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், இலங்கையின் தலைசிறந்த தொழில்முனையும் திறமையாளர்களுக்கு எவ்வாறு மீட்சிக்கான பாதையை வகுக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக, நெருக்கடிகளைச் சந்தித்த தேசத்திலிருந்து, வணிக தொடக்கங்கள் நிறைந்த தேசமாக மாறக் கூடிய ‘Sri Lanka: From Troubled Nation to Startup Nation’ எனும் தலைப்பிலான ஒரு முயற்சியை Hatch ஆரம்பித்தது. இந்த முயற்சியின் முதல் கட்டமாக, புகழ்பெற்ற சிலிக்கன்வெலியின் பலம் பொருந்திய மூலதன நிறுவனமான Draper Fisher Jurvetson நிறுவனத்தின் நிறுவுனரான ரிம் ட்ரேப்பர், கொழும்பில் உள்ள Hatch அலுவலகத்திற்கு விஜயம் செய்து Hatch வணிக தொடக்கங்களை இணைத்து, தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘Meet the Drapers’ மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு அவர்களது யோசனைகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கினார்.
அந்த வகையில், உள்ளூர் திறமையாளர்கள் அங்கீகாரத்தை பெறுவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. ஆம் BlockChain மற்றும் Web3 இடமாற்ற தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற Hatch சமூகத்திலுள்ள வணிக தொடக்க நிறுவனமான Hyperglade ஆனது, Draper Associates யிடமிருந்து 350,000 அமெரிக்க டொலர் (ரூ. 11.2 கோடி) நிதியைப் பெற்றுள்ளளது. Hyperglade ஆனது இதற்கு முன்னதாக இலங்கையின் முதலாவது தனியான NFT ஏலத்தை நடத்தியதன் மூலம் பிராந்தியத்தில் முன்னோடி எனும் ஒரு அலையை உருவாக்கியது. இந்த ஏலமானது Hatch சமூகத்திலுள்ள மற்றுமொரு உறுப்பினரின் ஒத்துழைப்புடன், Hatch இனால் மேற்கொள்ளபட்டது. இது வளர்ந்து வரும் வணிக தொடக்கங்களுக்கு Hatch இனது கூட்டுச்சூழல் நன்மைகளை மேலும் நிரூபித்துள்ளது.
Hyperglade யில் Draper Associates இன் முதலீடானது, Hatch தனது பல்வேறு வணிக தொடக்கங்களுக்கான அடைகாத்தல் முன்முயற்சிகள் மூலம் அதனை வளர்ப்பதற்கான பணியை செய்து வருவதோடு, இலங்கையில் குறிப்பிடத்தக்க வணிக தொடக்க திறனுக்கான வலுவான ஒத்துழைபை வழங்கி செயற்படுகிறது. இப்பிரிவில் அதன் முக்கியமான திட்டங்களில் ஒன்றே AccelerateHER ஆகும். இது அமெரிக்க வெளியுறவுத்துறையுடன் இணைந்து செயற்படுத்தப்படுகிறது. AccelerateHER என்பது பெண் வணிக நிறுவுனர்களுக்கு அவர்களின் வியாபாரத்தை வளர்த்துக் கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட, இலங்கையில் பெண்களை மையமாகக் கொண்ட ஒரு ஊக்குவித்தல் திட்டமாகும். AccelerateHER திட்டத்துடன், Hatch ஆனது அதன் பாலின ஸ்மார்ட் நிதியான HERCapital மூலம் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்கிறது. இது தொடர்பில், ஞானம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியும் Hatch இன் இணை நிறுவுனருமான பிருந்தா செல்வதுரை கருத்து வெளியிடுகையில், “HERCapital ஆனது பெண்கள் தங்கள் வணிகங்களை நடாத்துவதில் எதிர்கொள்ளும் தனியான சவால்களை சமாளிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் வணிக தொடக்க தொகுதிகளில் பாலின ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்படுகிறது” என்றார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, AccelerateHER திட்டத்தின் முதல் குழுவிலிருந்து இரண்டு பட்டதாரிகள் HERCapital இலிருந்து நிதியுதவியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். பெண் தொழில்முனைவோருக்கான முதலீட்டுச் சூழல் இல்லாமை காரணமாக, நாட்டில் மக்கள்தொகையில் 50% இற்கும் அதிகமானோர் பெண்களாக இருந்த போதிலும், நாட்டின் தொழில்முனைவோரில் 25% மாத்திரமே பெண்களாக உள்ளனர். Hatch யின் வணிக விரைவாக்கல் திட்டம் மற்றும் வணிக ஆலோசனைகள் மூலம், அதிகளவான பெண் தொழில்முனைவோரை நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிக்க உதவும் ஒரு உள்ளீர்க்கப்பட்ட சூழல் ஏற்படுத்தப்படுகிறது என்பதை இந்த மைல்கல் நிரூபிக்கிறது.
இலங்கையில் வணிக தொடக்க தொகுதிகளை மேம்படுத்தும் பணியின் அடிப்படையில், Hatch டிஜிட்டல் தொழில்முயற்சியாளர்களின் தாயகமாகவும் உள்ளது. அவர்களில் ஒருவராக, தனித்துவமான சோதனை பொதிகளை வழங்கும் Feelo வணிக தொடக்கத்தின் நிறுவுனர் உள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த வணிக முயற்சியானது கணிசமான வாடிக்கையாளர் தளத்தைப் பெற்றுள்ளதோடு, அதன் முதலாவது முதலீட்டாளர் கூட்டாண்மையை, அது வணிகத்தில் இணைந்து நான்கு மாதங்களில் அறிவித்துள்ளது. Feelo வின் இணை நிறுவுனரும் அதன் பிரதம நிறைவேற்றதிகாரியுமான Ondrej Lang, முழு தெற்காசிய சந்தையிலும் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு இலங்கை நிறுவனத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு தொழில்முனைவோருக்கு, நிலைபேறான வணிக வளர்ச்சியை அடைவதற்கு அவசியமான திறன்கள் மற்றும் வளங்களைப் பெறுவதற்காக, சிறந்த வளர்ச்சிச் சூழலை வழங்குவதன் மூலம் அதன் செயற்றிறனை நிரூபிக்கும் Hatch இலிருந்து உருவான சில வெற்றிக் கதைகளே இவையாகும். சிலிக்கன்வெலி ஜாம்பவான்களிடமிருந்து நிதியுதவி பெறுவதை எளிதாக்குவது முதல் பெண் தொழில்முனைவோருக்கு தங்கள் வணிகங்களை உலகளவில் கொண்டு செல்வதற்கான பாலத்திற்கான மூலதனத்தை வழங்குவது வரை, உள்நாட்டு திறமையாளர்களிடையே உலகளாவிய மனநிலையை வளர்ப்பதில் Hatch பெருமை கொள்கிறது.