பிரபல realme நம்பர் சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனை 40 மில்லியனை கடந்தது

உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான realme, இலங்கையில் அதன் முதலாவது வருட பூர்த்தியை அண்மையில் கொண்டாடியது. அந்த வகையில் அதன் உலகளாவிய ரீதியில் பிரபலமான realme “Number smartphone” யைடக்கத்தொலைபேசி வரிசையானது, 40 மில்லியன் எனும் விற்பனை மைல்கல்லை பதிவு செய்துள்ளது.

பிரபலமான realme நம்பர் ஸ்மார்ட்போன் தொடரானது, கடந்த 2018 மே மாதம் ‘realme 1’ தொடரின் அறிமுகத்துடன் வெளிவந்தது, இது 6 அங்குல திரை மற்றும் Android 8.1 இயங்குதளத்தில் இயங்கியது. அதன்பின்னர் ‘realme 2’ (2018 செப்டெம்பரில் அறிமுகம்), ‘realme 3’ (2019 மார்ச்), ‘realme 4’ (2019 மே), ‘realme 5’ (2019 ஓகஸ்ட்), ‘realme 6’ (2020 மார்ச்), ‘realme 7’ (2020 ஒக்டோபர்) இலும் என தொடர்ந்து பல்வேறு நம்பர் தொடர்கள் வெளியிடப்பட்டதுடன், Android 11 இயங்குதளத்தில் இயங்கும் இத்தொடரின் சமீபத்திய வெளியீடான ‘realme 8’ ஆனது 2021 மார்ச்சில் வெளியிடப்பட்டது.

அந்த வகையில், realme Number தொடரின் ஒட்டுமொத்த உலகளாவிய விற்பனையானது (realme 1 முதல் realme 8 வரை), 2022 ஜனவரி நடுப்பகுதியில் 40 மில்லியனை கடந்துள்ளது.

realme Sri Lanka – சந்தைப்படுத்தல் தலைவர் Shawn Yan இது தொடர்பில் தெரிவிக்கையில், ‘Dare to Leap’ எனும் உயிர்நாடியுடனான realme யின் பயணத்தில் இது ஒரு உலகளாவிய மைல்கல்லாகும். நம்பர் தொடரின் ஒரு முக்கியமான சிறப்பு யாதெனில், realme 2018 இல் இத்துறையில் நுழைந்த அதே ஆண்டிலேயே இந்த தொடரும் வெளிவந்திருந்தது. அத்துடன் உலகளாவிய ரீதியில் ‘New Age Smartphone Families (நவீன கால ஸ்மார்ட்போன் குடும்பங்கள்) சகாப்தமும் 2018 இலேயே ஆரம்பித்தது. இந்த நம்பர் தொடரின் காரணமாகவே இப்புதிய யுகமானது, realme யின் பக்கம் திரும்பியது. 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன் மாதிரிகள் ‘நவீன கால ஸ்மார்ட்போன் குடும்பங்கள்’ வகையைச் சேர்ந்தது என்பதுடன் realme உடன் இணைந்தவாறு பல்வேறு வர்த்தகநாமங்களும் நவீன கால ஸ்மார்ட்போன் மாதிரிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தின. 2021ஆம் ஆண்டு நிலவரப்படி ‘நவீன கால ஸ்மார்ட்போன் குடும்பங்கள்’ வகையின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகளுக்கமைய, நம்பர் தொடரானது 2021 மூன்றாவது காலாண்டில் 4ஆவது இடத்தில் உள்ளது. நவீன கால நம்பர் தொடரில் realme இற்கு மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், realme யின் உலகளாவிய சாதனையில் இந்தத் தொடரின் பங்ககாக, முழு ஸ்மார்ட்போன் வரலாற்றிலும் 100 மில்லியன் சாதனங்களை சந்தைக்கு வெளியிட்ட அதிவேக வர்த்தகநாமம் எனும் பெயரை அது அடைந்துள்ளது.

realme பற்றி:

realme ஆனது வளர்ந்து வரும்  உலகளாவிய நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாகும். இது அதிநவீன தொழில்நுட்பங்களை மிக இலகுவாக அடையும் வகையிலான உற்பத்திகளை வழங்கி, ஸ்மார்ட்போன் மற்றும் AIoT சந்தையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் வாழ்க்கைமுறைகளுக்கு அவசியமான பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உயர்ந்த அம்சங்களை உள்ளடக்கியவாறு, காலத்திற்கு ஏற்ற போக்கில், சிறப்பான வடிவமைப்புகளுடன், realme இளம் நுகர்வோருக்கு கட்டுப்படியாகும் விலையில் வழங்குகிறது. 

2018 ஆம் ஆண்டில் Sky Li இனால் நிறுவப்பட்டு, அதன் “Dare to Leap” எனும் உயிர் நாடிக்கு ஏற்ப, realme ஆனது தற்போது உலகின் 7ஆவது மிகப் பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளது. 2021ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் உலகளாவிய ரீதியில் சீனா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, உள்ளிட்ட 61 சந்தைகளில் realme தனது கால்தடத்தை பதித்துள்ளதுடன், 100 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களையும் அது தனதாக்கியுள்ளது. 2021ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் realme ஆனது Counterpoint இன் ஸ்மார்ட்போன் தரவரிசையில் முதல் 6 இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளது.

#ENDS#

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *