பிரத்தியேக கூந்தல் பராமரிப்பு அனுபவத்திற்காக நடமாடும் ‘Hair Play Studio’ வசதியை அறிமுகப்படுத்தும் குமாரிகா

Hemas Consumer Brands நிறுவனத்தின் இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான குமாரிகா, ‘Hair Play Studio’ எனும் தனது நடமாடும் சலூன் வாகனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கூந்தல் பராமரிப்பு அனுபவங்களை நேரடியாகக் கொண்டு வரும் ஒரு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. குமாரிகாவின் புதிய ஷாம்பு மற்றும் கண்டிஷனரின் பலன்களை அனுபவிப்பதற்கும், அனைத்து இலங்கையர்களின் கூந்தல் வகைகளுக்கும் பொருந்தும் வகையிலும் மிகுந்த கவனத்துடன்  இந்த ‘Hair Play’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரத்தியேக அனுபவமானது, வாடிக்கையாளர்கள் தமது கூந்தல் பராமரிப்பு தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் குதூகலமான அமர்வுகளை கொண்டதாக அமைகிறது. குமாரிகா Hair Play Studio அனுபவமானது, தனிப்பயனாக்கப்பட்ட கூந்தல் பகுப்பாய்வுடன் ஆரம்பமாகிறது. இதில் ஒரு தொழில்முறை பகுப்பாய்வாளர் வாடிக்கையாளரின் கூந்தலை பகுப்பாய்வு செய்து, அவர்களின் கூந்தல் பிரச்சினைக்கு மிகவும் பொருத்தமான குமாரிகா தயாரிப்பைப் பரிந்துரைக்கிறார். அதன் பின்னர், பரிந்துரைக்கப்பட்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் ஹேர் வொஷ் அனுபவத்தை பெறுவார். இது அத்தயாரிப்பின் முதன் முறை பெறும் உணர்வை அவர்களுக்கு வழங்குகிறது.

Hair Play Studio அனுபவத்திற்கு விசேட செயற்பாட்டை இணைக்கும் வகையில், தங்கள் பெயர் பொறிக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட 80ml அல்லது 180ml குமாரிகா ஷாம்புவை கொள்வனவு செய்யும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். இந்த முயற்சியானது நுகர்வோரால் பெரிதும் பாராட்டுக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது. ஹேர் வொஷைத் தொடர்ந்து, மிகவும் திறமையான ஒப்பனையாளர் ஒருவர் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஹேர் ஸ்டைலை உருவாக்குவார்.

குமாரிகாாவின் புதிய தயாரிப்புகளில், Damage Repair, Hydrating, Strong Hair, Healthy & Black ஆகிய ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர் வகைகள் உள்ளடங்குகின்றன. வாடிக்கையாளர்களின் சேதமடைந்த கூந்தல், வறண்ட அல்லது உதிரும் கூந்தல், பலவீனமான மற்றும் உடையும் கூந்தல், செழிப்பற்ற கூந்தல் போன்றவற்றுக்கான தீர்வாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு ஸ்டைலை முயற்சி செய்யவும், அனுபவத்தை பெறவும் இது வாய்ப்பளிக்கிறது. ஹேர் ஸ்டைலிங் கருவிகள் காரணமான வெப்பம், பல்வேறு ஹேர் ட்ரீட்மென்ட்கள், சூழல் மூலமான மாசு அல்லது வானிலை போன்ற விடயங்களால் கூந்தலுக்கு ஏற்படும் சேதங்கள் பற்றி அவர்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. ஹேர் ஒயில்கள், ஷாம்புகள், கண்டிஷனர்கள், ஹேர் சேரம் ஆகிய குமாரிகா வர்த்தகநாமத்தின் கீழ் காணப்படும் தயாரிப்புகளுடன் இந்த புதிய தயாரிப்புகள் இணைகின்றன.

BMICH இல் இடம்பெற்ற Colombo Shopping Festival நிகழ்வின் போது இந்த பிரசாரத்தை குமாரிகா ஆரம்பித்திருந்ததோடு, நாட்டின் மேல், தென், மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட இலங்கை முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு இந்த உற்சாகமூட்டும் அனுபவத்தை விரைவில் கொண்டு வர அது திட்டமிட்டுள்ளது. பல்வேறு பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் சுய வெளிப்பாட்டிற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பிரத்தியேகமான, தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்குவதே இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.

Hemas Consumer Brands இன் கூந்தல் பராமரிப்பு பிரிவு முகாமையாளர் ஹிருஷி பெனாண்டோ இது பற்றித் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்கள் அவர்களின் கூந்தலுக்கு ஏற்ற தனித்துவமான அனுபவத்தை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ‘Hair Play’ எண்ணக்கருவின் மூலம் குமாரிகாவின் இயற்கையான, மிக உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளின் ஆதரவு தங்களுக்கு உள்ளது என்பதை உணர்ந்து, தங்களுக்கு ஏற்ற கூந்தல் பாணிகளை எவ்வித பயமும் இன்றி பெற்று, தங்களை சிறப்பாக வெளிப்படுத்திக் கொள்வதற்கான தன்னம்பிக்கையை மக்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும். இவை வெறுமனே சாதாரண கூந்தல் பராமரிப்பு பொருட்கள் அல்ல, இலங்கையர்களின் கூந்தல் தன்மைக்கேற்ப வடிவமைக்கப்பட்டு, அவை எவ்வகையாக இருந்தாலும் அவற்றிற்கு பாதுகாப்பு மற்றும் போசணையை உறுதி செய்யும் தீர்வுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.” என்றார்.

பல்வேறு சிகை அலங்காரங்கள் மூலம் சுய வெளிப்பாட்டை பிரதிபலிக்கச் செய்யும் இந்த புதிய ‘Hair Play’ அனுபவத்தை பெற வாடிக்கையாளர்களுக்கு குமாரிகா அழைப்பு விடுக்கிறது. இயற்கையான மூலப்பொருட்களால் தயாரிக்ப்பட்ட, இவ்வர்த்தகநாமத்தின் தயாரிப்புகள் கூந்தலை வலுப்படுத்தி பாதுகாப்பதோடு, வாடிக்கையயாளர்கள் நம்பிக்கையுடன் ஸ்டைலாக மாற உதவுகிறது. இப்பிரசாரத்தின் ஒரு அங்கமாக, இந்த நடமாடும் வாகனத்தில் TikTok வீடியோக்களை உருவாக்குதல், தனிப்பயனாக்கப்பட்ட செயற்பாடுகள், ஈடுபாட்டுடனான செயற்பாடுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இளைய தலைமுறையினருடன் வலுவான இணைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட, வேடிக்கை, விநோத செயற்பாடுகளில் அவர்கள் பங்குபற்ற வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பரந்துபட்ட  தயாரிப்புகள் முதல் இது போன்ற திட்டங்கள் மூலம், தனிப்பயனாக்கப்பட்ட பெயர் பொறிக்கப்பட்ட ஷாம்பு போத்தல்களை பெறுதல், தங்களது படைப்பாற்றல், தனித்துவத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் மூலம், இலங்கை நுகர்வோருக்கு மிகவும் பொருத்தமான நம்பகமான, இயற்கையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கூந்தல் பராமரிப்பு தீர்வாக தொடர்ச்சியாக தனது நிலையை குமாரிகா உறுதிப்படுத்தி வருகிறது.

Hemas Consumer Brands பற்றி

கடந்த 60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளராக திகழும் Hemas Consumer Brands நிறுவனம், குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்காக வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தங்களை நிறுவ உதவிய நுகர்வோரை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் நிறுவனம் பெருமை கொள்கிறது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *